என் மலர்
பைக்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எக்ஸ்எல் 100 வின்னர் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்எல் 100 வின்னடர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 49,599 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்எல் 100 ஐ டச் ஸ்பெஷல் எடிஷன் மாடலை விட ரூ. 400 அதிகம் ஆகும்.
புதிய வின்னர் எடிஷன் பிரத்யேகமாக டிலைட் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் இது டூயல் டோன், பெய்க் மற்றும் டேன் நிற ஸ்ப்லிட் சீட் செட்டப் கொண்டிருக்கிறது. இத்துடன் எக்ஸ்எல் 100 வின்னர் எடிஷன் குரோம் எக்சாஸ்ட் ஷீல்டு, குரோம் மிரர்களை கொண்டுள்ளது.

இந்த மொபெட் 99.7சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 4.3 பிஹெச்பி பவர், 6.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இது வையர்-ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது. இதன் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஹோண்டா கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது கிரேசியா 125சிசி ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய வேரியண்ட் கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மேம்பட்ட கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது.
அதன்படி புது வேரியண்ட்டில் ஸ்போர்ட்ஸ் எடிஷன் பேட்ஜ், ரேசிங் ஸ்டிரைப்கள், ரெட்-பிளாக் நிற சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பியல் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஹோண்டா கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஸ்கூட்டர் விலை ரூ. 82,564 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தோற்றம் தவிர புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில் கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஸ்கூட்டரிலும் ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே 124சிசி, சிங்கில் சிலிண்டர், பிஎஸ்-6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 8.14 பிஹெச்பி பவர், 10.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கவாசகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி, இந்திய சந்தையில் தனது மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
கவாசகி நிறுவனத்தின் கேஎல்எக்ஸ் 110, கேஎல்எக்ஸ் 140, கேஎக்ஸ் 100, டபிள்யூ800, இசட்650, வெர்சிஸ் 650 மற்றும் வல்கன் எஸ் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சலுகைக்கு தேர்வான மாடல்களுடன் தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. இதை கொண்டு மாடல்களின் விலையை குறைக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்கள் வாங்கும் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான அக்சஸரீக்களையும் தள்ளுபடி கூப்பன் கொண்டு வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர்கள் அனைத்து கவாசகி விற்பனை மையங்களிலும் செல்லுபடியாகும்.
கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் வெர்சிஸ் 1000 போன்ற மாடல்களுக்கும் முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான அட்வென்ச்சர் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாகனத்தின் விலையை குறைக்கவோ அல்லது அக்சஸரீ வாங்க முடியும்.
சுசுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சுசுகி நிறுவனம் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மோட்டார்சைக்கிள் மாடலை ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நேக்கட் ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மாடல் டிரைடன் புளூ மெட்டாலிக் மற்றும் டைட்டன் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், 4-வால்வு DOHC லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 14.8 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மற்றும் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின் இதே செயல்திறன் வழங்கி வருகின்றன.
புதிய சுசுகி மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் பஜாஜ் அவெஞ்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவெஞ்சர் சீரிஸ் மோட்டர்சைக்கிள் மாடல்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. அதன்படி அவெஞ்சர் குரூயிஸ் 220 மாடல் புதிய விலை ரூ. 1,24,635 ஆகவும் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடல் விலை ரூ. 1,02,592 என மாறி இருக்கிறது.
முன்னதாக இரு மாடல்களின் விலை முறையே ரூ. 1,22,630 என்றும் ரூ. 1,02,592 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. விலை உயர்வு தவிர இரு மோட்டார்சைக்கிள்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அவெஞ்சர் 220 குரூயிஸ் மாடலில் 220சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 18.76 பிஹெச்பி பவர், 17.55 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160சிசி, ஏர்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 14.79 பிஹெச்பி பவர், 13.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
அவெஞ்சர் சீரிஸ் மட்டுமின்றி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர், டாமினர் சீரிஸ், பிளாட்டினா 100, பிளாட்டினா 110 ஹெச், சிடி100 மற்றும் சிடி 110 போன்ற மாடல்களின் விலையையும் உயர்த்தி உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றம் செய்யப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாக்ஷிப் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் விலை ரூ. 1997 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,99,755 எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.
பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிளில் 373.27சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.42 பிஹெச்பி பவர், 35 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் அப்சைடு டவுன் போர்க், மல்டி-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 320 எம்எம் டிஸ்க், பின்புறம் 230 எம்எம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளில் முழுக்க எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-பேரெல் எக்சாஸ்ட் மற்றும் பிளாக், கிரீன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ரூ. 15.96 லட்சம் விலையில் அறிமுகமாகி இருக்கிறது.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15.96 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
புதிய 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது. மாற்றங்களை பொருத்தவரை இந்த மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் டார்க்னெஸ் பிளாக் மெட்டாலிக் நிறத்திலும், டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் பியல் கிளேர் வைட் டிரைகலர் நிறத்திலும் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் 1084சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 98 பிஹெச்பி பவர், 103 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பாதுகாப்பிற்கு இந்த மாடலில் வீலி கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், ரியர் லிப்ட் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் தில இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் மோட்டார்சைக்கிள் மாடல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வரிசையில், ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
விலை உயர்வின்படி ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடல் துவக்க விலை ரூ. 1,27,284 முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,42,895 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் 346சிசி, சிங்கிள் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புல்லட் 350 மோட்டார்சைக்கிளில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின்-சைடெட் ஸ்ப்ரிங், முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனம் குறைந்த விலை ஜூப்பிட்டர் புது வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஷீட் மெட்டல் வீல் வேரியண்ட் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 63,497 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய வேரியண்ட் இதுவரை வெளியாகி இருக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடல்களை விட குறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கிறது. மேலும் புது வேரியண்ட் தவிர சந்தையில் விற்பனையாகும் ஜூப்பிட்டர் மாடல்கள் விலை ரூ. 1645 முதல் ரூ. 2770 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

டிவிஎஸ் ஜூப்பிட்டர் புது வேரியண்ட் 109.7 சிசி, ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 7.3 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 6 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டிருக்கிறது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இருபுறங்களில் டிரம் பிரேக் மற்றும் முன்புறம் டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மாடல் விலை 2021 ஆண்டில் முதல் முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது டியோ ஸ்கூட்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா டியோ மாடல்- ஸ்டான்டர்டு, டீலக்ஸ் மற்றும் ரெப்சல் எடிஷன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தற்போதைய விலை உயர்வின் படி டியோ எஸ்டிடி வேரியண்ட் ரூ. 62,229 என மாறி இருக்கிறது. இதன் டிஎல்எக்ஸ் மற்றும் ரெப்சல் எடிஷன் முறையே ரூ. 65,627 மற்றும் ரூ. 68,127 என மாறி இருக்கின்றன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு தவிர இந்த ஸ்கூட்டரில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 109 சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 7.6 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்திய சந்தையில் ஹோண்டா டியோ மாடல் டிவிஎஸ் ஜூப்பிட்டர் 110, ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா சிபி350 மோட்டார்சைக்கிள் DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்சமயம் விலை உயர்வின் படி இவற்றின் விலை முறையே ரூ. 1,86,50 என்றும் ரூ. 1,92,500 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி நிறுவனம் 2021 இசட்650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் நிறம் மட்டும் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மாடல் மெட்டாலிக் ஸ்பார்க் பெயின்டிங் மற்றும் ரிம்களில் புளோரசன்ட் கிரீன் நிறம் பூசப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 2021 இசட்650 மாடல் துவக்க விலை ரூ. 6,04,000, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் புல் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், அன்டர்பெல்லி எக்சாஸ்ட், ப்ளூடூத் சார்ந்த 4.3 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன், பெட்டல் டைப் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் 649சிசி, இன்லைன் 2-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜின் 67.3 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






