என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய மேபக் ஜி.எல்.எஸ். 600 கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேபக் ஜி.எல்.எஸ். 600 கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெர்சிடிஸ் கார் பென்ட்லி பென்ட்யகா, ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மற்றும் மசிரட்டி லீவன்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது.
புதிய காரின் முன்புறம் மேபக் வடிவ குரோம் கிரில், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. பம்ப்பரிலும் பெரிய என்ட்-டு-என்ட் குரோம் கிரில் வழங்கப்பட்டுள்ளது. பொனெட்டில் உள்ள கோடுகள் வழக்கமான ஜி.எல்.எஸ். மாடல்களில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது. பின்புற டெயில் லேம்ப்களில் குரோம் பெசல்கள், புதிய டெயில்பைப் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஆடம்பர எஸ்.யு.வி. மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 542 பி.ஹெச்.பி. பவர், 730 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜினுடன் 48-வோல்ட் சிஸ்டம் இ.கியூ. பூஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் செயல்திறனை 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 21 பி.ஹெச்.பி. வரை அதிகபடுத்துகிறது.
சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ். 600 4 மேடிக் கார் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாணடில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பி.எஸ். 6 கார்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 வாகனம் ஏழு மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்குள் மாருதி சுசுகி நிறுவனம் சுமார் மூன்று லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அக்டோபர் 2019 மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் சுமார் ஒரு லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2019 மாதத்தில் மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஆல்டோ கார்களை பி.எஸ். 6 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இவை மத்திய அரசு விதித்த காலக்கெடு துவங்க ஒரு வருடம் இருக்கும் போதே சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.
தற்சமயம் மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ். 6 வாகனங்கள் பட்டியலில்: ஆல்டா 800, வேகன் ஆர், எஸ் பிரெஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, எர்டிகா மற்றும் எக்ஸ்.எல். 6 போன்றவை இடம்பெற்றுள்ளன. பி.எஸ். 6 பெட்ரோல் கார்கள் காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு அளவுகளை 25 சதவிகிதம் வரை குறைக்கும்.
எம்.வி. அகுஸ்டா ரஷ் 1000 மோட்டார்சைக்கிள் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.வி. அகுஸ்டா ரஷ் 1000 மோட்டார்சைக்கிள் 2019 இ.ஐ.சி.எம்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ஐரோப்பாவில் 34,000 EUR (இந்திய மதிப்பில் ரூ. 26.9 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ரஷ் 1000 மோட்டார்சைக்கிள் புருடேல் 1000 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் எம்.வி. அகுஸ்டா ஆர்.வி.எஸ். #1 மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் டேன்க்கில் கூர்மையான கோடுகள் மற்றும் கிரீஸ்களை கொண்டிருக்கிறது.

மோட்டார்சைக்கிளின் பின்புறம் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரஷ் 1000 மாடல் கார்பன் ஃபைபர் வீல் கவர் மற்றும் 04 டீக்கல்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாடலில் பிரத்யேக, டூயல் டிப் எக்சாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ் 1000 மோட்டார்சைக்கிளில் 998சிசி, இன்-லைன் 4 சிலி்ண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் புருடேல் 1000 ஆர்.ஆர். மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 208 பி.ஹெச்.பி. பவர், 116.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் எலெக்டிரானிக் சஸ்பென்ஷனை ஓலின்ஸ் வழங்கியுள்ளது.
எம்.வி. அகுஸ்டா ரஷ் 1000 மாடல் சர்வதேச சந்தையில் 2020 மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்தியாவில் இந்த மாடலின் எண்ணிக்கை குறைவாகவே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
2020 ரெனால்ட் டஸ்டர் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களில் புதிய டஸ்டர் கார் பி.எஸ். 6 ரக என்ஜின் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
புதிய 2020 ரெனால்ட் டஸ்டர் கார் பார்க்க தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. சர்வதேச சந்தையில் இரண்டாம் தலைமுறை டஸ்டர் மாடல் முற்றிலும் வித்தியாசமான தோற்றம் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், புதிய காரின் வெளியீடு பற்றி ரெனால்ட் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. புதிய டஸ்டர் கார் 2020 பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கார் பெட்ரோல் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. ரெனால்ட் இந்தியா நிறுவனம் பி.எஸ். 6 விதிகள் அமலாகும் போது டீசல் வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. எனினும், ரெனால்ட் பல்வேறு பெட்ரோல் மாடல்களை விற்பனை செய்ய இருக்கிறது.
தற்போதைய மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் 2020 ரெனால்ட் டஸ்டர் மாடல்களின் ஒரு வேரியணட்டில் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் விற்பனையாகும் டஸ்டர் மாடலின் இரு என்ஜின்களும் புதிய காரில் வழங்கப்படலாம்.
புகைப்படம் நன்றி: Rushlane
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2019 எல்.ஏ. ஆட்டோ விழாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சிறிய கிரான் கூப் மாடலாக புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் FAAR பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையில் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அந்தவகையில் 218i மாடலில் 1.5 லிட்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 138 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

இத்துடன் 220டி டீசல் வேரியண்ட் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. டாப் எண்ட் M235i எக்ஸ்டிரைவ் ஆல்-வீல் டிரைவ் கார் 2.0 லிட்டர், ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 302 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க், 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
காரின் ஸ்டான்டர்டு மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், 10.25 இன்ச் தொடுதிரை வசதி, 9.2 இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் வீல் அளவுகள் 16 இன்ச் துவங்கி 19 இன்ச் வரை வழங்கப்படுகிறது. இதன் பூட் ஸ்பேஸ் 430 லிட்டர்களாக இருக்கிறது.
2 சீரிஸ் கிரான் கூப் மாடல் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் உயர் ரக மாடல்களான 4-சீரிஸ், 6 சீரிஸ் மற்றும் 8 சீரிஸ் கிரான் கூப் மாடல்களுடன் இணைந்துள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ கார் நான்கு ஆண்டுகளில் சுமார் 6.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் நான்கு ஆண்டுகளில் சுமார் 6.5 லட்சம் பலேனோ கார்களை விற்று இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தயாவில் அக்டோபர் 2015 ஆண்டு அறிமுகமான பலேனோ முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. பின் அடுத்த எட்டு மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையானது.
இரண்டில் இருந்து மூன்று லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய மாருதி சுசுகி ஐந்து மாதங்களில் எட்டியது. அந்த வரிசையில் இந்த ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்து இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் பலேனோ கார் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. பின் ஐந்து மாதங்களில் 50,000 யூனிட்கள் விற்பனையானது.

இந்த ஆண்டு துவக்கத்தில் மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ காரை அப்டேட் செய்து பி.எஸ். 6 ரக என்ஜினை வழங்கியது. இது பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்ட மாருதியின் முதல் காராக அறிமுகமானது.
தற்சமயம் இந்த காரில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் டூயல் விவிடி பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அக்டோபர் 2019 மாதத்தில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் அக்டோபர் 2019 இல் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா இருந்தது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹோண்டா ஆக்டிவா மாதம் 2.8 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2019 இல் மட்டும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மொத்தம் 2,81,273 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 7.25 சதவிகிதம் அதிகம் ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனங்களில் ஹீரோ ஸ்பிளென்டர் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் 2,64,137 ஸ்பிளென்டர் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. எனினும், ஹீரோ ஸ்பிளென்டர் விற்பனை 1.58 சதவிதகிதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2,68,377 ஸ்பிளென்டர் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் அக்டோபர் 2019 இல் 1,85,751 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 7.3 சதவிகிதம் குறைவு ஆகும். 2018 அக்டோபர் மாதத்தில் ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் 2,00,312 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. அக்டோபர் 2019 இல் பஜாஜ் பல்சர் 95,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
125 சிசி திறன் கொண்ட ஹோண்டா சி.பி. ஷைன் 84,743 யூனிட்கள் விற்பனையாகி அதிகம் விற்பனையான இருசக்கர வாகனங்கள் பட்டியலில் ஐந்தாவது இடம்பிடித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 4 சதவிகிதம் குறைவு ஆகும்.
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் பி.எஸ். 6 ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் பி.எஸ். 6 கார் பூனேவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் காரின் மத்தியில் பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் சோதனை செய்யப்படும் க்விட் கிளைம்பர் மாடலில் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்று 14 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை செய்யப்படும் காரின் பின்புறம் புகையை சோதனை செய்யும் உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

வீடியோவின் படி புதிய 2020 ரெனால்ட் க்விட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் தற்போதைய க்விட் ஹேட்ச்பேக் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஸ்பை படங்களின் படி 2020 க்விட் மாடலில் புதிய வடிவமைப்பில் உருவான பம்ப்பர் வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது. அதன் படி புதிய க்விட் மாடலில் புதிய பம்ப்பர், முன்புறம் புதிய ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ரெனால்ட் க்விட் மாடல்களின் விலை ரூ. 2.83 லட்சத்தில் துவங்கி ரூ. 4.92 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2020 ரெனால்ட் க்விட் மாடல்களின் விலை ரூ. 3.25 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5.55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்படம் நன்றி: Area of Interest
எம்.வி. அகுஸ்டா, 2020 எம்.வி. அகுஸ்டா புருடேல் 1000 ஆர்.ஆர்., மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாகசப் பயணங்களுக்கேற்ற மோட்டார்சைக்கிளை உருவாக்கும் எம்.வி. அகுஸ்டா நிறுவனம் புருடேல் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இதன் சக்கரங்கள் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.. இதனால் இதன் எடை கணிசமாகக் குறைந்துள்ளது. கோள வடிவிலான முகப்பு விளக்கு, பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க், ஒருங்கிணைந்த முகப்பு விளக்கு இவை அனைத்தும் இந்த மோட்டார்சைக்கிளுக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

இதில் உள்ள 5 அங்குல தொடுதிரை பல்வேறு வசதிகளைக் கொண்டது. அத்துடன் இதில் 8 நிலை டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி, உரிய நிலைகளைத் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 998 சிசி லிக்விட் கூல்டு, இன்லைன் 4 சிலிண்டர் எனஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 205 பி.ஹெச்.பி. @13,450 ஆர்.பி.எம். மற்றும் 117 என்.எம். டார்க் @11,000 ஆர்.பி.எம். திறனை வெளிப்படுத்தக் கூடியது. இது மணிக்கு அதிகபட்சமாக 299 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதன் சஸ்பென்ஷனை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.25 லட்சமாகும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் பி.எஸ். 6 கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் பி.எஸ். 6 கார் சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 4.42 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வேகன் ஆர் பி.எஸ்.4 மாடலை விட ரூ. 8000 அதிகம் ஆகும்.
பி.எஸ். 6 மாருதி வேகன் ஆர் 1.0 பார்க்க பி.எஸ். 4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பி.எஸ். 6 மாடலில் ARAI சான்று பெற்றிருக்கிறது. இதனால் காரின் மைலேஜை லிட்டருக்கு 22.5 கிலோமீட்டரில் இருந்து 21.79 கிலோமீட்டராக குறைந்துள்ளது.

இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ் பிரெஸ்ஸோ மாடலை விட சிறிதளவு அதிகம் ஆகும். மாருதியின் புதிய காரில் 998சிசி, 3 சிலிண்டர் K10B என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 68 ஹெச்.பி. செயல்திறன் வழங்குகிறது.
புதிய காரில் பி.எஸ். 6 தவிர எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மூன்றாம் தலைமுறை வேகன் ஆர் மாடல் முந்தைய கார்களை விட அதிக சக்திவாய்ந்ததாகவும், இடவசதி கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மொத்தம் 14 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஆறு வெர்ஷன்களில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (மேனுவல் மற்றும் ஆட்டோ ஆப்ஷன்கள்), இரு மாடல்கள் பி.எஸ். 4 சி.என்.ஜி. திறன் கொண்ட என்ஜின் மற்றும் ஆறு வெர்ஷன்கள் பி.எஸ். 6 திறன் கொண்ட 1.2 லிட்டர் K12B பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் 900 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டிரையம்ப் நிறுவனம் தனது புதிய டைகர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கென டிரையம்ப் புதிய டீசரை வெளியிட்டுள்ளது.
டீசரின் படி புதிய மோட்டார்சைக்கிளின் முகப்பு விளக்கின் மேல் டி.ஆர்.எல். வழங்கப்பட்டுள்ளது. டைகர் 900 மாடலில் சர்வதேச சந்தைக்கான மாடலின் ஸ்பை படங்களில் உள்ளதை போன்ற முகப்பு விளக்கு வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய டைகர் 900 மாடல் டைகர் 800 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா மற்றும் சர்வதேச சந்தைக்கான டைகர் 1200 வேரியண்ட்டிற்கு கீழ் புதிய டைகர் 900 நிலைநிறுத்தப்படுகிறது. டிரையம்ப் டைகர் 900 மாடல்களில் பி.எஸ். 6 ரக என்ஜின்கள் வழங்கப்படலாம்.
புதிய மோட்டார்சைக்கிள் டைகர் 800 சீரிசை விட சக்திவாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் விலை டைகர் 1200 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம். இந்தியாவில் டைகர் 1200 விலை ரூ. 17 லட்சம் முதல் துவங்குகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டி-ராக் எஸ்.யு.வி. இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய எஸ்.யு.வி. கார் வரும் மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் முதல்முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் மகாராஷ்டிராவில் சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலுக்கு கீழ் நிலைநிறுத்தப்படும். டி ராக் மாடலை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பல்வேறு புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

வடிவமைப்பில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் கார் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலின் முன்புறம் புதிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கார்னெரிங் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்புற பம்ப்பரில் பெரிய ஏர்-இன்டேக், சில்வர் ஸ்கிட் பிளேட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் இன்டிகேட்டர் போன்று இயங்குகின்றன. காரின் பக்கவாட்டில் கூர்மையான கிரீஸ்களும், பெரிய வீல் ஆர்ச்களும் காணப்படுகிறது. டி ராக் கார் டூயல் டோன் நிறம் கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் ஸ்போர்ட் தீம், மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர், 7-ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
புகைப்படம் நன்றி: AutoCarIndia






