என் மலர்
தொழில்நுட்பம்
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஒப்போ ஏ95 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்திய ரெண்டர்களின் படி புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் செவ்வக கேமரா மாட்யூல், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ சில்வர் என இருவித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது.

ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பிளாஷ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 11, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது.
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இதுதவிர இது ரெட்மி நோட் 11 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்த நிலையில், போக்கோ எம்4 ப்ரோ 5ஜி அம்சங்கள் பற்றிய விவரங்களை போக்கோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் 6 நானோமீட்டர் சிப்செட் வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் எல்.சி.டி. பேனல் கொண்ட டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் உற்பத்தி குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை ஒதுக்க ஐபேட் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் மேற்கொண்ட திட்டத்தில் தற்போது 50 சதவீத ஐபேட் யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆசிய சந்தைகளில் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது, ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளிலும், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 13 உற்பத்தி சீராக நடைபெற்று வந்தது. உற்பத்தி நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் அதிக யூனிட்களை வாங்கும் திறன் உள்ளிட்ட காரணங்களால் இது சாத்தியமானது.

வரும் மாதங்களில் ஐபேட் மாடல்களை விட ஐபோன் 13 மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே ஐபோன் 13 உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ரெட்மியின் சமீபத்திய நோட் 11 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகமாகி இருக்கிறது.
இன்று ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சீனாவில் துவங்கியது. இதில் ஒரு மணி நேரத்திற்குள் 5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்கப்பட்டதாக ரெட்மி அறிவித்தது. இதைத் தொடர்ந்து டபுள் 11 விற்பனை துவங்கிய 1 நிமிடம் 45 நொடிகளில் 2 பில்லியன் யுவான்களுக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை ரெட்மி விற்பனை செய்தது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 மாடலில் 6.6 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 5ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த புது ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது.
ஹூவாய் வாட்ச் பிட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் ஆகஸ்ட் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூவாய் வாட்ச் பிட் பெரிய டிஸ்ப்ளே, 24x7 இதய துடிப்பு சென்சார், பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ஹூவாய் வாட்ச் பிட் மாடலில் 1.64 இன்ச் விவிட் அமோலெட் டிஸ்ப்ளே, 97 வொர்க்-அவுட் மோட்கள், நாள் முழுக்க எஸ்.பி.ஓ2 டிராக்கிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் வாட்ச் பேஸ்கள், 12 அனிமேட் செய்யப்பட்ட பிட்னஸ் பயிற்சிகள் உள்ளன.

இந்தியாவில் புதிய ஹூவாய் வாட்ச் பிட் விலை ரூ. 8990 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை நாளை (நவம்பர் 2) அமேசான் தளத்தில் துவங்குகிறது. புது ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோருக்கு அசத்தலான அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செயலியின் புதிய பீட்டா வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வெளியாகி இருக்கின்றன.
வாட்ஸ்அப் புதிய பீட்டா வெர்ஷனில் பேஸ்புக்கின் புதிய பெயர்- மெட்டா தோன்றுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பிரம் மெட்டா என காட்சியளிக்கிறது. இதுவரை வாட்ஸ்அப் பிரம் பேஸ்புக் என்றே தோன்றிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் இந்த மாற்றம் அமலாக மேலும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய பெயரை அறிவித்தது. இத்துடன் சமூக வலைதள நிறுவனமாக மட்டும் இல்லாமல், மெய்நிகர் ஆன்லைன் உலகமாக மெட்டாவெர்ஸ் நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்தது.

புது மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.22.21 வெர்ஷனில் காட்சியளிக்கிறது. இது வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் மற்றும் செட்டிங் மெனுவில் காட்சியளிக்கிறது. பீட்டா வெர்ஷனிலும் இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் தோன்றவில்லை.
சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
சியோமி 12 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. சீனாவின் வெய்போ தளத்தில் சியோமி 12 புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய புகைப்படங்களின் படி புதிய சியோமி 12 தோற்றத்தில் நீளமாக காட்சியளிக்கிறது.
மேலும் சியோமி 12 சிறிய பன்ச் ஹோல் டிசைன், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தெரிகிறது.

முந்தைய தகவல்களின்படி சியோமி 12 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இதுதவிர குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக சியோமி 12 இருக்கும் என கூறப்படுகிறது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேக்புக் ப்ரோ மாடலில் அதை மாற்ற இதை செய்யுங்கள் என அறிவித்து இருக்கிறது.
2021 மேக்புக் ப்ரோ மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகப்படியான மாற்றங்களை கொண்டிருக்கும் 2021 மேக்புக் ப்ரோ மாடலில் புதிதாக நாட்ச் வைத்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து நாட்ச் அம்சத்திற்கு ஆன்லைனில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், புதிய மேக்புக் ப்ரோ மாடலில் நாட்ச்-ஐ மறைக்க ஆப்பிள் புது வழிமுறையை அறிவித்து இருக்கிறது. அதன்படி குறிப்பிட்ட செயலியை திறந்ததும், நாட்ச் இடையூறை மறைக்க செயலியை குவிட் செய்ய வேண்டும். பின் 'பைண்டர்' ஐகானை க்ளிக் செய்து, சைடுபாரில் உள்ள 'அப்லிகேஷன்ஸ்' ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி செயலியை தேர்வு செய்து, 'பைல்' -- 'கெட் இன்போ' அல்லது 'கமாண்ட்-ஐ' க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து 'இன்போ விண்டோ'வில் 'ஸ்கேல் டு பிட் பிலோ பில்ட்-இன் கேமரா' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்ததும், மேக்புக் ப்ரோவில் உள்ள நாட்ச்-இன் கீழ் குறிப்பிட்ட செயலி கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் மாறிவிடும். இதே முறையை அனைத்து செயலிகளுக்கும் பின்பற்றலாம்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில், ரியல்மி நிறுவனம் ஜிடி ப்ரோ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஜிடி ப்ரோ வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.

அதன்படி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ப்ரோ மாடல் என்பதால், இதில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனை விட சில அப்கிரேடுகள் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இப்படித் தான் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி பிராண்டின் நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக சியோமி 11ஐ மற்றும் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் குறியீடுகளில் அம்பலமாகி இருந்தன.
தற்போது இரு ஸ்மார்ட்போன்களும் ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிசின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல்களாக இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வேதச சந்தையில் நோட் 11 ப்ரோ சீரிஸ் ரி-பிராண்டு செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருப்பதால் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் எனும் பிராண்டிங் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில் உள்ள 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிசுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 5ஜி மாடல் இந்தியாவில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடல் சர்வதேச சந்தையில் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் இந்திய விற்பனை விவரங்ளை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. கூகுள் மற்றும் ஜியோ கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் ரூ. 6,499 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரூ. 1,999 மற்றும் 18/24 மாதங்கள் மாத தவணை முறை வசதியுடன் கிடைக்கிறது.
மாத தவணை ரூ. 300 இல் இருந்து துவங்குகிறது. இத்துடன் பிராசஸிங் கட்டணம் ரூ. 501 வசூலிக்கப்படுகிறது. மாத தவணை இன்றி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனினை ரூ.6,499 விலையில் வாங்கிட முடியும். ஜியோபோன் நெக்ஸ்ட் நவம்பர் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோமார்ட் டிஜிட்டல் நெட்வொர்க்கின் 30 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோ ஸ்டோர் ஆப்லைன் மையங்களிலும் கிடைக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர்
- அட்ரினோ 308 ஜி.பி.யு.
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) மற்றும் பிரகதி ஓ.எஸ்.
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 8 எம்பி ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாம்சங் தனது கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 29,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பு ஆப்லைன் சந்தை மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த விலை குறைப்பு அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 24,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதே விலை சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாற்றப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிளேசிங் பிளாக் மற்றும் ஐசி புளூ நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.






