பாகிஸ்தான் உடனான போர்நிறுத்தத்திற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததா? - ஜெய்சங்கர் விளக்கம்
- எதிர்க்கட்சியின் பாகிஸ்தானை காக்க விரும்புகின்றனர். இந்தியாவை காக்க விரும்பவில்லை.
- பயங்கரவாதிகளின் இலக்குகளை அளிப்பதே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
* பாகிஸ்தான் உடனான போர்நிறுத்தத்திற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை.
* பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியே எங்கள் தாக்குதல் என்று பிரதமர் மோடி அமெரிக்காவிடம் கூறினார்.
* அமைதி வேண்டும் என பாகிஸ்தான் கெஞ்சியதின் அடிப்படையில் தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது
* பாகிஸ்தான் உடனான போரை நிறுத்துவதற்கு யாரும் இடைத்தரகராக செயல்படவில்லை.
* பயங்கரவாதிகளின் இலக்குகளை அளிப்பதே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.
* எதிர்க்கட்சியின் பாகிஸ்தானை காக்க விரும்புகின்றனர். இந்தியாவை காக்க விரும்பவில்லை.
* பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை நிரந்தரமாக கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது.
என்று தெரிவித்தார்.