என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும்- ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
- தென்காசி - நெல்லை வழித்தடத்தில் நேரடியாக மதுரைக்கு இதுவரை ஒரு ரெயிலும் இயக்கப்படவில்லை.
- நெல்லை - தென்காசி வழித்தட பொதுமக்களுக்கு ஓர் இரவு நேர ரெயில் மற்றும் ஓர் அதிகாலை ரெயிலும் கிடைக்கும்.
சங்கரன்கோவில்:
நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் நெல்லை - ஈரோடு ரெயிலை அம்பை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அம்பை வழியாக செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரெயிலை இயக்கியதற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில் ரெயில்வேக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாம்பரம் - செங்கோட்டை ரெயில் அம்பை, சேரன்மகாதேவி பகுதி மக்களுக்கு முதன்முறையாக சென்னைக்கு செல்ல நேரடி வசதி கிடைத்துள்ளது.மேலும் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கடையம், பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், நெல்லையில் புறப்பட்டு மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் வண்டி எண் 16846 நெல்லை - ஈரோடு ரெயிலை அம்பை, தென்காசி வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு நீட்டிக்கும் பட்சத்தில் நெல்லை ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் நெருக்கடி குறைவதோடு முதன்முறையாக அம்பை ரெயில் வழித்தட பயணிகளுக்கு மதுரைக்கு இணைப்பு கிடைக்கும்.நெல்லை மேற்கு பகுதி மற்றும் தென்காசி தெற்கு பகுதி மக்களும் பல்வேறு வேலை நிமித்தமாகவும், மதுரை உயர் நீதிமன்ற கிளை, மருத்துவமனைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் சென்று வருகின்றனர். இதுவரை தென்காசி - நெல்லை வழித்தடத்தில் நேரடியாக மதுரைக்கு இதுவரை ஒரு ரெயிலும் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டு பஸ்சில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். செங்கோட்டையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 6.30 சென்று, பின் வழக்கமான நேரத்தில் ஈரோடு செல்லும் வகையில் நீட்டிக்க வேண்டும். ஈரோட்டில் இருந்து நெல்லை வரும் ரெயிலை நெல்லைக்கு 8.30 மணிக்கு வந்து செங்கோட்டைக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும் வகையில் நீட்டிப்பு செய்தால் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைவதோடு மட்டுமின்றி நெல்லை - தென்காசி வழித்தட பொதுமக்களுக்கு ஓர் இரவு நேர ரெயில் மற்றும் ஓர் அதிகாலை ரெயிலும் கிடைக்கும்.
நெல்லை ரெயில் நிலை யத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் விரைவில் இயக்கப்பட இருப்பதால் காலை நேரத்தில் ஏற்படும் நடைமேடை நெருக்கடி குறையும். எனவே தென்காசி- நெல்லை வழித்தட பொதுமக்கள், ரெயில் பயணிகள், பள்ளி ,கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளின் நலனை கருத்தில் கொண்டு 16845/16846 ஈரோடு-நெல்லை- ஈரோடு ரெயிலை இருமாார்க்கங்களிலும் செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அற்த மனுவில் கூறியுள்ளார்.






