நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் குறித்து, அக்கட்சியின் மக்களவை எம்.பி. ராகவ் சதா கூறுகையில் ‘‘மாநிலங்களவை தலைவர் சஞ்சய் சிங்கை சஸ்பெண்ட் செய்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது சரியானது அல்ல. அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரானது. சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மாநிலங்களவை தலைவரிடம் சென்று, சஸ்பெண்ட்-ஐ திரும்ப பெற கேட்டுக்கொண்டோம்’’ என்றார்.
மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் மக்களவை முடங்கிய நிலையில், இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டம் மீண்டும் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. என்றாலும், அலுவல் பணி நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
மணிப்பூர் வன்முறை மற்றும் மாநிலங்களவை பதிவில் இருந்து சில வார்த்தைகளை அவைத்தலைவர் நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்து முழக்கம் எழுப்பியது போன்ற காரணங்களால் மாநிலங்களவையில் இன்று காலை அமர்வு பாதிக்கப்பட்டது. மதிய உணவிற்குப் பிறகு மீண்டும் அவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதனால் மாநிலங்களவை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்குப் பிறகு அவை கூடியதும் அதே விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதனால் திங்கட்கிழமை காலை வரை மக்களவை ஒத்தி வைக்கப்பப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு