என் மலர்tooltip icon

    பைக்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிள் அசத்தல் சலுகையில் கிடைக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிளுக்கு ஆண்டு இறுதி சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி எக்ஸ்டிரீம் 160 ஆர் வாங்குவோருக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான போனஸ் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய மோட்டார்சைக்கிளை எக்சேன்ஜ் செய்யும் போது பெற முடியும்.

    எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி சலுகைகள் ஒன்றாக பயன்படுத்த முடியாது. மேலும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டும் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது. எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிளில் 163சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

     ஹீரோ எக்ஸ்டிரீம் 160 ஆர்

    இது 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை விரைவில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது எடை குறைந்த மோட்டார்சைக்கிள் ஆகும். 

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிள் முன்புற டிஸ்க் மற்றும் டூயல் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.02 லட்சம் மற்றும் ரூ. 1.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    பியாஜியோ நிறுவனத்தின் புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.


    பியாஜியோ நிறுவனம் 2020 எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் ஸ்கூட்டரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்கூட்டர் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.

    அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்சி ஸ்கூட்டர் இந்திய சந்தையில் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்த ஸ்கூட்டர் முன்புறம் ஆர்எஸ்660 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் எல்இடி ஹெட்லேம்ப், கூர்மையான கோடுகளை கொண்டிருக்கிறது.

    புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் வைட், புளூ, பிளாக் மற்றும் ரெட் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் 160சிசி, 3 வால்வு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் முந்தைய எஸ்ஆர் 160 மாடல் வழங்கும் செயல்திறனை வழங்குகிறது.

    இந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை ரூ. 1.25 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய எஸ்ஆர் 160 மாடலை விட விலை அதிகம் ஆகும். 

    விற்பனை துவங்கிய சில மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்த மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.


    எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் சூப்பர்வெலோஸ் அல்பைன் எடிஷன் மாடல் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. சூப்பர்வெலோஸ் 75-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்த லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டது. 

    உலகம் முழுக்க லிமிடெட் எடிஷன் மாடல் மொத்தத்தில் 75 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இவை அனைத்தும் விற்பனை துவங்கிய 75 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதேபோன்று அல்பைன் ஏ110 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட 110 லிமிடெட் எடிஷன் யூனிட்களும் அறிமுக நிகழ்வு முடிந்ததும் விற்றுத்தீர்ந்து விட்டன.

    `இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் உருவாக்கிய திட்டங்களில் புதிய மாடல்களின் உற்பத்தி மற்றும் வெளியீடு மிக முக்கியமான அம்சம் ஆகும். சூப்பர்வெலோஸ் அல்பைன் இந்த திட்டம் வெற்றி பெற்றதற்கு சான்றாக அமைந்து இருக்கிறது.'

    `மற்றும் ஓர் உடனடி வெற்றி கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியை திட்டத்தில் அங்கம் வகித்தோருடன் பகிர்ந்து கொள்வது சிறப்பான அனுபவம்' என எம்வி அகுஸ்டா சிஇஒ திமுர் சர்டரோவ் தெரிவித்தார். 

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஜனவரி முதல் புதிய விலை நிர்ணயம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹீரோ நிறுவன மாடல்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்பட இருக்கிறது.

    உதிரிபாகங்கள் மற்றும் இதர கட்டணங்களுக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்பட இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு மூலம் விலை உயர்வை அறிவிக்கும் முதல் இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹீரோ மோட்டோகார்ப் இருக்கிறது.

    விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும். மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் புதிய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி 1, 2020 முதல் அமலுக்கு வருகிறது.

    ரெவோல்ட் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது வாகனங்களின் முன்பதிவை மீண்டும் துவங்கி உள்ளது.


    ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் தனது ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவை மீண்டும் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. தற்சமயம் இவை டெல்லி, பூனே, ஆமதாபாத், சென்னை, ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட நகரங்களில் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் பல்வேறு பிளான்களின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய சந்தையில் ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

    அறிமுகமானது முதல் இரு மாடல்களும் முன்பதிவில் அசத்தின. இந்திய சந்தையில் ரெவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஏபரல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. மை ரெவோல்ட் பிளான் சந்தா முறையில் ஆர்வி400 மாடல் மாதம் ரூ. 3999 துவக்க விலையில் வழங்கப்படுகிறது.

    ரெவோல்ட் ஆர்வி300 மாடல் மாதம் ரூ. 2999 எனும் துவக்க விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒருமுறை முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இரு மாடல்களுக்கும் இந்த மாத கட்டணம் முறையே 38 மற்றும் 36 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 100 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்வேறு நவீன அம்சங்களுடன் புதிய பிளாட்டினா மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிளாட்டினா 100 கிக் ஸடார்ட் (கேஎஸ்) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

    இது பிளாட்டினா பிராண்டின் நிரூபிக்கப்பட்ட கம்போர்டெக் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது சவாரியின் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. புதிய பிளாட்டினா மோட்டார்சைக்கிள் ஸ்பிரிங் ஆன் ஸ்பிரிங் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் உடன் வருகிறது. இது நீண்ட சவாரிகளில் 15 சதவீதம் கூடுதல் வசதியை வழங்குகிறது.

    புதிய மாடலில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், பாதுகாப்பான மற்றும் சச்சரவில்லாத சவாரிக்கு உறுதியளிக்கிறது. பிளாட்டினா 100 கேஎஸ் மோட்டார்சைக்கிள் காக்டெய்ல் ஒயின் ரெட் மற்றும் எபோனி பிளாக் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் மாடல் விலை ரூ. 51,667, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது நாடு முழுக்க இயங்கி வரும் அனைத்து விற்பனையாளர்களிடமும் கிடைக்கும்.

    ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய வெளியீடு தாமதமாகும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    முன்னதாக ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 மாடல்கள் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இரு மாடல்களும் பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இரண்டு ஹஸ்க்வர்னா 401 மாடல்களும் கேடிஎம் 390 டியூக் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை டிரெலிஸ் பிரேமை சுற்றி சப்-பிரேம் மீது போல்ட் ஆன் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 43 பிஹெச்பி பவர், 37 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி மாடல் இந்தியாவில் அசத்தல் சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.

    2020 ஆண்டு இறுதியை முன்னிட்டு ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை வாங்குவோருக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஆக்டிவா 6ஜி வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    கேஷ்பேக் சலுகை வாடிக்கையாளர்கள் ஹோண்டா கூட்டு சேர்ந்த வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மாத தவணையை பெறும் போது வழங்கப்படுகிறது. இதன் மூலம் டாக்யூமென்டேஷன் முறை மற்றும் முன்பணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

     ஆக்டிவா 6ஜி

    ஹோண்டா ஆக்டிவா 6ஜி இந்திய சந்தையில் அதிக பிரபலமான ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் பிஎஸ்6 வெர்ஷன் பல்வேறு ஹார்டுவேர் மாற்றங்களை பெற்று இருக்கிறது. அதன்படி முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்6 ரக 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.68 பிஹெச்பி பவர், 8.79 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் வெளிப்புறம் பியூவல் பில்லர் கேப், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச், சைலன்ட் ஸ்டார்ட்டர் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    2021 ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது புத்தாண்டு திட்டங்களை ஜனவரி 19 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு விர்ச்சுவல் செய்தியாளர் சந்திப்பு மூலம் நடைபெற இருக்கிறது.

    இந்த சந்திப்பின் போது 2021 மோட்டார்சைக்கிள் மாடல்கள், ரைடிங் கியர், அக்சஸரீ மற்றும் பாகங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த இருப்பதாகவும் ஹார்லி டேவிட்சன் தெரிவித்து உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேன் அமெரிக்கா மாடல் பற்றி இந்நிறுவனம் எந்த தகவலும் வழங்கவில்லை.

     ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்

    2021 பிப்ரவரி மாதத்தில் ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர முற்றிலும் புதய 1250 கஸ்டம் மாடல் ஜனவரியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த மாடல் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

    எனினும், தற்போதைய தகவல்களின் படி 1250 கஸ்டம் மாடல் பேன் அமெரிக்கா மாடலில் வழங்கப்படும் என்ஜின் கொண்டிருக்கும் என்றும் அறிமுகமானதும் விரைவில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. 

    பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பியாஜியோ நிறுவனம் புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு பியாஜியோ வலைதளம் அல்லது விற்பனையகங்களில் மேற்கொள்ள முடியும்.

    அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. 1.27 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எஸ்ஆர் 160 மாடல் விலையை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.

    புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. எனினும், விலை அடிப்படையில் அப்ரிலியா மாடல் விலை சற்றே அதிகம் ஆகும். 

    புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்தியாவில் மாற்றியமைத்தது. தற்சமயம் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய விலை உயர்வின் படி கேடிஎம் ஆர்சி 125 மாடல் விலை ரூ. 1,280 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,61,101 என மாறி இருக்கிறது. கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 3,537 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ. 2,56,917 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     கேடிஎம் ஆர்சி 125

    கேடிஎம் ஆர்சி 125 மாடலில் 125சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.5 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஆர்சி மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக கேடிஎம் 390 டியூக், 390 அட்வென்ச்சர் போன்ற மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி 390 டியூக் மாடல் விலை ரூ. 8515 வரை உயர்த்தப்பட்டது.

    ரெவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்பட்டு உள்ளது.


    ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தி உள்ளது. இரு மாடல்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்பதிவு கட்டணம் மற்றும் ஒருமுறை செலுத்தும் தொகையும் அடங்கும்.

    ரெவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவற்றின் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டன. 

    முன்னதாக ஆர்வி300 மாடல் ரூ. 84,999, ஆர்வி400 மாடல் ரூ. 1,03,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்சமயம் மோட்டார்சைக்கிள் விலை மட்டுமின்றி முன்பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    விலை உயர்வின் படி ரெவோல்ட் ஆர்வி300 மாடல் துவக்க விலை ரூ. 94,999 என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையில் இருந்து ரூ. 10 ஆயிரம் வரை அதிகம் ஆகும். ரெவோல்ட் ஆர்வி400 மாடல் துவக்க விலை ரூ. 1.19 லட்சம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 15 ஆயிரம் வரை அதிகம் ஆகும். 

    ×