செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

சுவாமி, நந்தி பெருமானுக்கு 36 வகையான அபிஷேகம் நடைபெற்றது.விழாவில் 6 வகை அருள் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்ப கலச பூஜை, ருத்ர ஜெபம், வருண ஜெபம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, நந்தி பெருமானுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் போன்ற 36 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கணேஷ பட்டர் செய்தார். விழாவில் கேசரி, பொங்கல், தேங்காய் சாதம், லெமன் சாதம், பஞ்சாமிர்தம், சுண்டல் என 6 வகை அருள் பிரசாதம் வங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com