என் மலர்tooltip icon

    பைக்

    அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் வினியோகம் இந்திய சந்தையில் துவங்கி உள்ளது.


    அப்ரிலியாவின் புது பிரீமியம் ஸ்கூட்டர் எஸ்எக்ஸ்ஆர் 160 பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேக்சி ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 1.26 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    அறிமுகமாகி முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 வினியோகம் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனியார் விற்பனை மையம் புது ஸ்கூட்டர் வினியோகத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டு இருக்கிறது.

     அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160

    புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் ஏர்-கூல்டு சிங்கில் சிலிண்டர் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 160 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.8 பிஹெச்பி பவர் மற்றும் 11.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    கவாசகி நிறுவனத்தின் 2021 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    கவாசகி நிறுவனம் 2021 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் 2021 கவாசகி வெர்சிஸ் 1000 மாடல் விலை ரூ. 11.19 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இது 2020 வெர்சிஸ் 1000 மாடலின் விலையை விட ரூ. 20 ஆயிரம் வரை ஆகும். புதிய 2021 கவாசகி வெர்சிஸ் 1000 மாடலில் 1043சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118.2 பிஹெச்பி பவர், 102 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

     கவாசகி வெர்சிஸ் 1000

    இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. புதிய 2021 வெர்சிஸ் 1000 மாடலில் 5 ஆக்சிஸ் போஷ் ஐஎம்யு சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், 2 பவர் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    2021 கவாசகி வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளில் புல் எல்இடி ஹெட்லேம்ப், 21 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் டூயல் டோன் நிறங்கள்- கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரு ஸ்கூட்டர் மாடல்கள் விலையை மாற்றி உள்ளது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்கூட்டர் மாடல்கள் விலையை மாற்றி உள்ளது. அதன்படி ஹீரோ டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வின் படி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பேஸ் மாடல் விலை ரூ. 61950 என துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 63450 என மாறி இருக்கிறது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 சீரிஸ் மாடல்களின் விலையில் மட்டும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     ஹீரோ டெஸ்டினி 125

    ஹீரோ டெஸ்டினி 125 மாடல் தற்சமயம் ரூ. 66960 என்றும் டெஸ்டினி 125 அலாய் வீல் மாடல் விலை ரூ. 70450 என மாற்றப்பட்டு உள்ளது. இதேபோன்று ஹீரோ பிளெஷர் பிளஸ் பேஸ் வேரியண்ட் ரூ. 57300 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 61950 என மாறி இருக்கிறது.

    தற்சமயம் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் ஸ்கூட்டர்களின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக இவை அனைத்தும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டன.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 2020 டிசம்பர் மாத விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் 2020 டிசம்பர் மாத விற்பனையில் 13 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் 1.76 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது.

    முன்னதாக 2019 டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 1.57 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2020 டிசம்பரில் டிவிஎஸ் நிறுவனம் 81,327 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது. இது 2019 டிசம்பருடன் ஒப்பிடும் போது 39 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 

     டிவிஎஸ் ஸ்கூட்டர்

    2019 டிசம்பரில் டிவிஎஸ் நிறுவனம் 58,375 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் விற்பனை 2019 டிசம்பருடன் ஒப்பிடும் போது 27 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    ஸ்கூட்டர் விற்பனை பொருத்தவரை 2019 டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 74,716 யூனிட்களையும், 2020 டிசம்பரில் 77,705 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் என்டார்க் 125 போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டிசம்பர் 2020 விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. மேலும் வருடாந்திர விற்பனை விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 2020 வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4,47,335 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. 

    2019 டிசம்பரில் ஹீரோ மோட்டோகார்ப் 4,24,845 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4,15,099 மோட்டார்சைக்கிள்களையும் 32,236 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து இருக்கிறது.

     ஹீரோ மோட்டார்சைக்கிள்

    அக்டோபர் முதல் டிசம்பர் 2020 வரையிலான காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 18.45 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனம் 15.41 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் ஹீரோ நிறுவனம் 19.7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

    கடந்த ஆண்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களை புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்து வெளியிட்டது. 

    ஹோண்டா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது யுனிகான் 150சிசி மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்த ஆண்டு இறுதி சலுகைகளின் அங்கமாக அமைந்து உள்ளது.

    புதிய அறிவிப்பின் படி ஹோண்டா யுனிகான் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்த மாத தவணை திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     ஹோண்டா யுனிகான்

    மாத தவணை சலுகையை பெற கூடுதல் ஆவணங்கள் மற்றும் வங்கி சார்ந்த நடைமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இந்த திட்டத்தில் முன்பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. கார்டு சார்ந்த மாத தவணை முறை வசதி பைன் லேப்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா யுனிகான் தவிர சிடி110 டீலக்ஸ், ஹார்னெட் 2.0, எஸ்பி125, ஷைன் மற்றும் எக்ஸ்-பிளேடு போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் இதேபோன்ற சலுகை முன்னதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆக்டிவா மற்றும் கிரேசியா போன்ற ஸ்கூட்டர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
    பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


    பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்து இருக்கிறார்.

    தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்த திட்டம் சில மாதங்கள் தாமதமாக துவங்கி இருப்பதாக அவர் மேலும் தெவிரித்தார். முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் 2022 ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், தற்சமயம் இந்த மாடல் 2023 ஆண்டு அறிமுகமாகும் என அவர் தெரிவித்தார்.

     பஜாஜ் ஆட்டோ

    இரு நிறுவனங்கள் இந்த மோட்டார்சைக்கிள் பணிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 99 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இதன் விற்பனை மற்றும் விளம்பர பணிகளை பஜாஜ் மேற்கொள்ள இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு நிறுவன மாடல்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிபி350 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
    டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 850 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதக தகவல் வெளியாகி உள்ளது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய டைகர் 850 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியீட்டிற்கு முன் டிரையம்ப் டைகர் 850 மோட்டார்சைக்கிள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.

    புதிய மோட்டார்சைக்கிள் விலை தவிர டிரையம்ப் டைகர் 850 மாடலின் விவரங்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இது அந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

     டிரையம்ப் மோட்டார்சைக்கிள்

    இது என்ட்ரி லெவல் டைகர் 900 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் காரணமாக தோற்றத்தில் இது டைகர் 900 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாடலில்  புதிய கிராபிக்ஸ், இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய டிரையம்ப் டைகர் 850 மோட்டார்சைக்கிளில் 888சிசி லிக்விட் கூல்டு இன்-லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 82 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. 
    ஹோண்டா நிறுவன மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி எஸ்பி125, ஷைன் மற்றும் கிரேசியா மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இவை தள்ளுபடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு கவர்ச்சிகர நிதி சலுகை உள்ளிட்ட வடிவங்களில் வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட மாடல்களை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் மாத தவணை மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

     ஹோண்டா ஷைன்

    மேலும் நிதி சலுகையுடன் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதாக ஹோண்டா அறிவித்து இருக்கிறது. கார்டு சார்ந்த மாத தவணை வசதி பைன் லேப்ஸ் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

    இதனால் மாத தவணை சலுகையை பெற கூடுதல் ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டிய அவசியம் இருக்காது.
    சுசுகி நிறுவனத்தின் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    சுசுகி நிறுவனம் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மோட்டார்சைக்கிள் மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் யூரோ 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாகி இருக்கிறது. அப்டேட்களை பொருத்தவரை 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    புதிய நிறம் மட்டுமின்றி இந்த மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. நிறம் தவிர இந்த மாடலின் தோற்றத்தில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

     2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750

    2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 ஏபிஎஸ் மாடல் பியல் பிரிலியண்ட் வைட் மற்றும் சாம்பியன் எல்லோ நம்பர் 2 நிறத்திலும் ஏபிஎஸ் இல்லாத மாடல் மெட்டாலிக் ஊர்ட் கிரே நம்பர் 3 மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    சுசுகியின் புதிய 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மோட்டார்சைக்கிள் ஒற்றை ஹெட்லைட், ஃபேங் வடிவ டிஆர்எல்கள், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மஸ்குலார் ஸ்டைலிங், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அப்சைடு டவுன் கேவைபி முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் யூரோ 4 விதிகளுக்கு பொருந்தும் 749சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 113 பிஹெச்பி பவர், 81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய Meteor 350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய Meteor 350 குரூயிசர் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை நவம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிள் 7031 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் நவம்பர் 2020 விற்பனையில் கிளாசிக் 350 மாடலுக்கு அடுத்தப்படி அதிகம் விற்பனையான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பதிய Meteor 350 பெற்று உள்ளது. இது புல்லட் 350 மற்றும் எலெக்ட்ரா 350 மாடல்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     ராயல் என்பீல்டு Meteor 350

    எலெக்ட்ரா, புல்லட், Meteor மற்றும் கிளாசிக் என ராயல் என்பீல்டு நிறுவனம் தற்சமயம் நான்கு மாடல்களை 350சிசி பிரிவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் அனைத்து மாடல்களிலும் மொத்தமாக 56,494 யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. இதில் கிளாசிக் 350 மாடல் மட்டும் 69 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து புதிய Meteor 350 மாடல் 12 சதவீத விற்பனையை பதிவு செய்து இருக்கிறது. புல்லட் மற்றும் எலெக்ட்ரா மாடல்கள் முறையே 11 சதவீதம் மற்றும் 6 சதவீத பங்குகளை கடந்த மாதம் பெற்று இருந்தன.

    சிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 800 எம்டி மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான சிஎப்மோட்டோ நிறுவனம் தனது 800 எம்டி அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இதன் ஆப்-ரோடு வெர்ஷன் வையர்-ஸ்போக் வீல்கள், டூயல் ஸ்போர்ட் டையர்களை கொண்டிருக்கிறது. சிஎப்மோட்டோ 800 எம்டி மாடல் 790 அட்வென்ச்சர் மாடலை சார்ந்து உருவாகி இருக்கிறது. இதில் 799சிசி, எல்சி8 பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 95பிஹெச்பி பவர் வழங்குகிறது. எனினும், சிஎப்மோட்டோ 800 எம்டி மாடலின் செயல்திறன் வேறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் சிஎப்மோட்டோ 800 எம்டி ஸ்போர்ட்ஸ் மாடலில் டூயல் எல்இடி ஹெட்லைட்கள், டால் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
    ×