கடையம் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்

வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஒரு விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப்பட்டது. முகாமில் விதை சான்று அலுவலர் சந்துரு மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கடையம் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்
Published on

கடையம்:

கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வாகி உள்ள துப்பாக்குடி பஞ்சாயத்து அம்மன் கோவில் வளாகம், அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்து செல்லபிள்ளையார்குளம் கிராமத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்களின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு துப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன், அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை தலைமை தாங்கினர்.

கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன் ராணி முன்னிலை வகித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார்.

ஆர்.வி.எஸ். ஆராய்ச்சி மையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுகுமார், ஆலங்குளம் விதை சான்று அலுவலர் சந்துரு, உதவி விதை அலுவலர் சேர்மன், வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் கருப்பசாமி, கால்நடைத்துறை சார்பில் கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அலுவலர் இசக்கி முத்து, தோட்டக்கலை உதவி அலுவலரும், துப்பாக்குடி நோடல் அதிகாரியுமான கோவிந்தராஜ், வேளாண்மை உதவி அலுவலரும், அணைந்த பெருமாள் நாடானூர் நோடல் அதிகாரியுமான தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர் திருமலைக்குமார், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மாரியப்பன் என்ற விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப் பட்டது.

வி.எஸ்.டி, இயற்கை அக்ரோ நிறுவனங்கள் மூலம் வேளாண் கருவிகள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் செய்திருந்தார்.

மேலும் கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வாகி உள்ள மற்ற பஞ்சாயத்துகளான திருமலையப்பபுரம் முதலியார்பட்டி, தெற்கு மடத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம், பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com