search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப்
    X
    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப்

    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அறிமுகம்

    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    2019 எல்.ஏ. ஆட்டோ விழாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சிறிய கிரான் கூப் மாடலாக புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் FAAR பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையில் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அந்தவகையில் 218i மாடலில் 1.5 லிட்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 138 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப்

    இத்துடன் 220டி டீசல் வேரியண்ட் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. டாப் எண்ட் M235i எக்ஸ்டிரைவ் ஆல்-வீல் டிரைவ் கார் 2.0 லிட்டர், ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 302 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க், 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    காரின் ஸ்டான்டர்டு மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், 10.25 இன்ச் தொடுதிரை வசதி, 9.2 இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் வீல் அளவுகள் 16 இன்ச் துவங்கி 19 இன்ச் வரை வழங்கப்படுகிறது. இதன் பூட் ஸ்பேஸ் 430 லிட்டர்களாக இருக்கிறது.

    2 சீரிஸ் கிரான் கூப் மாடல் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் உயர் ரக மாடல்களான 4-சீரிஸ், 6 சீரிஸ் மற்றும் 8 சீரிஸ் கிரான் கூப் மாடல்களுடன் இணைந்துள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×