நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து காங்கிரஸ்... ... நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர் கூறுகையில் ‘‘இந்தியா கூட்டணி ஒன்றாக இணைந்து உள்ளது. கூட்டணி இந்த ஆலோசனையை பரிந்துரை செய்தது. இதுகுறித்து நேற்று முடிவு செய்தோம். இன்று காங்கிரஸ் தலைவர் இதை முன்னோக்கி நகர்த்தி கொண்டு செல்வார். பிரதமர் மோடி ஆணவத்தை கைவிட விரும்புகிறோம். பிரதமர் மோடியில் செயல் அகந்தை பிடித்த நபர் போன்று உள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றம் வருவதில்லை. அறிக்கை கொடுப்பதில்லை. எங்களுடைய கடைசி ஆயுதமான இதை பயன்படுத்துவது எங்களுடைய பணி என நாங்கள் உணர்கிறோம்’’ என்றார்.
Update: 2023-07-26 04:46 GMT