search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூரில் பாரதியார் மன்றத்தின் சார்பில் ஆண்டு விழா
    X

    ஆண்டுவிழா நடைபெற்றபோது எடுத்த படம்.

    கீழப்பாவூரில் பாரதியார் மன்றத்தின் சார்பில் ஆண்டு விழா

    • விழாவில் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் பாரதியார் மன்றத்தின் சார்பில் 35-வது ஆண்டு விழா கீழப்பாவூரில் உள்ள நாடார் அம்மன் கோவில் மைதானத்தில் நடை பெற்றது.

    முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கச்சாமி முன்னிலை வகித்தார். இதில் கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மதியழகன் வேட்டி-சேலைகள் வழங்கினார். முன்னதாக நெல்லை அண்ணா தொழிற்சங்க முன்னாள் தலைவர் இளஅரசு, கீழப்பாவூர் பாரதியார் மன்ற கவுரவ ஆலோசகர் கே.எம்.அருள்செல்வன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மன்ற செயற்குழு உறுப்பினர் சிங்கக்குட்டி என்கிற குமரேசன், மருதப்பபுரம் வேங்கை சந்திரசேகரன், கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன், சுரண்டை சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் குற்றாலம் பராசக்தி கல்லூரி உதவி பேராசிரியர் சுதனா பிரபாகரன் பாரதியாரை குறித்து எடுத்து கூறினார்.

    தொடர்ந்து சுரண்டை சேர்மத்தாய் வாசன் பள்ளி, பாவூர்சத்திரம் அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மன்ற செயற்குழு உறுப்பினர் பொன் ராஜ கோபால் தொகுத்து வழங்கி னார். ஆசிரியர் சந்தானம், கீழப்பாவூர் மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி, சாமி, ராமச்சந்திரன், சுப்பிரமணியன், கவுன்சிலர் பவானி இலக்குமனதங்கம் ஆகியோர் நன்றி கூறினர். இதற்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்ற தலைவர் தீப்பொறி அப்பாதுரை, செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×