இந்தியா

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-07-20 10:49 IST   |   Update On 2023-08-02 12:04:00 IST
2023-07-26 00:13 GMT

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

2023-07-25 12:34 GMT

மக்களவை நாளைக்கு ஒத்திவைப்பு

பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதன்பின்னர் மக்களவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

2023-07-25 12:33 GMT

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மக்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.

2023-07-25 11:48 GMT

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா- 2022, மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2023-07-25 11:45 GMT

சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. அதன்பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

2023-07-25 07:50 GMT

மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் அமித் ஷா பேசுவார். நாங்கள் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்றுள்ள பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து பேச விரும்புகிறோம் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

2023-07-25 05:58 GMT

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு

2023-07-25 05:57 GMT

மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு

2023-07-25 05:36 GMT

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

2023-07-24 09:16 GMT

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

Tags:    

Similar News