என் மலர்
பைக்
- விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு வழங்கப்படுகிறது.
- இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரோனின் மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
விலை குறைப்பின் படி டிவிஎஸ் ரோனின் எஸ்எஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 14 ஆயிரம் வரை குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
திடீர் விலை குறைப்பு தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், ரோனின் எஸ்எஸ் மாடலில் எல்இடி ஹெட்லைட், இன்செட் டிஆர்எல், எல்இடி டெயில் லைட், எல்சிடி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கின் ஃபிரேமில் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனேஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த பைக் மோனோடேன் நிற ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பைக்கின் டாப் எண்ட் வேரியண்ட்கள் டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.1 ஹெச்பி பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
- தென்னிந்தியாவில் 50 லட்சம் ஹோண்டா ஆக்டிவாவை விற்பனை செய்ய 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.
தென்னிந்தியாவில் 1 கோடி ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களும் அடங்கும்.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் 50 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த இலக்கை எட்ட அந்நிறுவனத்திற்கு 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.
அதே சமயம் அடுத்த 50 லட்சம் ஸ்கூட்டியை விற்க 7 ஆண்டுகள் மட்டுமே அந்நிறுவனத்திற்கு தேவைபட்டுள்ளது.
- இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 பைக்கின் பெட்டாலியன் பிளாக் எடிசன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
பழைய புல்லட் பைக்கின் ரெட்ரோ லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் முன்பக்க பிரேக்கிற்கு 300 மிமீ டிஸ்க்கும் பின்பக்க பிரேக்கிற்கு 153மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.
- மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய மாற்றங்களை பெற்றுள்ளது.
- இந்த பைக்கில் 312.2சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளின் 2024 எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய அபாச்சி RR 310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய மாற்றங்களை பெற்றுள்ளது.
அதன்படி இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் அப்படியே உள்ளது. இத்துடன் புதிய அபாச்சி ஸ்டிக்கர்கள் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகின்றன. இந்த பைக்கின் ரேசிங் ரெட் நிறத்தின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் பைக்கின் குயிக்ஷிப்டர் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 92 ஆயிரமும், பாம்பர் கிரே நிறத்திற்கான விலை ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பைக்கின் விங்லெட்கள் 3 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் உறுவாக்கும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அபாச்சி பைக்கில் 312.2சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்இடி லைட்கள், டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் உள்ளது.
- மோட்டோ ஜிபி அணியின் மான்ஸ்டர் எனர்ஜி நிறங்களை கொண்டிருக்கிறது.
- புதிய R15M மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
யமஹா நிறுவனத்தின் 2024 R15M மோட்டார்சைக்கிள் புது வடிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 2024 யமஹா R15M மோட்டோ ஜிபி எடிஷன் பெயரில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக் யமஹாவின் மோட்டோ ஜிபி அணியின் மான்ஸ்டர் எனர்ஜி நிறங்களை கொண்டிருக்கிறது.
இதில் உள்ள பெயிண்ட் YZR-M1 MotoGP மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பிரதான நிறம் கருப்பாகவும், ஆங்காங்கே புளூ மற்றும் சில்வர் நிற அக்சென்ட்கள் மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி லோகோ ஃபேரிங்கில் இடம்பெற்று இருக்கிறது. மோட்டோஜிபி ரசிகர்கள் தங்களது பைக்கில் ஃபேக்டரி ரேசிங் அணி நிறம் இருப்பதை நிச்சயம் விரும்புவர்.
யமஹாவின் புதிய R15 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 18 ஹெச்பி பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக் டிஎப்டி டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2024 யமஹா R15M மான்ஸ்டர் எனர்ஜி எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்படுகிறது.
- புது மோட்டார்சைக்கிள் சிறு மாற்றங்களுடன் வெளியாகும் என்று தெரிகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அப்டேட் செய்கிறது. புதுப்பிக்கப்பட்ட அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் அடுத்த வாரம் (செப்டம்பர் 16) இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
2018 ஆம் ஆண்டு முதல் இந்த மோட்டார்சைக்கிள் பெருமளவு அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் ஃபேர்டு மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. புது மோட்டார்சைக்கிள் பெருமளவு மாற்றங்கள் இன்றி வெளியாகும் என்று தெரிகிறது.
தற்போதைய அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புது மாடல் சிறு அப்டேட்களுடன் விற்பனைக்கு வரும் போது அதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.
- ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் 276 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
- பஜாஜ் பிரீடம் 125 விநியோகம் கடந்த ஜூலை மாதம் துவங்கியது.
பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை கடந்த ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பிரீடம் 125 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிஎன்ஜி பைக் விற்பனையில் 5 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
செப்டம்பர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த பைக் 5 ஆயிரத்து 018 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் 276 யூனிட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 4 ஆயிரத்து 019 யூனிட்களும், செப்டம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 637 யூனிட்களும் விற்பனையாகி இருக்கிறது.
இந்த பைக்கின் விநியோகம் கடந்த ஜூலை 18 ஆம் தேதி துவங்கியது. முதற்கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பிரீடம் 125 விநியோகம் செய்யப்பட்டது. நாடு முழுக்க இந்த பைக்கை வாங்க சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரணை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பஜாஜ் நிறுவனம் நாடு முழுக்க சிஎன்ஜி மையங்களை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நாடு முழுக்க 7 ஆயிரம் மையங்களில் சிஎன்ஜி நிரப்பும் வசதியை பஜாஜ் ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கையை 13 ஆயிரம் வரை அதிகப்படுத்த அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
- மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகின் முதல் CNG மோட்டார்சைக்கிள் - பஜாஜ் பிரீடம் CNG-ஐ கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. பஜாஜ் பிரீடம் CNG மாடலின் விலை ரூ. 94 ஆயிரத்து 995, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் என்ட் மாடல் விலை இதுவிட அதிகம் ஆகும்.
இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் தனது பிரீடம் CNG மோட்டார்சைக்கிளின் குறைந்த விலையில் கிடைக்கும் புது வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த பைக் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
புதிய வெர்ஷனில் விலை குறைப்புக்கு ஏற்ற மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறைந்த விலை CNG பைக் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

பஜாஜ் பிரீடம் CNG பைக்கின் புது வெர்ஷனில் எல்இடி யூனிட்-க்கு மாற்றாக ஹாலோஜன் லைட், புதிய ஹெட்லைட் பிராகெட் வழங்கப்படலாம். இதே போன்று டெலிஸ்கோபிக் ஃபோர்க்கை சுற்றி இருந்த கவருக்கு பதிலாக பிளாஸ்டிக்-ஆல் ஆன ஃபோர்க் கெயிட்டர்கள் வழங்கப்படுகின்றன.
பாடி பேனல்கள் மறைக்கப்பட்டு இருப்பதால், இந்த பைக் சிங்கில் டோன் பெயின்டிங் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஃபென்டர்கள் மற்றும் ஸ்பிலாட்டர் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த பைக்கிலும் 125சிசி எஞ்சின் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த யூனிட் 9.3 ஹெச்பி பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும்.
- ஒகாயா எல்க்ட்ரிக் நிறுவன மாடல்களுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
- இம்மாத இறுதி வரை ஒகாயா ஸ்கூட்டர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை புதிய ஒகாயா ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ. 31 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது.
இத்துடன் புதிய ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயனர்கள் ரூ. 1 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விலை குறைப்பு மற்றும் நிதி சலுகைகள் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என்று ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புதிய விலை அதன் ஃப்ரீடம் மாடலுக்கு ரூ. 74 ஆயிரத்து 899 என துவங்கி டாப் எண்ட் மோட்டோஃபாஸ்ட் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது ஒகாயா நிறுவனம் இந்த மாடல்களை மாத தவணையில் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது. அதன்படி மாத தவணைக்கான வட்டி 6.99 சதவீதம் என்றும் மாத தவணை கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.

புதிய விலை விவரங்கள்:
ஒகாயா மோட்டோபாஸ்ட் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்3 விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 09 ஆயிரம் என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்4 விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்2பி விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்தில் இருந்து ரூ. 94 ஆயிரத்து 998 என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்2டி விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்தில் இருந்து ரூ. 94 ஆயிரத்து 998 என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்2எப் விலை ரூ. 98 ஆயிரத்து 802-இல் இருந்து ரூ. 83 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.
ஒகாயா பிரீடம் விலை ரூ. 78 ஆயிரத்து 557-இல் இருந்து ரூ. 74 ஆயிரத்து 899 என மாறி இருக்கிறது.
- இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த புதிய ஜாவா 42 பைக் 14 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜாவா பைக் 18 வகை வேரியண்ட்களில் கிடைக்கிறது,
இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 1.98 lakh லட்சதிக்ரு (Ex-Showroom) விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு முந்தைய ஜாவா பைக்குகளை விட இந்த மேம்படுத்தப்பட்ட ஜாவா பைக்கின் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஜாவா 42 பைக் 14 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வகை ஜே-பேந்தர் எஞ்சின் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் 294 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமா 27.32 பிஎஸ் மற்றும் 26.84 என்எம் டார்க் வரை சக்தியை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் அதிக இரைச்சலை ஏற்படுத்தாது என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

- பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளில் புது அப்டேட் தவிர வேறு மாற்றங்கள் இல்லை.
- இந்த பைக்கிலும் 312சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது G 310 RR மோட்டார்சைக்கிளை முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் தற்போது காஸ்மிக் பிளாக் 2, வைட் மற்றும் M ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் ரேசிங் புளூ மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. வாடிக்கையாளர்கள் இதனை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம். எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாங்கிட முடியும். ரேசிங் புளூ மெட்டாலிக் நிற வேரியண்ட் ரெட், வைட் மற்றும் பிளாக் அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.

புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக்கிலும் 312சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் பிஎம்டபிள்யூ G 310 R மற்றும் G 310 GS மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டிவிஎஸ் அபாச்சி RR 310 மற்றும் RTR 310 மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவற்றின் டியூனிங்கில் மாற்றம் செய்யப்படுகிறது. பிஎம்டபிள்யூ மாடலில் இந்த எஞ்சின் 34 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிள் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அபாச்சி RR 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- "சுஸுகி அக்சஸ் 125" 2,63,788 யூனிட்களை தீரும்பப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
- 52,578 சுஸுகி அவெனிஸ் யூனிட்களையும், 72,045 சுஸுகி பர்க்மேன் யூனிட்களையும் திரும்பப் பெறுகிறது.
சுஸூகி மோட்டார் சைக்கிள் இந்தியா சுஸூகி அக்சஸ் 125 சிசி ஸ்கூட்டர்களை திருமப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 124, ஹீரோ டெஸ்டினி 125 ஆகியவற்றிற்கு போட்டியாக மார்க்கெட்டில் திகழ்ந்து வருகிறது.
"சுஸுகி அக்சஸ் 125" 2,63,788 யூனிட்களை தீரும்பப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2022 ஏப்ரல் 30 முதல் 2022 டிசம்பர் 3-ந்தேதி வரை தயாரிக்கப்பட்டவையாகும்.
இக்னிஷன் காயிலில் (ignition coil) நிறுவப்பட்டு இருக்கும் உயர் டென்ஷன் கார்டு (high tension cord)-லேயே சிக்கல் இருப்பது தெரிய வந்த நிலையில் சுஸுகி அந்த முடிவை எடுத்துள்ளது.
52,578 சுஸுகி அவெனிஸ் யூனிட்களையும், 72,045 சுஸுகி பர்க்மேன் யூனிட்களையும் திரும்பப் பெறுகிறது. மொத்தமாக 3,88,411 யூனிட்களை திரும்பப் பெற இருக்கிறது.






