என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புது லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
லெனோவோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு கழற்றக்கூடிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை யோகா டூயட் 7i மற்றும் ஐடியாபேட் டூயட் 3ஐ என அழைக்கப்படுகின்றன.
லெனோவோ யோகா டூயட் 7i மாடலில் கழற்றும் வசதி, பேக்லிட் ப்ளூடூத் 5 கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்-ஸ்டான்டு வழங்கப்படுகிறது. இதனை டேப்லட் மற்றும் லேப்டாப் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும்.
இதில் லெனோவோ வாய்ஸ் அசிஸ்டண்ட், பேஷியல் லாக்-இன், 11th Gen இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ், டால்பி ஆடியோ, டால்பி விஷன் போன்ற அம்சங்கள் உள்ளன.

கழற்றக்கூடிய ப்ளூடூத் 5 கீபோர்டு கொண்ட முதல் ஐடியாபேட் லேப்டாப் மாடலாக ஐடியாபேட் டூயட் 3ஐ அறிமுகமாகி இருக்கிறது. இதில் இன்டெல் செலரான் பிராசஸர், இன்டெல் UHD கிராபிக்ஸ், 10.3 இன்ச் FHD IPS பேனல் டிஸ்ப்ளே, 4 ஜிபி மெமரி உள்ளது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 7 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
லெனோவோ யோகா டூயட் 7i விலை ரூ. 79,999 மற்றும் ஐடியாபேட் டூயட் 3ஐ விலை ரூ. 29,999 ஆகும். இரு மாடல்களின் விற்பனை ஜூலை 12 ஆம் தேதி லெனோவோ மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்குகிறது.
இந்தியாவில் புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்துவது குறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டமாகும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கை நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பை பெற்றது.

வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப் செயல்பாடுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் வாட்ஸ்அப் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, `வாட்ஸ்அப் தனது புதிய கொள்கைகளை தற்போதைக்கு அமல்படுத்தாது,' என தெரிவித்து இருக்கிறார்.
`இதுதவிர புது கொள்கைகளுக்கு அனுமதி வழங்காதவர்களும் செயலியின் அனைத்து அம்சங்களையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும்,' என வாட்ஸ்அப் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் தெரிவித்து உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கிறது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புது பிஷாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 895 பிராசஸர் மற்றும் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேமரா சென்சாரை சாம்சங் உருவாக்கி வருகிறது.

200 எம்பி கேமரா சென்சார் முதன் முதலில் சாம்சங் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் 200 எம்பி சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
இதற்கான காரணம் வெளியாகவில்லை. எனினும், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் அதிக மெகாபிக்சல் கேமராவை வழங்குவதோடு, பெரிய பிக்சல் அளவை வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் 200 எம்பி கேமராவுடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம்.
அமேசான் நிறுவனம் அதிக சலுகை மற்றும் தள்ளுபடியுடன் பொருட்களை விற்பனை செய்யும் பிரைம் டே சேல் தேதியை அறிவித்து இருக்கிறது.
அமேசான் பிரைம் டே சேல் இம்முறை ஜூலை 26 ஆம் தேதி துவங்குகிறது. ஜூலை 26 நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, ஜூலை 27 ஆம் தேதியுடன் இந்த சிறப்பு விற்பனை நிறைவு பெறுகிறது. சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவில் ஏராளமான பொருட்களுக்கு தள்ளுபடி, சலுகை, சேமிப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
#PrimeDay is here! 🤩
— Amazon India News (@AmazonNews_IN) July 8, 2021
Save the dates 🗓
2️⃣6️⃣•0️⃣7️⃣•2️⃣1️⃣ – 2️⃣7️⃣•0️⃣7️⃣•2️⃣1️⃣
Celebrating 5 years of Prime in India, #DiscoverJoy with two days of savings, great deals, blockbuster entertainment, and much more. 🛍📽🎧
Read more 👉🏼 https://t.co/F4XfMbhcyTpic.twitter.com/UOyH4AU3DE
சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஒரே நாளில் சுமார் 300-க்கும் அதிக பொருட்கள் அமேசானில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த பிரைம் டே சேல் ஜூன் மாதத்திலேயே நடத்த அமேசான் திட்டமிட்டது. எனினும், கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பிரைம் டே சேல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது தேதி உறுதிப்படுத்தப்பட்டு பிரைம் டே சேல் இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனை பிரைம் சந்தா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சலுகைகள், மாத தவணை வசதி போன்றவையும் இந்த விற்பனையில் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சில தினங்களுக்கு முன் பெயர் குறிப்பிடாமல் சியோமி, புது ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான டீசரை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மாடல் ரெட்மி நோட் 10டி 5ஜி என தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.

தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் இதே மாடல் இந்தியாவில் ரெட்மி நோட் 10டி 5ஜி பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10டி 5ஜி மற்றும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடல்கள் இடையே அதிக வித்தியாசம் இருக்காது என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் மற்றொரு வெர்ஷனாகவே போக்கோ எம்3 ப்ரோ 5ஜி இங்கு அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ52 இந்த ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்டதில் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்டை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

கேலக்ஸி ஏ52 புது வேரியண்ட் SM-A528B எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி பெயரில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பி.ஐ.எஸ். சான்று பெற்றுவிட்டதால், விரைவில் இது வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் அம்சங்கள் முந்தைய ஏ52 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும். எனினும், இதில் வித்தியாசமான கேமரா செட்டப், பெரிய பேட்டரி, அதிவேக பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி நிறுவனத்தின் புதிய SRS-NB10 நெக்பேண்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சோனி நிறுவனம் புதிதாக SRS-NB10 வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஸ்பீக்கர் யூனிட் மேல்புறமாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. பேசிவ் ரேடியேட்டர் மூலம் bass பூஸ்ட் செய்யப்படுகிறது.

இத்துடன் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி, வாய்ஸ் பிக்கப் தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நெக்பேண்ட் ஸ்பீக்கரை ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம். இத்துடன் பிரத்யேக மியூட், வால்யூம் மற்றும் பவர் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி SRS-NB10 நெக்பேண்ட் ஸ்பீக்கர் 113 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய சோனி SRS-NB10 விலை 149.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11,203 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்குகிறது.
ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும். இதற்காக ஒன்பிளஸ் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி இருக்கின்றன.

இந்த பிராசஸரின் செயல்திறன் டிமென்சிட்டி 1200-ஐ விட வித்தியாசமானதாக இருக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்து இருக்கின்றன. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் புகைப்படங்களை மிக தெளிவாக எடுக்க வழி செய்யும். இதுதவிர பயன்பாட்டின் போது சிறப்பான அனுபவம் கிடைக்கும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.
புதிய ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. முந்தைய வழக்கப்படி புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அமேசான் தளத்திலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டது. முன்னதாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக அறியப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.

இதுவரை பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். விரைவில் இந்த கேமின் ஐஒஎஸ் வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கிராப்டான் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை குறைந்தபட்சம் ஆண்ட்ராய்டு 5.1.1 மற்றும் 2 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் Early Access ஜூன் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.
சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி பட்ஸ் 2 விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புது கேலக்ஸி பட்ஸ் 2 ஏற்கனவே அறிமுகமான கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மாடல்களை விட வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி பட்ஸ் 2 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் விலை கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இந்த மாடல் தலைசிறந்த இன்-இயர் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய கேலக்ஸி பட்ஸ் 2 வைட், லிலக் மற்றும் ஆலிவ் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் 2 விலை 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11,100 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த நின்டென்டோ ஸ்விட்ச் புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
நின்டென்டோ ஸ்விட்ச் (OLED மாடல்) புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இது இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என தெரிகிறது.

புதிய நின்டென்டோ ஸ்விட்ச் மாடல் தற்போது கிடைக்கும் அனைத்து நின்டென்டோ ஸ்விட்ச் கேம்கள் மற்றும் ஜாய்-கான் கண்ட்ரோலர்களை சப்போர்ட் செய்யும். புதிய OLED மாடலில் சற்றே பெரிய டிஸ்ப்ளே, முந்தைய மாடலை விட இருமடங்கு இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
பெரிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தாலும், புதிய கன்சோல் அளவில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய நின்டென்டோ ஸ்விட்ச் OLED மாடல் விலை 349.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,100 ஆகும். முன்னதாக 2017-இல் அறிமுகம் செய்யப்பட்ட நின்டென்டோ ஸ்விட்ச் விலை 299.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22,400 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன் மாடலின் இந்திய விற்பனை ஜூலை 16 ஆம் தேதி துவங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன் மாடலையும் ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது. தற்போது லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய விற்பனை ஜூலை 16 ஆம் தேதி துவங்கும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலியில் ஜூலை 7 முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 ஆகும். முன்பதிவு செய்வோர் ஜூலை 12 முதல் ஜூலை 15 ஆம் தேதிக்குள் மீதி தொகையை செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறை போன்ற சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 15 வரை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன் மாடலில் 1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, SpO2 மாணிட்டரிங், GPS, 5ATM+ IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 4 ஜிபி மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் கோபால்ட் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.






