என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிவசக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம்
    X

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்த காட்சி.

    சிவகிரியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிவசக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம்

    • நேற்று வாஸ்து சாந்தி பூஜை, முதற்கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பெண்கள் தெப்பத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள கீழ மாரி யம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சிவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறுகிறது.

    இதனை முன்னிட்டு கடந்த 21-ந்தேதி அன்று விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, விக்கிரகங்களுக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி, போன்றவையும் நேற்று வாஸ்து சாந்தி பூஜை, அஷ்டபந்தன காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாக சாலை பூஜை முதலியன நடை பெற்றன.

    தொடர்ந்து நேற்று மாலை 7 மணிக்கு சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிர மணிய சுவாமி கோவில் முன்பாக உள்ள தெப்பத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்தம் எடுத்து, குமாரபுரம், காந்திரோடு, 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு மற்றும் முக்கிய ரத வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் வலம் வந்து சிவசக்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோவிலில் அம்மன் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் தீர்த்தம், பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர், தேன் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை தலைவர் திருஞானம், துணைத்தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியன், செய லாளர் அய்யனார், வீரபாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×