என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • விவசாயிகள் கார்,பிசான சாகுபடி காலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவார்கள்.
      • பூ மகசூல் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்ட விவசாயிகள் தயங்கி வருகின்றனர்.

      செங்கோட்டை:

      மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான செங்கோட்டை சுற்று வட்டார பகுதிக்கே உரிய சிறப்பு பூ மகசூல் ஆகும். ஆண்டுக்கு முப்போகம் விளையக்கூடிய அளவுக்கு பசுமை நிறைந்த பகுதியாக காட்சியளிக்கும் இந்த சுற்றுவட்டாரத்தில், விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்களை பயிரிடுவார்கள்.

      ஏனைய காலங்களில் பூ மகசூலான அத்தியாவசிய தேவையான காய்கறிகள், உளுந்து, சோளம், பயிறு உள்ளிட்ட கோடைகால பயிர்களும், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என அனைத்தும் பயிரிடப்படு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

      வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் வடகரை, அச்சன்புதூர், இலத்தூர், சிவராமபேட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோளம், மொச்சை, மல்லி உள்ளிட்டவை பயிரிடப்பட்டு நல்ல மகசூல் கிடைக்கும்.

      இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் மோட்டை, ஸ்ரீமூலப்பேரி, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளும் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதால் ஆறுகள், கால்வாய்கள் ஓடைகள் அனைத்திலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

      இதனால் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பூ மகசூல் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்ட விவசாயிகள் தயங்கி வருகின்றனர். தற்போது காய்கறிகள் விலை உச்சத்தை தொட்ட நிலையில், காலநிலை மாற்றத்தால் நிலத்தினை உழுது பக்குவப்படுத்தி எதிர்ப்புடன் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

      • மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
      • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

      சிவகிரி:

      சிவகிரி கமிட்டி நாடார் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு தலைமை ஆசிரியர் மணிமாலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

      நிகழ்ச்சியில் பள்ளியின் செயலர், தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பி னர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

      இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாசு தேவ நல்லூரில் அமைந்து ள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப் பட்டது.

      நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினர். வெள்ளானைக்கோட்டை முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் ஞானையா, வாசுதேவ நல்லூர் தெற்கு வட்டார முன்னாள் தலைவர் நெல் கட்டும்செவல் முருகன், வாசுதேவநல்லூர் மூத்த காங்கிரஸ் தலைவர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு அழை ப்பாளராக முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் மோகன் அருணாசலம் கலந்து கொண்டார்.

      சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

      நிகழ்ச்சிக்கு சேனைத் தலைவர் மகாஜன சங்கம் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசி னார். தமிழ் ஆசிரியர் சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

      தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் சிவகிரி ராஜ் நியூ பிரைமரி ஆங்கில பள்ளி கூட்ட ரங்கில் பெருந் தலைவர் காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

      மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலை மை தாங்கினார். சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர காங்கி ரஸ் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னி லை வகித்த னர். பள்ளி நிர்வாகி ராமர் வரவேற்று பேசினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், மூத்த வக்கீலு மான சங்கை.கணேசன், பள்ளி ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். துணை முதல்வர் ராஜம் நன்றி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      வாசுதேவநல்லூர் ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பால சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் காமராஜரின் உருவ சிலைக்கு மலர் மாலை கள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

      • கண்காட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
      • மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துரைக்கப்பட்டது.

      சிவகிரி:

      பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வரும் நிலையில் சிவகிரி விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகிரி கிளை சார்பாக மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு நூல்கள், ஓவியம் சார்ந்த நூல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் மாணவர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

      பள்ளியின் முதல்வர் முருகேசன் தொடக்க உரையாற்றி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். துணை முதல்வர் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட இணை செயலாளர் விண்ணரசு மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் நன்மை கள் மற்றும் அதன் பயன்களை எடுத்துரைத்துரைத்தார்.

      இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலு வலர்கள், மாண வர்கள், பெற்றோர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

      • சுவாமி, நந்தி பெருமானுக்கு 36 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
      • விழாவில் 6 வகை அருள் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

      செங்கோட்டை:

      செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்ப கலச பூஜை, ருத்ர ஜெபம், வருண ஜெபம், தீபாராதனை நடைபெற்றது.

      தொடர்ந்து குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, நந்தி பெருமானுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் போன்ற 36 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கணேஷ பட்டர் செய்தார். விழாவில் கேசரி, பொங்கல், தேங்காய் சாதம், லெமன் சாதம், பஞ்சாமிர்தம், சுண்டல் என 6 வகை அருள் பிரசாதம் வங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

      • புதிய தமிழகம் கட்சி சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
      • ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி அறிவித்ததின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு மது ஒழிப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராசையா தலைமை தாங்கி னார்.

      மாவட்ட இணைச்செய லாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் தங்கபாண்டி தகவல் தொழில்நுட்ப பிரிவு வில்சன், ஓன்றிய செயலா ளர்கள் கந்தவேல், ராமையா, சரவணன், மாடசாமி, செல்வம், மணிகண்டன், நகர செயலாளர் சாமிதுரை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

      ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மது பாட்டில்களை உடைக்க முற்பட்ட போது போலீ சாருக்கும், ஆர்ப்பாட்டக் காாரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் முருகேசன், குருசாமி, முருகேஷ்வரசுந்தர், வேல்ராஜ், மரியதாஸ், அழகுமணி, பாண்டி, தூண்டி காளை, சுப்புராஜ், மங்கன், சாத்தர், கணேஷ் குமார், வேல்சாமி, காளி முத்து, கணேசன், அய்யனார், ஆரோக்கிராஜ், பால்ராஜ், பெருமாள், சாமி, முத்துராஜ், கோபால், கருப்பசாமி, இன்னாசி, மதியழகன், கருசாமி, முத்தாத்தாள், வெள்ளத்தாய், சுப்புலட்சுமி, ரஞ்சிதம், காசியம்மாள், ராதிகா, சின்னத்தாய், சுப்பு லட்சுமி, முத்து, மாடசாமி, வெள்ளச்சாமி, அய்யனசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீ சார் கைது செய்ய முற்பட்ட போது போலீசாருக்கும், கட்சியின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

      இதைத்தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய் யப்பட்டு தனியார் மண்ட பத்தில் அடைக்கப் பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      • கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
      • கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      இலஞ்சி பேரூராட்சியில் சாதாரண மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சின்னதாய் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்கி ஆணையிட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

      இக்கூட்டத்தில் செயல் அலுவலர் அரசப்பன், இளநிலை உதவியாளர் முகைதீன், வரி வசூலர் சங்கரநாராயணன், பேரூராட்சி துணைத் தலைவர் முத்தையா மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

      • ‘ஒன்-டூ- ஒன்’பஸ் சேவையை தொடங்க அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
      • சங்கரன்கோவிலில் இருந்து கிளம்பி இடைவெளி எங்கும் நிற்காமல் நேரடியாக நெல்லைக்கு சென்றடையும்.

      சங்கரன்கோவில்:

      கடந்த 1-ந் தேதி சங்கரன்கோவில் போக்கு வரத்து பணிமனையில் தொழிலாளர்கள் ஓய்வறை மற்றும் தானியங்கி சுத்தப்படுத்தும் எந்திரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

      எம்.எல்.ஏ. கோரிக்கை

      அந்த கூட்டத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் இருந்து நெல்லைக்கு 'ஒன்-டூ-ஒன்' பஸ் சேவையை தொடங்கி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த பஸ் சேவையை தொடங்க அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதன் பேரில் சங்கரன்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் இந்த பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

      பஸ் சேவை

      இந்த பஸ் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு போக்குவரத்து மேலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார் முன்னிலை வகித்தனர்.

      இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு இந்த பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு காலை 5.20, 8.20, 11.25, 2.40, 6.35 ஆகிய நேரங்களிலும், மறு மார்க்கமாக நெல்லையில் இருந்து காலை 6.45, 9.55, 1.10, 4.35, 8.20 ஆகிய நேரங்களிலும், இந்த பஸ் தினமும் வந்து செல்லும்.

      இது சங்கரன்கோவிலில் இருந்து கிளம்பி இடைவெளி எங்கும் நிற்காமல் நேரடியாக நெல்லைக்கு சென்றடையும்.

      நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்டத் துணைச் செய லாளர் புனிதா, நகரச் செய லாளர் பிரகாஷ், தொ.மு.ச. மண்டல அமைப்புச் செய லாளர் மைக்கேல் நெல்சன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், ராஜராஜன் தொண்டர் அணி அப்பாஸ் அலி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் காவல் கிளி, விக்னேஷ், சிவாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • செங்கோட்டை அருகே உள்ள தனியார் ரப்பர் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் தீத்தடுப்பு பயிற்சி நடந்தது.
      • தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சியினை அளித்தனர்.

      செங்கோட்டை:

      முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவுப்படி, செங்கோட்டை அருகே உள்ள தனியார் ரப்பர் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் தீத்தடுப்பு பயிற்சி நடந்தது.

      செங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் செல்வன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளித்தனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

      • கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
      • முகாமில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

      தென்காசி:

      முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. முகாமில் விண்ணப்பித்தல், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, வங்கி கடன், சுய தொழில் தொடங்குதல், பாதுகாப்பு தொடர்பான 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முகாமில், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மையநிர்வாகி ஜெயராணி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் சதாசிவன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வீரவேல், கூட்டுறவுத் துறை மேலாளர் ரெனிஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர்நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

      • தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் போன்றவவை வழங்கப்பட்டது.
      • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து அணிவகுத்து சென்றனர்.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவர் நரேன் வரவேற்று பேசினார். மாணவர் கோதண்டராமன் காமராஜர் பற்றிய கவிதைகளை வாசித்தார். மாணவர் தேவேஷ் காளிதாஸ் பொற்காலம் தந்த பெருந்தலைவர் காமராசர் என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் கற்பலகை எழுத்துக்கள் வடிவியல் பெட்டி உபகரணங்கள் போன்றவற்றை வழங்கினார்.

      நிகழ்ச்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மழலையர் பிரிவு மாணவர்கள் காமராஜர் போல் வேடம் அணிந்து காமராஜரை நினைவுபடுத்தும் வகையில் அணிவகுத்து சென்றனர். சிறப்பு விருந்தினராக மாணவர் ஜெயதர்சன் கலந்துகொண்டு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றியும் காமராஜரின் கல்விப் பணியை பற்றியும் உரையாற்றினார். முடிவில் மாணவி சைனி ப்ரீத்தி நன்றி கூறினார்.

      நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

      • கொடைவிழா கடந்த 7 -ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
      • சாமகொடை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      செங்கோட்டை:

      செங்கோட்டை அருகில் கச்சேரி காம்பவுண்ட் வளாகத்தில் மருத்துவ சமுதா யத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டை மாடன், கோட்டை மாடத்தி மற்றும் கோட்டை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு கொடைவிழா கடந்த 7 -ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

      இதையொட்டி நேற்று கணபதிஹோமம், பால்குடம் ஊர்வலம், பிற்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் மதியம் அன்ன தானம், மாலையில் பொங்க லிடுதல் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் தலைமையில், தலைவர் கருப்பையா, செயலாளர் செல்வா, பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

      • 4 வழிச்சாலை பணிக்காக காமராஜர் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
      • காமராஜரின் வெண்கல சிலையானது மினி லாரியில் கொண்டு வரப்பட்டது.

      தென்காசி:

      ஆலங்குளத்தில் 9 அடி உயரம் மற்றும் 680 கிலோ எடை கொண்ட காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை மேளதாளங்கள் முழங்க அதன் பீடத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா வருகிற 15 -ந்தேதி தேதி நடைபெறுகிறது.

      காமராஜர் சிலை

      நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரே ஏற்கனவே உள்ள காமராஜர் சிலையானது 4 வழிச்சாலை பணிக்காக அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.

      இந்நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையத்தின் கீழ்புறம் இருந்த வேன் ஸ்டாண்ட் இருந்த பகுதியில் காமராஜர் சிலை மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. மற்றும் அரசு அதிகாரிகளின் உத்தர வின் பெயரில் சிலை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

      வருகிற 15-ந்தேதி காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய காமராஜர் சிலை அமைப்பதற்கு சுமார் 680 கிலோ எடை கொண்ட 9 அடி உயரத்தில் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலையானது மினி லாரியில் கொண்டு வரப்பட்டது.

      சாலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிலைக்கு இளைஞர்கள் மற்றும் ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      பின்பு கிரேன் உதவியுடன் காமராஜர் சிலையானது தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டது.

      இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், நெல்லை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராமசுப்பு, சிலை அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜாண் ரவி, எம்.எஸ். காமராஜ், , பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.கண்ணன், ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், நகர செயலாளர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஞான பிரகாஷ், வக்கீல்கள் நெல்சன், சாந்தகுமார், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, வக்கீல் ஜாண்சன், ச.ம.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஜெகன், சோனா மகேஷ்,பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சிலையை முன்னாள் எம்.பி. எச். வசந்த குமாரின் குடும்பம் சார்பில் அவரது மகன் விஜய் வசந்த் அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.


      காமராஜர் சிலை கட்டுமான பணிக்காக ரூ.1 லட்சம் நிதியினை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கிய போது எடுத்த படம்.

      காமராஜர் சிலை கட்டுமான பணிக்காக ரூ.1 லட்சம் நிதியினை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கிய போது எடுத்த படம்.


       


      ×