என் மலர்tooltip icon

    பைக்

    • 2023 மே மாதத்தில் இந்நிறுவனம் 5.08 லட்சம் 2 சக்கர வானங்களை விற்பனை செய்திருந்தது.
    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் ஸ்பிலெண்டர், பேஷன் ப்ரோ, கிளாமர் ஆகிய பைக்குகள் அதிகளவில் விற்பனையாகின்றன.

    மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வாகனங்களின் விலைகளை உயர்த்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் வாகனத்தை பொறுத்து 1500 வரை விலை உயர் வாய்ப்புள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்பிலெண்டர், பேஷன் ப்ரோ, கிளாமர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களையும் இந்த விலையேற்றம் பாதிக்கும்.

    2023 மே மாதத்தில் இந்நிறுவனம் 5.08 லட்சம் 2 சக்கர வானங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் 4.79 லட்சம் 2 சக்கர வானங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 7% குறைவாகும்.

    • ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.
    • ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே தனது மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் பிஎம்டபிள்யூ CE 04 மாடல் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி திறன் 8.9 கிலோ மெகாவாட் ஆகவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இதன் மோட்டார் 31kW திறன் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.6 வினாடிகளில் 0-50 கி.மீட்டரும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லும். இந்த ஸ்கூட்டரை ஸ்டான்டர்டு சார்ஜர் மூலம் 4 மணி நேரம் 20 நிமிடங்களிலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.


    பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன் மற்றும் பின்புறம் 15 அங்குல சக்கரங்களை கொண்டிருக்க்கிறது. இந்த ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது. இதன் எடை 179 கிலோ ஆகும். இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ், புளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட TFT டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    ஒட்டுமொத்தமாக பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பானது எதிர்காலத்திற்கு ஏற்றதாகவும், அதிக வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக, C 400 GT விலையானது ரூ.11.20 லட்சம் எக்ஸ் ஷோரூமில் இந்தியாவில் விற்பனையானது. இதன்அடிப்படையில் பார்த்தால் பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 4.7 கோடி ரூபாய் பங்குகளை பவிஸ் அகர்வாலால் விற்பனை செய்யப்படும்.
    • 1226.4 கோடி ரூபாய் துணை நிறுவனத்தின் மூலதன செலவினங்களுக்கு பயன்படுத்தும்.

    பவிஷ் அகர்வாலின் ஓலா எலெக்டரிக் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் 5500 கோடி ரூபாய் மூலதனம் பெறுவதற்கான ஐபிஓ-க்கு செபி ஒப்புதல் வழங்கியது. செபியின் ஒப்புதலை பெறும் இந்தியாவின் முதல் ஸ்டார்ட்அப் எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவாகும். இது 9.51 கோடி பங்குகளை கொண்டதாகும்.

    இதில் 4.7 கோடி ரூபாய் பங்குகளை பவிஸ் அகர்வாலால் விற்பனை செய்யப்படும். விளம்பர குரூப்பான இந்தூஸ் டிரஸ்ட் 41.78 லட்ச பங்குகளுக்கான உரிமையை வைத்துக்கொள்ளும்.

    1226.4 கோடி ரூபாய் துணை நிறுவனத்தின் மூலதன செலவினங்களுக்கும், 800 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தது.

    1600 கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான முதலீடு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரூ.350 கோடி இயற்கை வளர்ச்சி முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் விலை தொடர்பான மாடலின் விலையில் 12.5 சதவீதம் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குறைந்த எடை மற்றும் ஒலி ஆகியவற்றாலும் பெரும்பாலும் விரும்பப்பட்டது.
    • RX 100-ன் பஞ்ச் ஆக்ஸலேட்டரை இன்று மீண்டும் உருவாக்குவது சவாலாக இருக்கிறது.

    ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் யமாஹா. இந்நிறுவனம் தயாரித்த RX100 1980 முதல் 1990-க்களில் மிகவும் பிரபலம் ஆகும். இன்றும் இந்த மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிலையில் யமஹா RX100 மாடலை இன்றைய பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் மாற்றி வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்தது.

    இந்த நிலையில், இருசக்கர வாகன பிரியர்களிடம் பிரபலமாக இருக்கும் RX100 மாடலை புதுப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது என்று அந்நிறுவன இந்திய தலைவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


    யமஹாவை விரும்புபவர்கள் RX100 மாடலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என விரும்புகிறார்கள். RX மாடலை மாற்றாமல் புதுப்பிப்பது என்பது கடினமான பணி. RX100-ன் வடிவமைப்பை மிகவும் விரும்பினர். மேலும் அதன் குறைந்த எடை மற்றும் ஒலி ஆகியவற்றாலும் பெரும்பாலும் விரும்பப்பட்டது.

    இந்த இரண்டையும் ஸ்மார்ட் என்ஜினியரிங் மற்றும் டிசைன் மூலம் மாற்ற முடியும் என்றாலும் ஒலி பகுதியை 4-ஸ்டிரோக் என்ஜினுடன் பொருத்துவது கடினம். பழைய RX 100 மாடல் 2-ஸ்டிரோக் மோட்டார் மூலம் இயக்கப்பட்டது. ஆனால் தற்போதைய விதிமுறைகளால் இது சாத்தியப்படாது.

    RX 100-ன் பஞ்ச் ஆக்ஸலேட்டரை இன்று மீண்டும் உருவாக்குவது சவாலாக இருக்கிறது. இருப்பினும் தேவைகளை பூர்த்தி செய்து, RX 100 மாடலை மீண்டும் புதுப்பிக்க நிறுவனம் விரும்புகிறது என்றார்.

    • மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
    • இந்த சி.என்.ஜி. பைக்கை பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இந்தியாவில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. ஆட்டோக்கள் அமோகமாக விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த சி.என்.ஜி. பைக்கை பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம்.

    இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கியர்களை கொண்ட இந்த பைக், சந்தையில் விற்பனையாகும் இதே போன்ற பெட்ரோல் பைக்குகளை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஷோ ரூம் விலையாக இந்த பைக் 85,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • யமஹா அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
    • ரிவர் மொபிலிட்டியில் ரூ. 332 கோடியை முதலீடு செய்தது.

    யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இருந்தே இது தொடர்பான பணிகளில் யமஹா ஜப்பான் மற்றும் இந்திய பிரிவு ஈடுபட்டு வருகிறது.

    அதிவேகம், சீரான செயல்திறன் மற்றும் அசத்தலான ஸ்டைலிங் என யமஹாவின் டி.என்.ஏ.வுக்கு ஏற்ற வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்படும் என்று யமஹா அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் ரக்கட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு யமஹா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டியில் ரூ. 332 கோடியை முதலீடு செய்தது.

    தற்போதைய திட்டத்தின் படி யமஹா நிறுவனம் 2025-27 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிவரை இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் சந்தைகளில் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விற்பனையில் கவனம் செலுத்த யமஹா முடிவு செய்துள்ளது. 

    • புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது.
    • முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது R 1300 GS பிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய R 1300 GS மாடல் புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ R 1300 GS மாடல் லைட் வைட், GS டிராபி, ஆப்ஷன் GS டிரமான்டுனா மற்றும் டிரிபில் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     


    இவைதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன், எஞ்சின் மற்றும் பெரும்பாலான அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள எஞ்சின் 145 ஹெச்.பி. பவர், 149 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன்- இகோ, ரெயின், ரோட், என்டியூரோ போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பிரேக் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரெஷர் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    • பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • இந்த பைக் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் (ஜூலை 17) வெளியாகும் என்று பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    புதிய பைக் குறித்து பேசிய ராகேஷ் ஷர்மா "பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்துவோரை குறிவைத்து பஜாஜ் சி.என்.ஜி. பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பைக்கின் டிசைனில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக் என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலைநிறுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

    பஜாஜ் சி.என்.ஜி. பைக் ஒரே மாடலாக இல்லாமல், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த பைக்கின் திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த பைக் 100 முதல் 150 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகம்.
    • 73 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தகவல்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பிலெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பிலெண்டர் பைக்கின் விலை ரூ. 82 ஆயிரத்து 911, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் 30 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த பைக்கிலும் ஏர் கூல்டு, 97.2சிசி, எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 8.02 ஹெச்.பி. பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக் லிட்டருக்கு 73 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

     


    புதிய ஹீரோ ஸ்பிலெண்டர் பைக் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் இண்டிகேட்டர் வடிவம் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க் மற்ற ஸ்பிலெண்டர் மாடல்களில் இருப்பதை போன்றே சதுரங்க வடிவம் கொண்டுள்ளது.

    எக்ஸ்-டெக் மாடல் என்பதால் புதிய ஸ்பிலெண்டர் பைக்கில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை மற்ற எக்ஸ்டெக் மாடல்களை விட ரூ. 3 ஆயிரம் வரை அதிகம் ஆகும். 

    • ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • மற்ற அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

    ஹோண்டா நிறுவனத்தின் CB200X மோட்டார்சைக்கிள் மாடல் சத்தமின்றி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் தற்போது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டம் வழங்கப்படுவதால், பைக்கின் கிளட்ச் லீவரை சிரமம் இன்றி பயன்படுத்த முடியும்.

    அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் பைக்கை ஓட்டும் போது இந்த சிஸ்டம் உதவிகரமாக இருக்கும். இத்துடன் ஸ்லிப்பர் வசதி மூலம், பைக்கின் கியரை குறைக்கும் போது வீல் லாக் ஆவதை தடுக்கும். CB200X மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    ஹோண்டா CB200X மாடல் ஹார்னெட் 2.0 பைக்கின் அட்வென்ச்சர் வெர்ஷன் ஆகும். இந்த பைக்கின் முன்புறம் சற்றே உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கை ஓட்டுவோருக்கு சவுகரியமான வசதியை வழங்குகிறது. இவைதவிர இந்த பைக்கின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த பைக்கில் புதிய ஃபேரிங், உயரமான வின்ட்-ஸ்கிரீன் உள்ளிட்டவை வழக்கமான அட்வென்ச்சர் பைக் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. ஹோண்டா CB200X மாடலில் 184.4 சிசி, ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஓலா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • சில மாடல்களுக்கு ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணியில் உள்ளது. அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ஓலா நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு மே மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், ஓலா S1 X மாடலை வாடிக்கையாளர்கள் ரூ. 74 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் வாங்கிட முடியும். மேலும், பயனர்கள் தங்களது பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கொடுத்து புதிய ஓலா ஸ்கூட்டரை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. பழைய ஸ்கூட்டர்களுக்கு ஓலா நிறுவனம் ரூ. 40 ஆயிரம் வரை வழங்குகிறது.

     


    ஓலா S1 ப்ரோ அல்லது S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது. ஓலா S1 X பிளஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் இம்மாத இறுதி வரை வழங்கப்படும்.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓலா S1 மாடல்கள் அனைத்திற்கும் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. 

    • பல்வேறு நகரங்களில் சிறப்பு வினியோக நிகழ்வுகளை நடத்தியது.
    • இந்த மோட்டார்சைக்கிளில் 98.08சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஷைன் 100 மோட்டார்சைக்கிள் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடியது. அறிமுகமான முதல் ஆண்டில் ஷைன் 100 மோட்டார்சைக்கிள் சுமார் 3 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. புதிய மைல்கல்லை ஒட்டி ஹோண்டா நிறுவனம் நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறப்பு வினியோக நிகழ்வுகளை நடத்தியது.

    இந்த மைல்கல் மூலம் ஹோண்டா நிறுவனம் 2024 நிதியாண்டின் 100 முதல் 110சிசி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்தது. அதிக மைலேஜ் மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்டவை இந்த மாடல் அதிவேக பிரபலம் அடைய காரணமாக அமைந்தது. இத்துடன் நாடு முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிக டச் பாயிண்ட்கள் மூலம் ஹோண்டா நிறுவனம் விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகளை வழங்கி வருகிறது.

     


    ஹோண்டா ஷைன் 100 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 66 ஆயிரத்து 600 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 98.08சிசி, 4 ஸ்டிரோக், SI எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 5.43 கிலோவாட் பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இவுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    ×