search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 11 ப்ரோ
    X
    ரெட்மி நோட் 11 ப்ரோ

    அந்த ரெட்மி போன் இந்தியாவில் இப்படித் தான் அறிமுகமாகும்?

    ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இப்படித் தான் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ரெட்மி பிராண்டின் நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக சியோமி 11ஐ மற்றும் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் குறியீடுகளில் அம்பலமாகி இருந்தன. 

    தற்போது இரு ஸ்மார்ட்போன்களும் ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிசின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல்களாக இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வேதச சந்தையில் நோட் 11 ப்ரோ சீரிஸ் ரி-பிராண்டு செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது. 

     ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ்

    ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருப்பதால் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் எனும் பிராண்டிங் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில் உள்ள 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

    ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிசுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 5ஜி மாடல் இந்தியாவில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடல் சர்வதேச சந்தையில் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகிறது.
    Next Story
    ×