என் மலர்
பைக்
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முன்பதிவு விரைவில் துவங்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஸ்கூட்டர் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை ரூ. 1.27 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது எஸ்ஆர்160 மாடலின் விலையை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. எனினும், விலை அடிப்படையில் அப்ரிலியா மாடல் விலை சற்றே அதிகம் ஆகும்.
புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கை, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 160சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
பியாஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது.
பியாஜியோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக புது மோட்டார்சைக்கிள் பிளாட்பார்மை உருவாக்கி வருகிறது. இதன்கீழ் அந்நிறுவனம் 350சிசி-450சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்ரிலியா பிராண்டிங்கில் வெளியிட இருக்கிறது.
இந்த தகவலை பியாஜியோ இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி டெய்கோ கிராபி உறுதிப்படுத்தி இருக்கிறார். தற்சமயம் இவை கான்செப்ட் வடிவில் இருப்பதாகவும் விரைவில் சந்தையில் வெளியாக 2.5 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக பியாஜியோ நிறுவனம் ஆர்எஸ்150 மற்றும் டியுனோ 150 மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. இவை இரண்டும் அனைவரின் கவனத்தை ஈர்த்தன. இதே வழக்கத்தை பியாஜியோ தற்சமயம் 350சிசி-450சிசி மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.
புதிய உயர் ரக மோட்டார்சைக்கிள்கள் பியாஜியோ நிறுவனத்தின் இத்தாலி நாட்டு குழுவினரால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இவை பெரிய மாடலின் தோற்றத்தை தழுவி, சந்தையில் உள்ள அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
2021 ஜனவரி மாதம் முதல் விரிவாக்க பணிகளை துவங்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு துவங்கி நாட்டின் 27 நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளின் அங்கமாக இது அமைகிறது.
முன்னதாக முதற்கட்ட விரிவாக்க பணிகளின் போது மைசூரு, ஹூப்ளி, ஜெய்பூர், இந்தூர், பனாஜி, புவனேஷ்வர், நாசிக், சூரத், சண்டிகர், விஜயவாடா, விசாகபட்டினம், நாக்பூர், நொய்டா, லக்னோ மற்றும் சிலிகுரி என 16 புதிய நகரங்களில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனை துவங்கப்பட்டது.
இதுதவிர பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர டெல்லி, மும்பை, பூனே மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் சமீபத்தில் விற்பனையை துவங்கி இருக்கிறது.
2021 கேடிஎம் 125 டியூக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கேடிஎம் நிறுவனம் 2021 டியூக் 125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியூக் 125 மாடல் விலை ரூ. 1.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 8 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
புதிய 2021 மாடல் தோற்றத்தில் 200 டியூக் போன்றே காட்சியளிக்கிறது. இதில் கூர்மையான ஹெட்லேம்ப், பியூவல் டேன்க் மற்றும் டெயில் பகுதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டேன்க் கொள்ளளவு 10.5 லிட்டர்களில் இருந்து 13.5 லிட்டர்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

2021 125 டியூக் மோட்டார்சைக்கிளில் புதிதாக ஸ்ப்லிட் ரக டிரெலிஸ் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் இருக்கை முன்பை விட சவுகரியமாக வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 125 சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 14.3 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டபிள்யூபி யுஎஸ்டி போர்க்குகள், மோனோஷாக், இருசக்கரங்களில் ஒற்றை டிஸ்க், சிங்கில் சேனல் ஏபிஎஸ் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய 2021 கேடிஎம் 125 டியூக் மாடல் யமஹா எம்டி 15 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இது யமஹா மாடலை விட ரூ. 10 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
கவாசகி நிறுவனத்தின் 2021 மெகுரோ கே3 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவனம் மெகுரோ கே3 மோட்டார்சைக்கிளை ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் கவாசகி டபிள்யூ800 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. இதன் விற்பனை 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

தோற்றத்தில் மெகுரோ கே3 மாடல் டபிள்யூ800 போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் பியூவல் டேன்க் மற்றும் பக்கவாட்டில் மெகுரோ பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பியூவல் டேன்க் மீது பின்-ஸ்ட்ரிப் செய்யப்பட்டு இருக்கிறது.
மெகுரோ கே3 மாடலில் 773சிசி பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 51 பிஹெச்பி பவர், 62.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கவாசகி டபிள்யூ800 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை இந்த மாதம் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்கூட்டர் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
தற்போதைய தகவல்களின் படி எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இம்மாத இறுதியில் விற்பனையகம் வந்து, ஜனவரி மாத துவக்கத்தில் இதன் விநியோகம் துவங்கலாம் என கூறப்படுகிறது.

புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கை, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 160சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய ஏத்தர் 450எக்ஸ் சீரிஸ் 1 மாடலின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது சீரிஸ் 1 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோகம் புதிய நகரங்களில் துவங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. அதன்படி பூனே, ஐதராபாத் மற்றும் ஆமதாபாத் நகரங்களில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இரக்கிறது.
இந்த ஸ்கூட்டரை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு மீதி தொகையை செலுத்தி, அடுத்தக்கட்ட வழிமுறைகளை நிறைவு செய்தபின் ஸ்கூட்டரை டெலவரி எடுத்துக் கொள்ளலாம். இது ஸ்டான்டர்டு மாடலின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட் ஆகும்.

ஏத்தர் 450 எக்ஸ் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 1.59 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் ஸ்டான்டர்டு மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி பணிகள் விரைவில் ஓசூரில் உள்ள ஆலையில் துவங்க இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லடசம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை வழங்கி வருகின்றனர். இந்த சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஸ்டாக் இருப்பிற்கு ஏற்ப அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சலுகை வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை ரொக்க வடிவில் தள்ளுபடியாக பெறலாம். அதன்படி கவாசகி டபிள்யூ800 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று வல்கன் எஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம், இசட்650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 110 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 140 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம், கேஎக்ஸ் 100 மாடல் ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இந்த சலுகைகள் கவாசகி ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு காம்படீஷன் மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
டுகாட்டி நிறுவனம் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 டுகாட்டி மான்ஸ்டர் மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, புது அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதுவரை வெளியான மான்ஸ்டர் மாடல்களிலேயே மிகவும் எடை குறைந்த ஒன்றாக 2021 மான்ஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் கூர்மை, ஸ்போர்ட் மற்றும் மஸ்குலர் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் புதிய எல்இடி ஹெட்லேம்ப், வட்ட வடிவ எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

2021 டுகாட்டி மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளில் 937 சிசி எல்-ட்வின் டெஸ்டாஸ்டிரெட்டா என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் டு-வே குவிக்ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.
இவற்றுடன் 4.3 இன்ச் புல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மூன்றுவித ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நவம்பர் மாத வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் நவம்பர் மாத வாக விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி உள்நாட்டு வாகனங்கள் விற்பனை வளர்ச்சி பெற்ற நிலையில், வெளிநாட்டு ஏற்றுமதியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது.
2020 நவம்பர் மாத வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு மொத்தம் 63,782 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 60,411 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதன்படி வாகன விற்பனையில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

வருடாந்திர அடிப்படையை பொருத்தவரை வாகன விற்பனையில் 30 சதவீத வீழ்ச்சியடைந்து இருக்கிறது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ராயல் என்பீல்டு 3,38,461 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. முந்தைய நிதியாண்டில் ராயல் என்பீல்டு 4,82,673 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது தன்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக Meteor 350 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. புதிய Meteor 350 மாடல் பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
யமஹா நிறுவனத்தின் எப்இசட்எஸ் எப்ஐ ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
யமஹா மோட்டார் இந்தியா எப்இசட்எஸ் எப்ஐ வின்டேஜ் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 1,09,700, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் டிசம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
தோற்றத்தில் எப்இசட்எஸ் எப்ஐ வின்டேஜ் எடிஷன் ஸ்டான்டர்டு எப்இசட்எஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாடல் வின்டேஜ் கிரீன் நிறம் மற்றும் புதிய கிராபிக்ஸ், லெதர் இருக்கை கொண்டிருக்கிறது. வின்டேஜ் எடிஷன் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் வின்டேஜ் எடிஷன் மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் என்ஜின் அன்டர் கௌல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 149சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 12.2 பிஹெச்பி பவர், 13.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக அரைவ் செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன விற்பனையை ஆன்லைன் தளத்திற்கு மெல்ல மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக பிரத்யேக வலைதளம், செயலி உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வரிசையில் டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் செயலியை அரைவ் எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் வாகனங்களை முன்பதிவு செய்யும் வழிமுறையை முற்றிலும் மாற்றுகிறது.

டிவிஎஸ் அரைவ் செயலியில் - ‘Place to explore’, ‘Scan a real bile’ மற்றும் ‘3D mode’ என மூன்று மோட்களை கொண்டிருக்கிறது. இதல் முதல் இரண்டு மோட்களும் ஆக்மென்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ‘Place to explore’ மோட் டிவிஎஸ் வாகனத்தை 360 டிகிரி கோணத்தில் காண்பிக்கிறது.
இத்துடன் ‘Scan a real bile’ மோட் மோட்டார்சைக்கிள் ஒன்றை முழுமையாக ஸ்கேன் செய்து அதன் அம்சங்கள் மிக துல்லியமாக அறிந்து கொள்ள வழி செய்கிறது. இதில் உள்ள ‘3D mode’ ஏஆர் தொழில்நுட்பத்திற்கான வசதி இல்லாத ஸ்மார்ட்போன்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மற்ற இரண்டு அம்சங்களை போன்றே இயங்குகிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.






