என் மலர்
நீங்கள் தேடியது "‘ஒன்-டூ- ஒன்’ பஸ்"
- ‘ஒன்-டூ- ஒன்’பஸ் சேவையை தொடங்க அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- சங்கரன்கோவிலில் இருந்து கிளம்பி இடைவெளி எங்கும் நிற்காமல் நேரடியாக நெல்லைக்கு சென்றடையும்.
சங்கரன்கோவில்:
கடந்த 1-ந் தேதி சங்கரன்கோவில் போக்கு வரத்து பணிமனையில் தொழிலாளர்கள் ஓய்வறை மற்றும் தானியங்கி சுத்தப்படுத்தும் எந்திரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.
எம்.எல்.ஏ. கோரிக்கை
அந்த கூட்டத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் இருந்து நெல்லைக்கு 'ஒன்-டூ-ஒன்' பஸ் சேவையை தொடங்கி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த பஸ் சேவையை தொடங்க அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதன் பேரில் சங்கரன்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் இந்த பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
பஸ் சேவை
இந்த பஸ் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு போக்குவரத்து மேலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார் முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு இந்த பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு காலை 5.20, 8.20, 11.25, 2.40, 6.35 ஆகிய நேரங்களிலும், மறு மார்க்கமாக நெல்லையில் இருந்து காலை 6.45, 9.55, 1.10, 4.35, 8.20 ஆகிய நேரங்களிலும், இந்த பஸ் தினமும் வந்து செல்லும்.
இது சங்கரன்கோவிலில் இருந்து கிளம்பி இடைவெளி எங்கும் நிற்காமல் நேரடியாக நெல்லைக்கு சென்றடையும்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்டத் துணைச் செய லாளர் புனிதா, நகரச் செய லாளர் பிரகாஷ், தொ.மு.ச. மண்டல அமைப்புச் செய லாளர் மைக்கேல் நெல்சன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், ராஜராஜன் தொண்டர் அணி அப்பாஸ் அலி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் காவல் கிளி, விக்னேஷ், சிவாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






