என் மலர்
பைக்
இந்திய சந்தையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் நிறுத்திவிட்டது. இந்த மாடல் விற்பனை நவம்பர் 28 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது.
ஏத்தர் 450 மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏத்தர் எனர்ஜி அறிமுகம் செய்த ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்திய சந்தையில் இரண்டு புதிய ஏத்தர் ஸ்கூட்டர்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால், பழைய ஏத்தர் 450 விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமான முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஏத்தர் 450 பெற்று இருந்தது. இதன் பின் அறிமுகமான ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் உள்ளிட்டவை முந்தைய மாடலுக்கான பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களுக்கு கனெக்டெட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மூன்று வாகனங்களுக்கு ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அம்சம் ஹீரோ கனெக்ட் என அழைக்கப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த தொழில்நுட்பம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, டெஸ்டினி 125 மற்றும் பிளஷர் பிளஸ் போன்ற மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இது ரூ. 4999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் பிரத்யேக செயலியுடன் வாகன உரிமையாளரின் ஸ்மார்ட்போன் உடன் இணைந்து கொண்டு செயல்படுகிறது. மேலும் இது பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது.
கவாசகி நிறுவனம் தனது 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிளில் புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
2021 இசட் ஹெச்2 எஸ்இ மாடலில் கவாசகி நிறுவனத்தின் செமி ஆக்டிவ் எலெக்டிரானிக் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இது பயணிக்கும் போது சாலை மற்றும் ரைடிங் நிலைகளுக்கு ஏற்ற வகையில் டேம்பிங் செய்கிறது.

சஸ்பென்ஷனிற்கு ஷோவாவின் 43எம்எம் யுஎஸ்டி போர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய புதிய யுனி டிராக், BFRC லைட் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் வழங்கப்பட்டு இரு்கிறது. ரெயின் மோடில் ஷோவா தொழில்நுட்பம் சிறந்த கண்ட்ரோல் வழங்குகிறது.
புதிய 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளில் 998சிசி சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 198 பிஹெச்பி பவர், 137 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் பை-டைரெக்ஷனல் குவிக் ஷாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புதிய மைலக்ல் எட்டியுள்ளது.
பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இது பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் துவக்க விலை ரூ. 1.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்சமயம், செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையில் ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக பஜாஜ் தெரிவித்து இருக்கிறது. தற்சமயம் பஜாஜ் செட்டாக் மாடல் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. துவக்கத்தில் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்று வந்தது.

பின் கொரோனா ஊரடங்கு சமயத்தில் இதன் விற்பனை சரிவடைந்தது. தற்சமயம் ஊரடங்கிற்கு பின் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு வேரியண்ட்களிலும் 3kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 4KW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வரை செல்லும்.
மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் ஆகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஹோண்டா ஆக்டிவா மாடல் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக இருக்கிறது. இந்தியாவில் ஆக்டிவா மாடல் ஆறாம் தலைமுறை வெர்ஷன் விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா மாடல் இந்திய சந்தையில் இருபது ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் 20 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் ஹோண்டா ஆக்டிவா தற்சமயம் புதிய ஸ்பெஷல் எடிஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஆக்டிவா 6ஜி வெர்ஷனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டா 6ஜி 20 ஆண்டுகள் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடல் ரூ. 66,816 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 68,316 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஸ்பெஷல் எடிஷன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மேட் மெச்சூர் பிரவுன் மற்றும் பியல் நைட்ஸ்டார் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 109சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.7 பிஹெச்பி பவர், 8.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடலை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் தற்சமயம் ஆரஞ்சு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.
புதிய நிறம் தவிர கிளாசிக் 350 மாடல் மேக் இட் யுவர்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் விரும்பும் வகையில் கிளாசிக் 350 மாடலை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இதனை ஆன்லைன் புக்கிங் செய்யும் முன் மேற்கொள்ள வேண்டும்.

நிறம் தவிர ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடல் அலாய் வீல், டியூப்லெஸ் டையர்களுடன் வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட் முன்பதிவு துவங்கிவிட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.83 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் 350 சிசி, சிங்கிள் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.2 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. இம்முறை டியோ ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 473 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா டியோ மாடல் எஸ்டிடி மற்றும் டாப் எண்ட் டிஎல்எக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை உயர்வின் படி டியோ பிஎஸ்6 ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 61,970 என்றும் டிஎல்எக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 65,320 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வெளியீட்டின் போது புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல்கள் விலை முந்தைய பிஎஸ்4 வெர்ஷன்களை விட முறையே ரூ. 5749 மற்றும் ரூ. 7099 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன.
புதிய டியோ பிஎஸ்6 மாடலில் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.6 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் டியோ பிஎஸ்6 மாடலில் ஏசிஜி ஸ்டாட்டர் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் 660 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டிரைடென்ட் 660 ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் முன்பதிவை துவங்கி இருக்கிறது. சமீபத்தில் இதே மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
தற்சமயம் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், டிரையம்ப் டிரைடென்ட் 660 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் அறிமுகமானதும் இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கும்.

டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் டிரைடென்ட் 660 மாடலில் புத்தம் புதிய டியுபுலர் ஸ்டீல் சேசிஸ், 41எம்எம் ஷோவா யுஎஸ்டி மற்றும் ஷோவா மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 310எம்எம் ட்வின் டிஸ்க் பிரேக், இரண்டு பிஸ்டன் நிசிலன் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
சுசுகி நிறுவனம் இந்தியாவில் வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
சுசுகி நிறுவனம் வி ஸ்டாம் 650 பிஎஸ்6 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 8.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 1.38 லட்சம் வரை அதிகம் ஆகும்.
புதிய வி ஸ்டாம் மாடலில் 645சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் யூரோ 5 விதிகளுக்கு உட்பட்டு 70 பிஹெச்பி பவர், 62 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 மாடலில் வெர்டிகல் ஹெட்லேம்ப், பீக் போன்ற பேரிங், பெரிய விண்ட்ஸ்கிரீன், எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது.
இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், 3 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜின் நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450எக்ஸ் சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விநியோகத்தை துவங்கி உள்ளது. இரு மாடல்களும் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
விரைவில் மும்பை, ஆமதாபாத், ஐதராபாத் போன்ற நகரங்களில் விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. நாட்டின் மற்ற நகரங்களில் அதன்பின் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் சீரிஸ் 1 ஸ்பெஷல் கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விரைவில் கொச்சி, கோழிக்கோடு, டெல்லி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் விற்பனைக்கு வருகிறது. ஏத்தர் 450எக்ஸ் மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி பணிகள் விரைவில் ஓசூரில் உள்ள ஆலையில் துவங்க இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லடசம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் டியோ லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் டியோ ரெப்சால் லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் விலை ரூ. 69,757, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டியோ டீலக்ஸ் வேரியண்ட்டை விட ரூ. 2500 வரை அதிகம் ஆகும்.
புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரில் ரெப்சால் ரேசிங் டீம் சார்ந்த ஸ்போர்ட்ஸ் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆரஞ்சு நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை தவிர லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தியாவில் ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் பல்வேறு மாற்றங்களுடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி புதிய மாடலில் சைலன்ட் ஸ்டார்டர், வெளிப்புற பியூவல் பில்லர் கேப், முன்புற பாக்கெட், டிசி எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் 109.19 சிசி, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.65 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5.3 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டுள்ளது.
கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் புதிய 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
கேடிஎம் இந்தியா நிறுவனம் புதிய 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2,48,256, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
புதிய 250 அட்வென்ச்சர் மாடலில் 248சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின், எலெக்டிரானிக் பியூவல் இன்ஜெக்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 29.5 பிஹெச்பி பவர், 24 என்எம் டார்க் செய்லதிறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் WP APEX சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் 177 எம்எம் மோனோஷாக், முன்புறம் 43 எம்எம் அப்சைடு-டவுன் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 19 இன்ச் மற்றும் 17 இன்ச் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 எம்எம் டிஸ்க், பின்புறம் 230 எம்எம் டிஸ்க் பிரேக், போஷ் நிறுவனத்தின் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.






