என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    விவோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் காப்புரிமை தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.


    சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விவோ நிறுவன சாதனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காப்புரிமை கழற்றக்கூடிய இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்டு உள்ளது.

    காப்புரிமை விவரங்களின் படி டிஸ்ப்ளேவில் உள்ள செல்பி கேமராவை ஸ்மார்ட்போனில் இருந்து கழற்ற முடியும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கழற்றக்கூடிய கேமரா மாட்யூல் ஸ்மார்ட்போனின் ஓரத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த டிசைன் ஸ்மார்ட்போனிற்கு புல் ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குகிறது.

     விவோ ஸ்மார்ட்போன் வரைபடம்

    அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளன. காப்புரிமையில் இந்த கேமராவை எவ்வாறு கழற்ற வேண்டும் என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.  

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பைபர் இணைய சேவை மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்குகிறது.


    ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பைபர் தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்கி வருகின்றன. சமீப காலங்களில் பைபர் சார்ந்த இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

    பைபர் இணைய சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 799 மற்றும் ரூ. 999 விலையில் மாதாந்திர சலுகைகளாக வழங்கி வருகிறது. இவற்றில் முறையே 100 Mbps மற்றும் 200 Mbps வேகத்தில் டேட்டா வழங்குகின்றன. 

     கோப்புப்படம்

    இரு சலுகைகளிலும் 3300 ஜி.பி. டேட்டா, ஓ.டி.டி. தளங்களுக்கான சந்தா, லேண்ட்லைன் இணைப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்ற சலுகைகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. 

    எனினும், ஏர்டெல் மற்றும் ஜியோ சலுகை கட்டணங்கள் பி.எஸ்.என்.எல். வசூலிப்பதை விட அதிகம் ஆகும். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் தனது ரெட்மி நொட் 10 ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனினை- 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி + 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    கடந்த ஒரே மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த முறையும் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 10 பேஸ் மாடலான 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 13,999 என மாறி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விலை அறிமுகமானது முதல் இதுவரை ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     ரெட்மி நோட் 10

    இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் இதன் விலை ரூ. 15,499 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 10 பேஸ் வேரியண்ட் புதிய விலை எம்.ஐ. மற்றும் அமேசான் வலைதளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது.

    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ரெட்மி 10 பிரைம் மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் வாட்ச் 4 கிளாசிக் மாடல்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கின்றன.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ்- கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களில் எக்சைனோஸ் டபிள்யூ920 5 நானோமீட்டர் பிராசஸர், ஒன் யு.ஐ. வாட்ச் 3 ஓ.எஸ். மற்றும் வியர் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வாட்ச்கள் முறையே 1.2 மற்றும் 1.4 இன்ச் அளவு திரை கொண்டிருக்கின்றன.

    கேலக்ஸி வாட்ச் 4 மாடலில் அலுமினியம் கேஸ், டச் பெசல், கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேசிங், சுழலும் பெசல் உள்ளது. இவற்றில் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 20 எம்.எம். வாட்ச் ஸ்டிராப்கள் உள்ளன.

     சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4

    இந்திய விலை விவரம்

    கேலக்ஸி வாட்ச் 4 40 எம்.எம். ப்ளூடூத் (பின்க் கோல்டு, பிளாக்&சில்வர்) ரூ. 23,999
    கேலக்ஸி வாட்ச் 4 40 எம்.எம். எல்.டி.இ. (பின்க் கோல்டு, பிளாக்&சில்வர்) ரூ. 28,999
    கேலக்ஸி வாட்ச் 4 44 எம்.எம். ப்ளூடூத் (கிரீன், பிளாக்&சில்வர்) ரூ. 26,999
    கேலக்ஸி வாட்ச் 4 44 எம்.எம். எல்.டி.இ. (கிரீன், பிளாக்&சில்வர்) ரூ. 31,999
    கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 42 எம்.எம். ப்ளூடூத் (பிளாக்&சில்வர்) ரூ. 31,999
    கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 42 எம்.எம். எல்.டி.இ. (பிளாக்&சில்வர்) ரூ. 36,999
    கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 46 எம்.எம். ப்ளூடூத் (பிளாக்&சில்வர்) ரூ. 34,999
    கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 46 எம்.எம். எல்.டி.இ. (பிளாக்&சில்வர்) ரூ. 39,999

    புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சாம்சங் மற்றும் முன்னணி வலைதளங்கள், ஆப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகின்றன. இவற்றின் விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்குகின்றன.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் விலை கடந்த ஆண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் விலை பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை வெளியாகி இருந்த தகவல்களில் 2021 ஐபோன் மாடல்கள் விலை கடந்த ஆண்டை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 13 சீரிஸ் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் சிப்செட் மற்றும் இதர உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஐபோன் 13 சீரிஸ் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

     ஐபோன்

    ஆப்பிள் நிறுவனத்திற்கு சிப்செட் உற்பத்தி செய்து கொடுக்கும் நிறுவனங்கள் முன்பு நிர்ணயிக்கப்பட்டதை விட 20 சதவீதம் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க இருப்பதால், ஐபோன் 13 சீரிஸ் விலையும் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    வாட்ஸ்அப் செயலியில் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.


    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதனை வாட்ஸ்அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. 

    முன்னதாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம்.

     கோப்புப்படம்

    இது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் மற்றும் இதர எமோஜி மூலம் ரியாக்ட் செய்வதை போன்றே செயல்படும். இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்ய, குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பாப்-அப் ஆகும் எமோஜியில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செயலியிலும் புதிய அம்சம் இதேபோன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

    சியோமி நிறுவனம் எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.க்களை அசத்தல் சலுகைகளுடன் விற்பனை செய்ய இருக்கிறது.


    சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. மூன்று மாடல்களிலும் 4கே டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் என்ஜின் 2, டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் / ஹெச்.டி.ஆர். 10 என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் குவாட்கோர் மீடியாடெக் எம்.டி.9611 பிராசஸர், மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு. கிராபிக்ஸ், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 மற்றும் பேட்ச்வால் 4, ஹேண்ட்ஸ்-பிரீ கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றன.

     சியோமி எம்.ஐ. டிவி. 5எக்ஸ்

    இந்தியாவில் புதிய எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் 43 இன்ச் விலை ரூ. 31,999, 50 இன்ச் மாடல் ரூ. 41,999 மற்றும் 55 இன்ச் மாடல் விலை ரூ. 47,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவை ப்ளிப்கார்ட், எம்.ஐ. ஹோம், எம்.ஐ. ஸ்டூடியோ, குரோமா போன்ற விற்பனை மையங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

    புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எளிய தவணை முறை வசதி, வட்டியில்லா மாத தவணை போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் 6 முழு சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


    சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.56 இன்ச் புல் ஸ்கிரீன் ஆமோலெட் டச் டிஸ்ப்ளே, 30-க்கும் அதிக உடற்பயிற்சி மோட்கள், இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஒ.2 சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஸ்டிரெஸ் மாணிட்டரிங், டீப் பிரீத்திங் கைடன்ஸ், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 125 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரி 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் இதில் சார்ஜிங் கனெக்டர் உள்ளது.

     எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6

    எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3499 ஆகும். எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 அமேசான், எம்.ஐ. மற்றும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
    சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல் விமானத்தில் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் வகையிலான பிரச்சினைகளை கொண்டிருந்தன. இதன் காரணமாக பல்வேறு அசம்பாவிதங்களும் அரங்கேறியதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருக்கின்றனர்.

     வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் சாம்சங் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டிள் நோக்கி சென்று கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவரின் சாம்சங் கேலக்ஸி ஏ21 திடீரென தீப்பற்றி எரிந்தது.

    இந்த சம்பவத்தில் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் முழுமையான ஆய்வு நடத்தப்படும் என சாம்சங் தெரிவித்து இருக்கிறது.
    புதிய நிறத்தில் உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் விற்பனை விவரம் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 கோ கிரீன் வுட்ஸ் நிற மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் புளூ ஹேஸ் மற்றும் கிரே சியெரா நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பின் நார்டு 2 புதிய நிறம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த மாடல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. 

     ஒன்பிளஸ் நார்டு 2

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2 கோ கிரீன் வுட்ஸ் நிற மாடல் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 27,999 என்றும், 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல்கள் விலை முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

    புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்லேட் பிளாக் மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    ரெட்மி பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.


    ரெட்மி நிறுவனம் செப்டம்பர் 3 ஆம் தேதி ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. தற்போது இதே தினத்தில் ரெட்மி இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது. 

    புதிய ரெட்மி இயர்பட்ஸ் குவால்காம் பிராஸர், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இது அதிகபட்சம் 30 மணி நேர பிளேபேக் வழங்கும் என்றும் ரெட்மி தெரிவித்துள்ளது. இத்துடன் ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.



    இந்த இயர்பட்ஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி ஏர்டாட்ஸ் 3 என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த இயர்போனின் விலை ரூ. 3 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம்.

    ×