search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் 12 பேர் வெற்றி
    X

    தென்காசி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் 12 பேர் வெற்றி

    • தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் செயல்பட்டார்.
    • ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக வாக்களிக்க இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஊரகப் பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 7 உறுப்பினர்களும், நகர் பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து மொத்தம் 5 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் செயல்பட்டார். மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோர் தேர்தலில் வாக்களித்தனர். ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக வாக்களிக்க இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 7 பேருக்கு 10 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர், தி.மு.க.வை சேர்ந்த சி.சுதா, பி.சுதா, தேவி, பூங்கொடி, மாரிமுத்து, மைதீன்பீவி ஆகியோர் தலா 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். நகர்ப்புற பகுதியில் இருந்து 5 உறுப்பினர் பதவிக்கு 14 பேர் போட்டியிட்டனர்.

    அதில் சுரண்டையை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் 257 வாக்குகளும், சங்கரன்கோவில் கவுசல்யா 214 தி.மு.க. வாக்குகளும், சிவகிரி சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் உலகேஸ்வரி 212 வாக்குகளும், கடையநல்லூர் முருகன் 211 (தி.மு.க.), வாசுதேவநல்லூர் சரவணன் 211 (தி.மு.க.) ஆகியோர் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கி னார்.

    வாக்குப்பதிவுகள் நடைபெறும் பொழுது பிற தனியார் வாகனங்கள் உள்ளே சில அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

    Next Story
    ×