என் மலர்
- பள்ளி முதல்வர் பாலசுந்தர் புத்தக கழகச் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
- வினாடி-வினா கழக செயல்பாட்டினை தேவி ஸ்ரீ குழுவினர் காட்சிப்படுத்தினர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் புத்தககழக செயல்பாடு தொடக்க விழா நடைபெற்றது. பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியை சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் கலந்து கொண்டார். சுபாஷினி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பாலசுந்தர் புத்தக கழகச் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். மாணவி காளிபிரியா குழுவினர் ஆங்கில கழக செயல்பாடு குறித்தும், ஸ்ரீவானி குழுவினர் கலைக்கழக செயல்பாடு குறித்தும், அனுபாமா அறிவியல்கழக செயல்பாடு, காயத்ரி கணிதகழகச் செயல்பாடு குறித்தும், வினாடி வினா கழக செயல்பாட்டினை தேவி ஸ்ரீ குழுவினரும் காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு ஆர்வமூட்டல் காணொளி திரையிடப்பட்டது. பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஒவ்வொரு கழக செயல்பாட்டின் முக்கியத்துவம் நன்மைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியை மிருதுளா ஜெனனி தொகுத்து வழங்கினார். முடிவில் ஆஹிலா நன்றி கூறினார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
- தங்கச்சாமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
- கலெக்டர் ரவிச்சந்திரன், தங்கச் சாமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 3 லட்சமும் வழங்கப்படும் என்றார்.
புளியங்குடி:
புளியங்குடி நடு கருப்பழகு தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (வயது 26). மது விற்பனை செய்த வழக்கில் இவரை கைது செய்த புளியங்குடி போலீசார் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த 14-ந்தேதி தங்கசாமி திடீரென உயிரிழந்தார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், ராஜா, புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், துணைத் தலைவர் அந்தோணிசாமி, கடையநல்லூர் தாசில்தார் கெங்கா, தங்கசசாமியின் தாயார் கருப்பி, சகோதரர் ஈஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் இறந்த தங்கச் சாமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 3 லட்சமும், அவரது தாயா ருக்கு முதியோர் பென்ஷ னும் ஏற்பாடு செய்து தரப்படும் . மேலும் அவரது சகோதரருக்கு நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணி வழங்கப்படும் என்றார்.
மேலும் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தங்கசாமியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு தரும் ரூ.3 லட்சத்தோடு, மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றார்.இதையடுத்து இறந்த வாலிபரின் உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.
- நேற்று வாஸ்து சாந்தி பூஜை, முதற்கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
- நூற்றுக்கணக்கான பெண்கள் தெப்பத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.
சிவகிரி:
சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள கீழ மாரி யம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சிவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறுகிறது.
இதனை முன்னிட்டு கடந்த 21-ந்தேதி அன்று விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, விக்கிரகங்களுக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி, போன்றவையும் நேற்று வாஸ்து சாந்தி பூஜை, அஷ்டபந்தன காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாக சாலை பூஜை முதலியன நடை பெற்றன.
தொடர்ந்து நேற்று மாலை 7 மணிக்கு சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிர மணிய சுவாமி கோவில் முன்பாக உள்ள தெப்பத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்தம் எடுத்து, குமாரபுரம், காந்திரோடு, 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு மற்றும் முக்கிய ரத வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் வலம் வந்து சிவசக்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோவிலில் அம்மன் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் தீர்த்தம், பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர், தேன் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை தலைவர் திருஞானம், துணைத்தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியன், செய லாளர் அய்யனார், வீரபாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் செயல்பட்டார்.
- ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக வாக்களிக்க இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஊரகப் பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 7 உறுப்பினர்களும், நகர் பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து மொத்தம் 5 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் செயல்பட்டார். மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோர் தேர்தலில் வாக்களித்தனர். ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக வாக்களிக்க இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 7 பேருக்கு 10 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர், தி.மு.க.வை சேர்ந்த சி.சுதா, பி.சுதா, தேவி, பூங்கொடி, மாரிமுத்து, மைதீன்பீவி ஆகியோர் தலா 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். நகர்ப்புற பகுதியில் இருந்து 5 உறுப்பினர் பதவிக்கு 14 பேர் போட்டியிட்டனர்.
அதில் சுரண்டையை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் 257 வாக்குகளும், சங்கரன்கோவில் கவுசல்யா 214 தி.மு.க. வாக்குகளும், சிவகிரி சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் உலகேஸ்வரி 212 வாக்குகளும், கடையநல்லூர் முருகன் 211 (தி.மு.க.), வாசுதேவநல்லூர் சரவணன் 211 (தி.மு.க.) ஆகியோர் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கி னார்.
வாக்குப்பதிவுகள் நடைபெறும் பொழுது பிற தனியார் வாகனங்கள் உள்ளே சில அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
- வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஒரு விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப்பட்டது.
- முகாமில் விதை சான்று அலுவலர் சந்துரு மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வாகி உள்ள துப்பாக்குடி பஞ்சாயத்து அம்மன் கோவில் வளாகம், அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்து செல்லபிள்ளையார்குளம் கிராமத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்களின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு துப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன், அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினர்.
கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன் ராணி முன்னிலை வகித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார்.
ஆர்.வி.எஸ். ஆராய்ச்சி மையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுகுமார், ஆலங்குளம் விதை சான்று அலுவலர் சந்துரு, உதவி விதை அலுவலர் சேர்மன், வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் கருப்பசாமி, கால்நடைத்துறை சார்பில் கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அலுவலர் இசக்கி முத்து, தோட்டக்கலை உதவி அலுவலரும், துப்பாக்குடி நோடல் அதிகாரியுமான கோவிந்தராஜ், வேளாண்மை உதவி அலுவலரும், அணைந்த பெருமாள் நாடானூர் நோடல் அதிகாரியுமான தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர் திருமலைக்குமார், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மாரியப்பன் என்ற விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப் பட்டது.
வி.எஸ்.டி, இயற்கை அக்ரோ நிறுவனங்கள் மூலம் வேளாண் கருவிகள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் செய்திருந்தார்.
மேலும் கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வாகி உள்ள மற்ற பஞ்சாயத்துகளான திருமலையப்பபுரம் முதலியார்பட்டி, தெற்கு மடத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம், பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- தென்காசி - நெல்லை வழித்தடத்தில் நேரடியாக மதுரைக்கு இதுவரை ஒரு ரெயிலும் இயக்கப்படவில்லை.
- நெல்லை - தென்காசி வழித்தட பொதுமக்களுக்கு ஓர் இரவு நேர ரெயில் மற்றும் ஓர் அதிகாலை ரெயிலும் கிடைக்கும்.
சங்கரன்கோவில்:
நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் நெல்லை - ஈரோடு ரெயிலை அம்பை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அம்பை வழியாக செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரெயிலை இயக்கியதற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில் ரெயில்வேக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாம்பரம் - செங்கோட்டை ரெயில் அம்பை, சேரன்மகாதேவி பகுதி மக்களுக்கு முதன்முறையாக சென்னைக்கு செல்ல நேரடி வசதி கிடைத்துள்ளது.மேலும் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கடையம், பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், நெல்லையில் புறப்பட்டு மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் வண்டி எண் 16846 நெல்லை - ஈரோடு ரெயிலை அம்பை, தென்காசி வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு நீட்டிக்கும் பட்சத்தில் நெல்லை ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் நெருக்கடி குறைவதோடு முதன்முறையாக அம்பை ரெயில் வழித்தட பயணிகளுக்கு மதுரைக்கு இணைப்பு கிடைக்கும்.நெல்லை மேற்கு பகுதி மற்றும் தென்காசி தெற்கு பகுதி மக்களும் பல்வேறு வேலை நிமித்தமாகவும், மதுரை உயர் நீதிமன்ற கிளை, மருத்துவமனைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் சென்று வருகின்றனர். இதுவரை தென்காசி - நெல்லை வழித்தடத்தில் நேரடியாக மதுரைக்கு இதுவரை ஒரு ரெயிலும் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டு பஸ்சில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். செங்கோட்டையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 6.30 சென்று, பின் வழக்கமான நேரத்தில் ஈரோடு செல்லும் வகையில் நீட்டிக்க வேண்டும். ஈரோட்டில் இருந்து நெல்லை வரும் ரெயிலை நெல்லைக்கு 8.30 மணிக்கு வந்து செங்கோட்டைக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும் வகையில் நீட்டிப்பு செய்தால் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைவதோடு மட்டுமின்றி நெல்லை - தென்காசி வழித்தட பொதுமக்களுக்கு ஓர் இரவு நேர ரெயில் மற்றும் ஓர் அதிகாலை ரெயிலும் கிடைக்கும்.
நெல்லை ரெயில் நிலை யத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் விரைவில் இயக்கப்பட இருப்பதால் காலை நேரத்தில் ஏற்படும் நடைமேடை நெருக்கடி குறையும். எனவே தென்காசி- நெல்லை வழித்தட பொதுமக்கள், ரெயில் பயணிகள், பள்ளி ,கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளின் நலனை கருத்தில் கொண்டு 16845/16846 ஈரோடு-நெல்லை- ஈரோடு ரெயிலை இருமாார்க்கங்களிலும் செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அற்த மனுவில் கூறியுள்ளார்.
- விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும்.
- உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும் முதல்- அமைச்சரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்ப தாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர் ஆவர்.
இந்த விருதுக்கு தென்காசி மாவட்டத்தை சார்ந்த துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான வர்களுக்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன.
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது க்கான விண்ணப்பங்கள் / பரிந்து ரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணைய தளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கி யதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகப்ட்சம் 800 வார்த்தை களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவர ங்களும் முறையாக நிரப்பப்படு வதை உறுதி செய்ய வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பி ப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இணைய தளத்தில் பெற ப்படும் விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்ப ங்கள் கண்டி ப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மிளகாய் செடியில் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.
- கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மிளகாயின் விலையானது வெகுவாக அதிகரித்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுரண்டை, சாலைப்புதூர், நாகல்குளம், மேல பட்டமுடையார்புரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், செட்டியூர், நாட்டார்பட்டி, அரியப்பபுரம், குறுங்கா வனம், வெள்ளக்கால், இடையர்தவணை, குறும்பலாபேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
அவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு மிளகாய் செடியில் அதிக வைரஸ் நோய் பாதிப்புகள் ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.
இதனால் மார்க்கெட்டுக்கு சுற்று கிராம பகுதிகளில் இருந்து விவசா யிகள் கொண்டு வரும் மிளகாய் வரத்து குறைந்து உள்ளதால் கடந்த 15 நாட்க ளுக்கும் மேலாக மிளகாயின் விலையானது வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையானது.
தமிழகம் முழுவதும் மட்டுமன்றி மைசூர் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மிளகாய் கொள்முதல் விலையும் ஒரே விலை யாகவே உள்ளது. வைரஸ் நோயில் இருந்து தப்பிய மிளகாய் செடிகளின் காய்கள் நல்ல விலைக்கு செல்வதால் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் மிளகாய் விலை விற்பனையாகி வருவதாக விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
- சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை பக்தர்களிடையே ஏற்பட்டது.
- 9-ம் திருநாளான ஜூலை மாதம் 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் ஆடித்தபசு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடித்தபசு திருவிழா
முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை பக்தர்களிடையே ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரே என்று காட்சி அளிக்க வேண்டி கோமதி அம்பாள் ஒற்றை காலில் தவசு இருந்தார்.
அம்பாளின் வேண்டு கோளை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த அரிய நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக ஆண்டுதோறும் கொண் டாடப்பட்டு வருகிறது.
ஜூலை 21-ந்தேதி
இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா அடுத்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் 9-ம் திருநாளான ஜூலை மாதம் 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாளான (31-ந்தேதி) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நிகழ்ச்சி நடக்கிறது.
- கிருஷ்ணவேணி செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்த்து வந்தார்.
- போலீசார், கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஏ.கே. நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அம்சு பாண்டி. இவரது மனைவி கிருஷ்ணவேணி ( வயது 42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
ஆசிரியை தற்கொலை
கிருஷ்ணவேணி செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணவேணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணவேணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மானை தெருநாய்கள் கடித்தன.
- கடப்போகத்தி காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மான் ஒன்றை தெருநாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன.
அதனை கண்ட பொதுமக்கள் நாய்களை அங்கிருந்து துரத்தி விட்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர் நேரில் வந்து பார்த்தபோது நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த மான் பெண் மான் என்றும், அதற்கு 3 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள கடப்போகத்தி பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது. அங்கிருந்து தப்பி ஊருக்குள் வந்த மானை நாய்கள் துரத்தி கடித்துள்ளதாக வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.
- விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் 10 சதவீத கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பாடாப் பிள்ளையார் கோவில் முன்பு தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் 10 சதவீத கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு தென்காசி மாவட்ட விசைத்தறி சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ், சி.ஐ.டி.யு. தென்காசி மாவட்ட தலைவர் அயூப் கான், விசைத்தறி சங்கத் தலைவர் ரத்தினவேல், செயலாளர் லட்சுமி, பொருளாளர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள்.
இதனைத்தொடர்ந்து, சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், அவ்வாறு கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த தவறினால் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெறும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தை சார்ந்த சக்திவேல், சுப்பிரமணியன், பிலிப், முருகன் உள்ளிட்ட ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விசைத்தறி சம்மேளன துணைத் தலைவர் சோம சுந்தரம் நன்றி கூறினார்.







