என் மலர்
- சிறப்பு முகாம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் முதல்-அமைச்சரின் பெண் குழுந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடர்பான அசல் பத்திரம் வழங்குவது, வைப்புத் தொகை ரசீது, முதிர்வு தொகை பெற்று வழங்குதல், பெயர் மாற்றம், வங்கி கணக்கு மாற்றம், முகவரி மாற்றம் தொடர்பான 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, துணை கலெக்டர் கவிதா, சகி-ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88,271 ஓட்டுகளும், பழனிநாடார் 87,706 ஓட்டுகளும் பெற்றனர்.
- காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தென்காசி:
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசும், அ.தி.மு.க.வும் மோதியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பழனி நாடார், அ.தி.மு.க. வேட்பாளராக செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்பட 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஐகோர்ட்டில் வழக்கு
அதில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88,271 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் 87,706 ஓட்டுகளும் பெற்றனர். ஆனால் தபால் ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு 674 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாருக்கு 1,609 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறி இருந்தார்.
தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணிக்கை
இந்த வழக்கில் தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ணிக்கை நடத்த வேண்டும். அதனை 10 நாட்களில் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அதனை எண்ணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான துரை ரவிச்சந்திரன் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி தபால் ஓட்டுகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்பட உள்ளது. தென்காசி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஆர்.டி.ஓ. லாவண்யா ஆகியோரின் முன்னிலையில் நாளை தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் வாக்கு எண்ணப்படுகிறது.
வேட்பாளர்கள் 18 பேர் உள்ள நிலையில் வேட்பாளர்கள் அல்லது ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என 18 முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. எனவே, பங்கேற்க விரும்பும் முகவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வரை விண்ணப்பித்தவர்கள் மட்டுமே நாளை ஓட்டு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி அளவில் ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்கு 1 கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எண்ணப்பட்டுள்ள இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவு அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வாயிலாக சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மேற்பார்வையில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள சில ரெயில் நிறுத்தங்களில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து நெல்லை செல்லும் போது கீழக்கடையம் ரெயில் நிலையத்திலும் வரும் புதன்கிழமை முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வண்டி எண்: 16791/16792 நெல்லை-பாலக்காடு-நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக் கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை என 7 ரெயில் நிலை யங்களில் நின்று சென்றது. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் அந்த ரெயில் தனது இயக்கத்தை தொடங்கிய போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.
இந்நிலையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று தற்போது கூடுதல் நிறுத்தங்கள் அளிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், 2 ஆண்டுக்கும் மேலான தொடர் கோரிக் கையை ஏற்று கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாவூர்சத்திரம் மற்றும் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வர்த்தகம் சார்ந்து கேரளாவிற்கு நிறைய பேர் பயணிப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
- செந்தூர்பாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அவரது மகன்கள் முன்னிலையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் அ.தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி செங்கோட்டை அருகே கற்குடி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செந்தூர்பாண்டியன் மூத்த மகனும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான செ.அய்யப்பராஜ், இளைமகன் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முன்னிலையில் நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.
- சங்கரலட்சுமி மேலப்புலியூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- அமீர் ஜான், தென்காசி மேல பாறையடியை சேர்ந்த சிறுவனும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
தென்காசி:
நெல்லையை அடுத்த ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கரலட்சுமி(வயது 49). இவர் கடந்த 7-ந்தேதி தென்காசி அருகே மேலப்புலியூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் மேலப்புலியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சங்கர லட்சுமியின் கை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தென்காசி மவுண்ட் ரோட்டை சேர்ந்த முகமது அமீர் ஜான் (வயது 19) மற்றும் தென்காசி மேல பாறையடியை சேர்ந்த சிறுவன் ஒருவனும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவ ர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
- மாணிக்கம் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
- கடந்த 4 ஆண்டுகளாக மாணிக்கம் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
நெல்லை:
சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 65). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடந்த 4 ஆண்டுகளாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகாததால் அவர் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
- நாகராஜ் வைத்திருந்த செல்போனை 2 மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
- கருத்தபாண்டி என்ற கார்த்தி,மருதுராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழ ஆம்பூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 26). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவர் தலைக்கு பக்கத்தில் வைத்திருந்த ரூ.17 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடிச்சென்றனர். அதில் அவர் ரூ.3 ஆயிரம் பணம் வைத்துள்ளார்.
இந்நிலையில் செல்போன் திருட்டு போனது குறித்து அவர் அளித்த புகாரில் ஆழ்வார்க்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி அதே கிராமத்தில் வசிக்கும் கருத்தபாண்டி என்ற கார்த்தி மற்றும் இடைகாலை சேர்ந்த மருதுராஜ்(வயது 20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். கைதான கார்த்தி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது நமது இலக்காக உள்ளது.
- மக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
செங்கோட்டை:
அ.தி.மு.க. மாநில மாநாடு அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பது குறித்து செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை மற்றும் மதுரையில் நடை பெற உள்ள மாநாட்டுக்கு நிர்வாகிகள், உறுப்பினா்களை அழைத்து செல்வ தற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.
கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதிய உறுப்பினா்கள் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் பணி செய்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது நமது இலக்காக உள்ளது. இதுவரையில் புதிய உறுப்பினா்களை சேர்த்த நிர்வாகிகள் மேலும் கூடுதலாக உறுப்பினா்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நேரடியாக மக்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய அடையாள சான்று பெற்று உறுப்பினராக சேர்க்க வேண்டும். இரட்டை பதிவு இல்லாமல் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் அதிகளவில் புதிய உறுப்பினா்களாக இளைஞர்களை சேர்க்க வேண்டும். அதேபோல் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி மதுரை மாநகரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பி னா்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த மாநாடு நமது உறுப்பினா்களின் குடும்ப விழா வாக எடுத்துக்கொண்டு அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துபாண்டியன், மகாராஜன், செல்லப்பன், ஜெயகுமார், துரை பாண்டி யன், ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், வாசுதேவன், ராமசந்திரன், நகர செயலா ளர்கள் முருகன், ஆறுமுகம், பரமேஸ்வரபாண்டியன், கணேசன், பேரூர் செயலா ளர்கள் டாக்டர் சுசீகரன் சேவகபாண்டியன், கார்த்திக் ரவி, நல்லமுத்து, அலியார், முத்துகுட்டி, மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், தொழிற்சங்க, சார்பு அணி நிர்வாகிகள், உறுப்பி னா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் காந்திநகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை கள், கேடயம், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை, மதி மாரிமுத்து, சேர்மதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, மாரிசாமி, மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், அஜய்மகேஷ்குமார், வீரமணி, பிரகாஷ், வக்கீல் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காந்திநகர் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் முத்தையா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
- கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் தென்காசி வருவாய் மாவட்ட அனைத்து வகை பள்ளிகளின் சார்பில் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருளானந்தம் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கக்கல்வி அலுவலர் நாராயணன் வரவேற்று பேசினார். மேலும் மாவட்ட அளவில் கடந்த ஆண்டு நடந்த விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் முத்தையா பரிசுகளை வழங்கி பாராட்டி னார். நிகழ்ச்சியில் ராமநாதன், துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உதவி உடற்கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சேவியர் பிரிட்டோ, குமரேசன், அன்னக்கிளி உட்பட ஏராளமான உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.
- போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
- தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எட்மண்ட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தென்காசி:
ஆலங்குளம் அருகே உள்ள ஆலடி அருணா லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் நடந்தது.
பரிசளிப்பு விழா
இதில் திருச்சி, மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
கல்லூரி நிர்வாக இயக்குனரும், தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி தலைவருமான டாக்டர். பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். கடையநல்லூர் பிரின்ஸ் மருத்துவமனை டாக்டர் சஞ்சீவி, ஆலங்குளம் டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை வாழ்த்தி பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எட்மண்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் செல்லப்பா, முன்னாள் தி.மு.க. ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாஞ்சோலை துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், ரஞ்சித், மணிகண்டன், காவலாகுறிச்சி மகேஷ் பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் ஜான்சுபா, ஆறுமுக செல்வி, கவுசல்யா அனு, இந்துராணி, ஜோன் திரிஷா, ராஜேஷ், ஜெயசீலின், ஜெகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் முத்தமிழன் நன்றி கூறினார்.
- விழாவில் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
- நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் பாரதியார் மன்றத்தின் சார்பில் 35-வது ஆண்டு விழா கீழப்பாவூரில் உள்ள நாடார் அம்மன் கோவில் மைதானத்தில் நடை பெற்றது.
முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கச்சாமி முன்னிலை வகித்தார். இதில் கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மதியழகன் வேட்டி-சேலைகள் வழங்கினார். முன்னதாக நெல்லை அண்ணா தொழிற்சங்க முன்னாள் தலைவர் இளஅரசு, கீழப்பாவூர் பாரதியார் மன்ற கவுரவ ஆலோசகர் கே.எம்.அருள்செல்வன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் மன்ற செயற்குழு உறுப்பினர் சிங்கக்குட்டி என்கிற குமரேசன், மருதப்பபுரம் வேங்கை சந்திரசேகரன், கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன், சுரண்டை சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் குற்றாலம் பராசக்தி கல்லூரி உதவி பேராசிரியர் சுதனா பிரபாகரன் பாரதியாரை குறித்து எடுத்து கூறினார்.
தொடர்ந்து சுரண்டை சேர்மத்தாய் வாசன் பள்ளி, பாவூர்சத்திரம் அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மன்ற செயற்குழு உறுப்பினர் பொன் ராஜ கோபால் தொகுத்து வழங்கி னார். ஆசிரியர் சந்தானம், கீழப்பாவூர் மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி, சாமி, ராமச்சந்திரன், சுப்பிரமணியன், கவுன்சிலர் பவானி இலக்குமனதங்கம் ஆகியோர் நன்றி கூறினர். இதற்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்ற தலைவர் தீப்பொறி அப்பாதுரை, செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.







