என் மலர்
இந்தியா

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
- ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்.
- 17 அமர்வுகள் இடம்பெறும் நிலையில், 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.
இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிக்கட்சிகள் கேள்விகள் எழுப்பி நெருக்கடி அளித்து வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Live Updates
- 2 Aug 2023 12:04 PM IST
நேற்று 3 மசோதாக்களை நிறைவேற்றி மக்களவை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மணிப்பூர் பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். சிலர் சபையின் மையப்பகுதியில் நின்றனர். சிலர் சபாநாயகர் இருக்கை அருகே நின்றனர்.
கையில் பதாகைகளை பிடித்தபடி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரச்சினை எழுப்ப அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் ஓம்பிர்லா உறுதி அளித்தார்.
பின்னர், கேள்வி நேரம் தொடங்கியது. 3 கேள்விகளும், அவை தொடர்பான துணைக்கேள்விகளும் எழுப்பப்பட்டன. அமளி அதிகரித்ததால், சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, அமளிக்கிடையே அடுத்தடுத்து 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா, கடலோர பகுதிகள் கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, எஸ்.சி. தொடர்பான அரசியல் சட்ட ஆணை திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் குறுகிய நேர விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.
இதில், பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா, பிறப்பு சான்றிதழை கல்வி நிறுவன சேர்க்கை, ஓட்டுனர் உரிமம் பெறுதல், வாக்காளர் பட்டியல், ஆதார் எண் பெறுதல், திருமண பதிவு, அரசு பணி நியமனம் என அனைத்துக்கும் ஒரே ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கிறது.
மேலும், தேசிய, மாநில அளவிலான பிறப்பு-இறப்பு தகவல் தொகுப்பை உருவாக்க வழிவகுக்கிறது.
டெல்லி அவசர சட்டத்துக்கு மாற்றாக, தேசிய தலைநகர் டெல்லி பிராந்திய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
- 1 Aug 2023 11:36 AM IST
9 வது நாளாக இன்றும் பாராளுமன்றம் முடங்கியுள்ளது. மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 31 July 2023 11:31 AM IST
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று பாராளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 28 July 2023 1:08 PM IST
மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட போதிலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2023 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, பின்னர் திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- 28 July 2023 11:39 AM IST
மாநிலங்களவை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






