என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா ஹேச்ட்பேக் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. கடந்த மாதம் கேம்ரி, பார்ச்சூனர் லெஜண்டர், இன்னோ க்ரிஸ்டா போன்ற மாடல்களின் விலை ரூ. 1,18,000 வரை உயர்த்தப்பட்டது.

கிளான்சா ஹேட்ச்பேக் மாடல் ஜி மற்றும் வி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஜி ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 15,700, ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 33,900 மற்றும் டாப் எண்ட் வி வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் மிட் மற்றும் ஹை கிரேட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் விலை முறையே ரூ. 12,500, ரூ. 2500 மற்றும் பிரீமியம் கிரேட் வேரியண்ட் விலை ரூ. 5,500 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஹஸ்க்வர்னா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹஸ்க்வர்னா நிறுவனம் தனது வாகனங்களை படிப்படியாக எலெக்ட்ரிக் மயமாக்க திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் இ பைலன் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதுதவிர இ ஸ்கூட்டர் மாடல் புகைப்படத்தை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தது.

அந்த வரிசையில் புது எலெக்ட்ரிக் மாடல்கள் 2022 முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என பிரெர் மொபிலிட்டி ஏஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக கான்செப்ட் மாடல் மற்றும் இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது.
தற்போது இரு மாடல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இ ஸ்கூட்டர் 4kW மோட்டார் கொண்டிருக்கும். எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 4kW மற்றும் 10kW மோட்டார் கொண்டிருக்கும். இரு எலெக்ட்ரிக் மாடல்களும் பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
2018 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக வால்வோ இந்தியா தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வில் S90, XC40, XC60 மற்றும் XC90 போன்ற மாடல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாடல்களுக்கான விலை உயர்வு மே 3 ஆம் தேதி முதல் அமலாகிறது.
உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பது, கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவது போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2018 முதல் வாகனங்கள் விலையை வால்வோ உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

வால்வோ கார்கள் புது விலை விவரம்
- வால்வோ S90 D4 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 60,90,000
- வால்வோ XC40 T4 R டிசைன் ரூ. 41,25,000
- வால்வோ XC60 D5 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 60,90,000
- வால்வோ XC90 D5 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 88,90,000
வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய S60 செடான் மாடல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 45.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆக இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய XUV700 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் XUV700 மாடலை 2022 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் 2021 அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
இந்தியாவில் அறிமுகமானதும், இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் XUV500 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் XUV700 பல்வேறு புது அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா XUV700 நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என்றும் XUV500 மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய XUV700 மஹிந்திரா நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகத்தரம் வாய்ந்த அம்சங்கள் நிறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த கார் லெவல் 1 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் பார்க்கிங், லேன் சேன்ஜ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய XUV700 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இரு வேரியண்ட்களும் சவுகரியமான இடவசதியை வழங்கும்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கைகர் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனக்கின் கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே தனது கார் மாடல்கள் விலை உயர்த்தப்படும் என அறிவித்து இருந்தது. அந்த வகையில், தற்போது இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புது கைகர் மாடல் விலை ரூ. 3 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் RXE, RXL, RXT மற்றும் RXZ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ரெனால்ட் கைகர் பேஸ் வேரியண்டான RXE விலையில் எந்த மாற்றமும் மேறஅகொள்ளப்படவில்லை. இதன் மிட்-ரேன்ஜ் RXL வேரியண்ட் விலை ரூ. 23 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின் படி இந்த வேரியண்ட் புது விலை ரூ. 6.32 லட்சத்தில் துவங்கி ரூ. 7.62 லட்சம் என மாறி இருக்கிறது.
இதேபோன்று RXT வேரியண்ட் விலை ரூ. 6.80 லட்சத்தில் துவங்கி ரூ. 8.80 லட்சம் என மாறி இருக்கிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.69 லட்சத்தில் துவங்கி ரூ. 9.75 லட்சம் என மாறி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் சிஎன்ஜி மாடல் 2021 நிதியாண்டில் அதிகம் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவு உயரத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக பலர் சிஎன்ஜி திறன் கொண்ட வாகனங்களை தேர்வு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது.

முன்னணி கார் விற்பனையாளரான மாருதி சுசுகி 2021 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுசுகி சிஎன்ஜி மாடல்கள் விற்பனையில் 41.6 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகியின் வேகன் ஆர் சிஎன்ஜி மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து எர்டிகா சிஎன்ஜி, ஈகோ சிஎன்ஜி மற்றும் செலரியோ சிஎன்ஜி உள்ளிட்டவை அதிகம் விற்பனையாகும் மாடல்கள் பட்டியலில் உள்ளன.
சுசுகி நிறுவனம் தனது வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்து இருக்கிறது.
ஹயபுசா மற்றும் GSX-S1000 மாடல்களை தொடர்ந்து சுசுகி நிறுவனம் தனது வி ஸ்டாம் 1050 மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய 2021 வி ஸ்டாம் 1050XT மாடல் புது நிறங்களில் கிடைக்கிறது. அதன்படி இந்த மாடல் ஸ்டீலி கிரே மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

2021 சுசுகி வி ஸ்டாம் 1050 மாடல் கேண்டி டேரிங் ரெட் / கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய 2021 சுசுகி வி ஸ்டாம் முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லண்டனில் இதன் விலை முறையே 9,999 யூரோக்கள் மற்றும் 11,599 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புது மாடல்கள் யூரோ 5 புகை விதிகளுக்கு உட்பட்டு உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இரு மாடல்களும் எதிர்காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் குளோஸ்டர் எஸ்யுவி மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு பேஸ் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இதன் காரணமாக குளோஸ்டர் மாடல் துவக்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அதன்படி எம்ஜி குளோஸ்டர் துவக்க விலை ரூ. 29.98 லட்சம் ஆகும். எம்ஜி குளோஸ்டர் பேஸ் வேரியண்ட் தவிர மற்ற மாடல்கள் விலை ரூ. 50 ஆயிரத்தில் துவங்கி ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. ஸ்மார்ட் 6 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரமும், 7 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்கள் புது விலை முறையே ரூ. 31.98 லட்சம், ரூ. 35.38 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் விரைவில் பொலிரோ பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
2021 மஹிந்திரா பொலிரோ பேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் வந்தடைந்தது. தற்போதைய புகைப்படங்களின் படி 2021 மஹிந்திரா பொலிரோ மாடல் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புது நிறம் தவிர இந்த எஸ்யுவி மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி புது பொலிரோ மாடலில் ஒரே என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் அப்டேட் செய்யப்படாத மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. இந்த ரக்கட் எஸ்யுவி கணிசமான அளவு விற்பனையாகி வருகிறது.

புது மாடலில் ஒரே ஹெட்லேம்ப் யூனிட், புது கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டூயல் டோன் பினிஷ் இந்த காரின் முக்கிய அப்டேட் ஆக இருக்கிறது. இந்த எஸ்யுவி பேன்ஸி ஷேட் ரெட், பம்ப்பர் சேடின் கிரே நிறம் கொண்டிருக்கிறது. இதன் ரியர் வியூ மிரர்கள் பிளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மஹிந்திரா பொலிரோ மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வேரியண்ட்களும் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தனது நான்காவது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. டிகுவான் எஸ்யுவி மாடல் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும், சிறிது காலத்திற்கு இந்த மாடல் விற்பனையை நிறுத்தி, பின் புது தோற்றத்தில் இந்த மாடலை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது.
தற்போது இந்த மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருந்தது. எனினும், புது மாடல் வெளியீட்டை வோக்ஸ்வேகன் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் எல்இடி மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மெல்லிய ஹெட்லேம்ப்கள், கூர்மையாக காட்சியளிக்கும் கிரில், ரி-டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், இதன் மத்தியில் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பம்ப்பரில் முன்புற சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
இந்த கார் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் கொண்டிருக்கும். இது 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4MOTION ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இரண்டு புது நிறங்கள் மற்றும் 17 புது அம்சங்களுடன் 2021 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கியா நிறுவனத்தின் 2021 செல்டோஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ 9.95 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.65 லட்சம் ஆகும். டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புது கியா செல்டோஸ் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கியா எஸ்பி கான்செப்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் மாடல் 2019 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. பின் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இடம்பிடித்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின் 2021 மால் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த மாடல் புது லோகோவுடன் அறிமுகமாகி இருக்கிறது. இதுதவிர இரண்டு புது வேரியண்ட் மற்றும் 17 புது அம்சங்களை 2021 செல்டோஸ் மாடல் கொண்டிருக்கிறது. புது லோகோ காரின் பொனெட் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
2021 கியா செல்டோஸ் மாடலில் ஒரு டீசல், இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் IVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஏப்ரல் மாத வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் 53,298 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் குறைவு ஆகும். 53,298 யூனிட்களில் 48,789 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4509 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஏப்ரல் 2020 காலக்கட்டத்தில் இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக வாகனங்கள் விற்பனை முற்றிலும் தடைப்பட்டது. பின் வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகின. இந்த ஆண்டு துவக்கம் முதலே வாகனங்கள் விற்பனையில் கணிசமான வளர்ச்சியை நிறுவனங்கள் பதிவு செய்தன.
தற்போது சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருவதால், வாகன விற்பனை சரிவடைய துவங்கி இருக்கிறது. இதே காரணத்தால் ராயல் என்பீல்டு வாகனங்கள் விற்பனையும் குறைந்து இருக்கிறது.






