செய்திகள்

தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது - கேரள முதல் மந்திரி புகழாரம்

Published On 2018-12-16 13:18 GMT   |   Update On 2018-12-16 13:18 GMT
சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது என புகழாரம் சூட்டினார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin #PinarayiVijayan
சென்னை:

சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பேசுகையில், தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது. கருணாநிதி தான் ஆற்றிய அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்.

சமூக வளர்ச்சியுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியே முக்கியம் என்றவர் கருணாநிதி. பெண்கள் முன்னேற்றத்திற்கு கருணாநிதி ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இங்குதான் திருநங்கையருக்கென வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin #PinarayiVijayan
Tags:    

Similar News