நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
இன்று வெள்ளிக்கிழமை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார்.
மசோதா மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு
பிரதமர் மோடியை அறிக்கை தாக்கல் செய்யக்கோரி வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யால் கொண்டு வரப்பட்ட மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்த சோனியா காந்தி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி. ரஜனி பாட்டீல் ஆகியோரை சந்தித்தார். இருவரும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம் நாகேஸ்வர ராவ் பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர் கூறுகையில் ‘‘இந்தியா கூட்டணி ஒன்றாக இணைந்து உள்ளது. கூட்டணி இந்த ஆலோசனையை பரிந்துரை செய்தது. இதுகுறித்து நேற்று முடிவு செய்தோம். இன்று காங்கிரஸ் தலைவர் இதை முன்னோக்கி நகர்த்தி கொண்டு செல்வார். பிரதமர் மோடி ஆணவத்தை கைவிட விரும்புகிறோம். பிரதமர் மோடியில் செயல் அகந்தை பிடித்த நபர் போன்று உள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றம் வருவதில்லை. அறிக்கை கொடுப்பதில்லை. எங்களுடைய கடைசி ஆயுதமான இதை பயன்படுத்துவது எங்களுடைய பணி என நாங்கள் உணர்கிறோம்’’ என்றார்.