என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமி நிறுவனத்தின் புதிய 40 இன்ச் FHD டிவி இந்திய சந்தையில் நாளை விற்பனைக்கு வர இருக்கிறது.


    சியோமி நிறுவனம் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 40 இன்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 40 இன்ச் FHD ஸ்கிரீன், ஹாரிசான் டிஸ்ப்ளே, மெல்லிய டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த டிவி பேட்ச் வால் கொண்டிருக்கிறது. இது 25-க்கும் அதிக ஒடிடி தளங்களில் இருந்து பயனர் பார்த்து ரசிக்க விரும்பும் தரவுகளை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு பரிந்துரை செய்யும். மேலும் இதில் பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

     சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன்

    எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 40 இன்ச் அம்சங்கள்

    - 40 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
    - 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ 53 பிராசஸர்
    - 750MHz மாலி-450 MP3 GPU
    - ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் பேட்ச்வால்
    - 1 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம்
    - 8 ஜிபி மெமரி (eMMC 5.1)
    - MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
    - எம்ஐ குயிக் வேக் 
    - வைபை, ப்ளூடூத், 3 x HDMI, AV,  USB 2.0 x 2, ஈத்தர்நெட்
    - 2 x 10W ஸ்பீக்கர், DTS-HD

    எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 40 இன்ச் மாடல் விலை ரூ. 23,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட், எம்ஐ வலைதளம், எம்ஐ ஹோம், எம்ஐ ஸ்டூடியோ மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நாளை துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஹானர் நிறுவனத்தின் புதிய பிட்னஸ் டிராக்கர் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹானர் பேண்ட் 6 பிட்னஸ் டிராக்கரை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் பேண்ட் 6 அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த பிட்னஸ் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.

    ஹானர் பேண்ட் 6 மாடலில் 1.47 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான பிட்னஸ் டிராக்கர்களில் இருப்பதை விட 148 சதவீதம் பெரிய டிஸ்ப்ளே ஆகும். இதன் வலதுபுறத்தில் சிவப்பு நிற பட்டன் உள்ளது. இடதுபுறத்தில் ஹானர் பிராண்டிங் கொண்டிருக்கிறது.

     ஹானர் பேண்ட் 6

    வாட்ச் பேஸ் ஸ்டோரில் கிடைக்கும் வாட்ச் பேஸ்களில் பயனர் விரும்புவதை தேர்வு செய்து வைத்துக் கொள்ளும் வசதி ஹானர் பேண்ட் 6 மாடலில் உள்ளது. இத்துடன் ஆல்பம் போட்டோவையும் வாட்ச் பேஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். சராசரி பயன்பாடுகளின் போது இந்த பிட்னஸ் டிராக்கர் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

    இந்த பிட்னஸ் டிராக்கரில் SpO2 ஆக்சிஜன் டிராக்கர், 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் மாணிட்டர், பத்துவித உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் சில உடல் நடவடிக்கைகளை தானாக கண்டறியும் வசதி இதில் உள்ளது.
    ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அடுத்த மாதம் விற்பனை செய்ய இருக்கிறது.

    ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சாம்சங் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி  மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 50 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ்

    ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் அம்சங்கள்

    - 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர்
    - ARM G77 MC9 GPU
    - 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
    - டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.3
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.5
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ 
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி சி
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் மாடல் ஆஸ்டிராய்டு பிளாக், மெர்குரி சில்வர் மற்றும் மில்கி வே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999, 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூன் 4 ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் தளங்களில் துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனம் 2nd Gen ஏர்பாட்ஸ் ப்ரோ ஹெட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி லெவல் ஏர்பாட்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ 2nd Gen மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஏர்பாட்ஸ் மாடல் முதல் முறையாக அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த வேரியண்ட் புது டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முற்றிலும் புது கேஸ்,  சிறிய ஸ்டெம் கொண்டிருக்கும் ன கூறப்படுகிறது.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ்

    2022 ஆண்டு வெளியாக இருக்கும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் மேம்பட்ட மோஷன் சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேம்பட்ட ஏர்பாட்ஸ் ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவு விற்பனையில் அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை அப்டேட் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து மிக குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது. கூகுள் - ஜியோ கூட்டணியில் உருவாகும் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புது தகவல்களை சமீபத்தில் நடைபெற்ற விர்ச்சுவல் நிகழ்வில் தெரிவித்து இருக்கிறார்.

     ரிலையன்ஸ் ஜியோ

    புது விலை குறைந்த ஸ்மார்ட்போனினை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். நாங்கள் இந்த திட்டத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என அவர் தெரிவித்தார். 

    கூகுள் - ஜியோ கூட்டணியில் உருவாகும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் துவங்கும் போது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜியோ 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.
    போக்கோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    போக்கோ நிறுவனத்தின் F3 GT இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 கேமிங் எடிஷன் மாடலை சார்ந்து உருவாகி இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமராக்களை சுற்றி எல்இடி லைட்கள் உள்ளன. 



    எல்இடி லைட்கள் மட்டுமின்றி போக்கோ F3 GT மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி X7 மேக்ஸ் ஆகும். இது மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சம்மர் வெளியீட்டு நிகழ்வு விரைவில் நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சம்மர் வெளியீட்டு நிகழ்வை நடத்த இருக்கிறது. இதற்கான டீசர்களை ஒன்பிளஸ் வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு புது மாடல் வெளியிடப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து ஒன்பிளஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை.

     ஒன்பிளஸ் டீசர்

    முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் சம்மர் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய நார்டு ஸ்மார்ட்போன் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, அதிக ரிப்ரெஷ் ரேட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, 48 எம்பி அல்லது 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் நார்டு 2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனிற்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு 2 அந்நிறுவனத்தின் வலைதளத்தில் தவறுதலாக பட்டியலிடப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 8டி, ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் நார்டு மற்றும் ஒன்பிளஸ் 9 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருந்தது. ஒன்பிளஸ் நார்டு 2 சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஜூன் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் நார்டு

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், இது இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என தெரிகிறது. மற்ற ஒன்பிளஸ் சாதனங்களுடன் ஒன்பிளஸ் நார்டு 2 இடம்பெற்று இருப்பதை தனியார் செய்தி நிறுவனம் கண்டறிந்து இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, அதிக ரிப்ரெஷ் ரேட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, 48 எம்பி அல்லது 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி இந்த மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் லேப்டாப் பல்வேறு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சர்பேஸ் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் 13.5 இன்ச் மற்றும் 15 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் 11th Gen இன்டெல் கோர் பிராசஸர், ஐரிஸ் Xe கிராபிக்ஸ், ஏஎம்டி ரைசன்7 4000 சீரிஸ் மற்றும் ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், டோன்-ஆன்-டோன் அல்கான்ட்ரா மற்றும் மெஷின்டு அலுமினியம் ஆல்-மெட்டல் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

     மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் 4

    இவற்றில் 3:2 பிக்சல்சென்ஸ் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளேக்கள், பில்ட்-இன் ஹெச்டி கேமரா, டால்பி அட்மோஸ் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் உள்ளன. 13.5 இன்ச் ஏஎம்டி ரைசன் மாடல் 19 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
      
    இந்தியாவில் புதிய சர்பேஸ் லேப்டாப் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1,02,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,77,499 ஆகும். புதிய சர்பேஸ் லேப்டாப் அமேசான் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் பிளே மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் சீரிஸ் Y1 40 இன்ச் புல் ஹெச்டி டிவி மாடலை அறிமுகம்  செய்தது. புது ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ் சினிமேடிக் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு டிவி 9.0, பில்ட் இன் குரோம்காஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் கூகுள் பிளே, கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் டிவி பெசல்-லெஸ் டிசைன், 93 சதவீதத்திற்கும் அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.

     ஒன்பிளஸ் டிவி

    ஒன்பிளஸ் Y1 40 இன்ச் அம்சங்கள்

    - 43 இன்ச் 1920×1080 பிக்சல் LED டிஸ்ப்ளே
    - காமா என்ஜின்
    - குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 64-பிட் பிராசஸர்
    - மாலி-470MP3 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் ஆக்சிஜன் பிளே
    - பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட்
    - வைபை 802.11 a/b/g/n, 2.4GHz, ப்ளூடூத் 5.0 LE, 2x HDMI, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
    - 20W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ

    இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் Y1 40 இன்ச் மாடல் அறிமுக விலை ரூ. 21,999 ஆகும். மே 29 ஆம் தேதிக்கு பின் இந்த டிவி ரூ. 23,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்னணி வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டு பரிமாற்றங்களுக்கு 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
    பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    ஸ்மார்ட் அக்சஸரீ விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான நாய்ஸ் இந்திய சந்தையில் நாஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வாட்ச் 1.28 இன்ச் கலர் டச் டிஸ்ப்ளே, 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்டிலெஸ் மாணிட்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் கைடெட் பிரீத்திங், 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆட்டோ ஸ்போர்ட் ரிகக்னீஷன், 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 320 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     நாய்ஸ்பிட் ஆக்டிவ்

    நாய்ஸ்பிட் ஆக்டிவ் அம்சங்கள்:

    - 1.28 இன்ச் 240x240 பிக்சல் LCD ஸ்கிரீன்
    - ப்ளூடூத் 5.0
    - கஸ்டமைஸ் மற்றும் கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்
    - குறைந்த எடை, பாலிகார்பனைட் ஷெல் மற்றும் சிலிகான் ஸ்டிராப்
    - 14 ஸ்போர்ட்ஸ் மோட், கூகுள் பிட் சின்க்
    - அக்செல்லோமீட்டர் சென்சார், 24×7 இதய துடிப்பு மாணிட்டரிங்
    - SpO2 மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், பிரீத் மோட்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (5 ATM)
    - 320 எம்ஏஹெச் பேட்டரி
    - அதிகபட்சம் 7 நாட்கள் பேக்கப்

    நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் ரோபுஸ்ட் பிளாக், ஸ்போர்டி ரெட், பவர் புளூ மற்றும் செஸ்டி கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3499 ஆகும். இது ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் 2021 ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    சியோமி நிறுவனம் 2021 ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் இதுவரை சுமார் 2.5 கோடிக்கும் அதிக ரெட்மி நோட் 8 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. 

     சியோமி ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    கடந்த ஆண்டு மே மாதத்தில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை சுமார் 3 கோடி யூனிட்களை கடந்ததாக சியோமி தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையிில் ரெட்மி நோட் 8 சீரிஸ் மாடல்கள் 2019 அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து இதன் மேம்பட்ட மாடல் அறிமுகமாக இருக்கிறது.

    புதிய 2021 ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் M1908C3JGG எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. எப்சிசி வலைதளத்தின் படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ×