search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா இ.கே.யு.வி.100
    X
    மஹிந்திரா இ.கே.யு.வி.100

    மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்

    மஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இ.கே.யு.வி.100 காட்சிக்கு வைக்கப்பட்டது. 

    மஹிந்திராவின் புதிய இ.கே.யு.வி.100 கார் இந்திய சந்தையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் கோயன்கா தெரிவித்திருக்கிறார். மேலும் இதன் விலை ரூ. 9 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    மஹிந்திரா இ.கே.யு.வி.100

    மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலின் தோற்றம் பார்க்க பெட்ரோல் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் மேம்பட்ட கிரில், ஹெட்வொர்க் மற்றும் டெயில்லைட்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. 

    மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலில் 40 kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம். இது 53 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 15.9 kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக மஹிந்திரா இ.கே.யு.வி.100 இருக்கும். இதன் விலை ஒவ்வொரு மாநிலத்தின் சலுகைகளுக்கு ஏற்ப மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×