என் மலர்tooltip icon
    • அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்
    • போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் திலீப் (வயது 19). இவர் திருவலங்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி, முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் திலீப் வழக்கம் போல் நேற்று கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனைக் கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவலங் காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திலீப் உடலை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் திலீப்பின் உறவினர்கள் குவிந்தனர்.

    சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீரென அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த அரக்கோணம் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதானல் சமாதானம் அடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கலைந்து சென்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாராய மற்றும் கஞ்சா தடுப்பு வேட்டை நடத்தப்பட்டடது.

    இதில் 10 கஞ்சா வழக்குகளும், 50 சாராய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 60 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சா, 55 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களை பற்றி மாவட்ட, மாநில காவல் உதவி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    மேலும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

    • புதிய வாகனங்கள் வழங்க வலியுறுத்தல்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு துறை வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மோகன மூர்த்தி,சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், ஓட்டுநர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை கலைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த பழைய அக்ராவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55) தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மதியம் வீட்டிற்கு செல்வதற்காக அக்ராவரம் -பெல் சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரெய்டு நடத்தியதில் சிக்கினர்
    • 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சந்தவாசல் கண்ணமங்கலம் களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாராய ரெய்டு நடத்த உத்தரவிட்டனர்.

    ஆரணி சரக டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் போலீசார் அதிரடியாக சாராய ரெய்டு நடத்தியதில் ஆரணி தாலுகாவில் மீனா, வேண்டா, கிருஷ்ணமூர்த்தி, ராமதாஸ், பாக்கியராஜ், பாபு, சந்தவாசல் பகுதியில் சாந்தி வனிதா கண்ணமங்கலம் பகுதியில் விஜயகாந்த், ரேவதி உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சுமார் 1000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் மேல் கஞ்சாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 29). சமையல் மாஸ்டர்.

    இவரது மனைவி ரம்யா (23). இவர்களுக்கு மோஷித் (2), கவின் (11 மாத குழந்தை) என 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி கடந்த 12-ந் தேதி சென்னை வடபழனிக்கு வேலைக்காக சென்றார்.

    பின்னர் வேலை முடிந்து நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிலிருந்த குழந்தைகள் இருவரும் அழுது கொண்டிருந்தனர்.

    பின்னர் மனைவி ரம்யாவை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வீடுகளில் ரம்யாவை சுப்பிரமணி தேடி உள்ளார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பிரம்மதேசம் போலீசில் சுப்பிரமணி புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வருகின்றனர்.

    • கும்பாபிஷேகம் நடத்த உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் மனு
    • ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? என சோதனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில், வீரகோவில், ராமநாதீஸ்வரர் கோயில்களில் புதிய அறங்காவலர் குழுவினர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பாண்டுரங்கன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துசாமி, செயல் அலுவலர் சிவாஜி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், முன்னாள் தலைவர் கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் விஜய் அமிர்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வீரகோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் தற்போது நிலவரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலை ஆய்வு செய்தனர்.

    விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதில் மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பாண்டுரங்கன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    • அரசு மருத்துவமனையில் பிதரத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அச்சுதன். அரசு ஊழியர். இவரது மனைவி சுலோச்சனா.

    கிராம நிர்வாக உதவியாளர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் ஸ்ரீபிரியா (வயது 20). இவர் செய்யாறு அரசு கல்லூரியில் பி. ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மதியம் வீட்டின் அறையில் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார். இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஸ்ரீபிரியாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீ பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×