என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மோட்டோரோலா நிறுவனம் புதிய எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகமாகின்றன. பல்வேறு டீசர்களை தொடர்ந்து இரு மாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை எட்ஜ் 20 மாடலில் 6.67 இன்ச் OLED பேனல், HDR10+, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் இதே டிஸ்ப்ளே 90Hz ரிப்ரெஷ் ரேட் உடன் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இரு மாடல்களின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும்.
விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனம் Y53s ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஓஎஸ் 11.1, மல்டி டர்போ 5.0, அல்ட்ரா கேம் மோட், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

விவோ Y53s அம்சங்கள்
- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12nm பிராசஸர்
- 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11.1
- 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ், f/1.79
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ Y53s ஸ்மார்ட்போன் டீப் சீ புளூ மற்றும் பென்டாஸ்டிக் ரெயின்போ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன்கள் அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கின்றன.
பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஹெட்போன்களில் ஹை-பை ஆடியோ, லோ லேடன்சி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய பிலிப்ஸ் SBH2515BK/10 மற்றும் TAT3225BK மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இரு மாடல்களும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பிலிப்ஸ் SBH2515BK/10 மாடலில் 110 மணி நேரத்திற்கும் அதிக பிளேடைம், யு.எஸ்.பி. சார்ஜிங் கேஸ் கொண்டிருக்கிறது.

இந்த சார்ஜிங் கேஸ் ஹெட்போன் மட்டுமின்றி போனினையும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் TAT3225BK 13 mm ஸ்பீக்கர் டிரைவர், ப்ளூடூத் 5.2, IPX4 தர சான்று பெற்று இருக்கிறது. இந்த ஹெட்போன் 110 மணி நேர பிளேடைம் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேசில் 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
பிலிப்ஸ் TAT3225BK மாடலில் ப்ளூடூத் 5.2, IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய பிலிப்ஸ் SBH2515BK/10 மற்றும் TAT3225BK மாடல்கள் விலை முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 7,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் புதிய நிறத்தில் அறிமுகமாக இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனினை - மார்னிங் மிஸ்ட், பைன் கிரீன் மற்றும் ஸ்டெல்லார் பிளாக் என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது ஒன்பிளஸ் 9 ப்ரோ வைட் நிற வேரியண்ட் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நிற வேரியண்டிற்கான டீசரை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புது வேரியண்டில் நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் QHD+ LTPO AMOLED டிஸ்ப்ளே, 3216x1440 பிக்சல் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அடிரினோ 660 GPU வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி சென்சார், 8 எம்பி டெலிபோட்டோ சென்சார், 2 எம்பி மோனோகுரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டைப் சி சார்ஜிங் போர்ட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 வழங்கப்பட்டுள்ளது.
சவுண்ட்கோர் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, நீண்ட நேர பேட்டரி பேக்கப் அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஆன்கர் நிறுவனத்தின் ஆடியோ சார்ந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் சவுண்ட்கோர் இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. சவுண்ட்கோர் R100 என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் இன்ஸ்டன்ட் ஆட்டோ பேரிங், 25 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது.
இத்துடன் 10mm கிராபீன் டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5, ஹால்-சென்சார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹால்-சென்சார் தொழில்நுட்பம் சீரான கனெக்டிவிட்டி வழங்குகிறது. இயர்பட்ஸ் கேசை திறந்ததும் மூன்றே நொடிகளில் இயர்பட்ஸ் இணைப்பை சாத்தியப்படுத்துகிறது.

சவுண்ட்கோர் R100 மாடலில் IPX5 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. மேலும் இதன் சார்ஜிங் கேஸ் 25 மணி நேரத்தற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.
புதிய சவுண்ட்கோர் R100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும். எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 1799 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் புதிய தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொழில்நுட்பம் புகைப்படங்களின் தரம் குறையாமல் அழகான செல்பிக்களை எடுக்க வழி செய்யும். முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பங்கள் புகைப்படங்களின் பிக்சல்களை குறைத்து வந்தன.

ஒப்போவின் புதிய தொழில்நுட்பம் சிறிய பிக்சல்களை பயன்படுத்தி 440 PPI தரத்தில் புகைப்படங்களை மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது. நாள்பட்ட பயன்பாட்டில் பயனர்களால் ஸ்கிரீனின் கீழ் உள்ள கேமரா பகுதியை பார்க்கவே முடியாது. இதனால் தலைசிறந்த அனுபவம் கிடைக்கும். டிஸ்ப்ளே பயன்பாட்டின் போதும், இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் நீண்ட காலமாக உருவாக்கி வருகிறது. முதல்முறையாக இந்த தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் 2019 ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த தொழில்நுட்பம் இதுவரை ஒப்போ ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படவில்லை.
கூகுளின் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் கேமரா பம்ப் சதுரங்க வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒருவழியாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களின் டீசரை கூகுள் வெளியிட்டு உள்ளது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரையும் கூகுள் அறிவித்துள்ளது.
அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் டென்சார் சிப்செட் கொண்டு சக்தியூட்டப்படுகின்றன. முந்தைய தகவல்களில் இதே பிராசஸர் GS101 மாடல் நம்பர் மற்றும் வைட் சேப்பல் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி வருகிறது.
இரு மாடல்களிலும் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. எனினினும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்பட இருக்கிறது. மேம்பட்ட சென்சார் மற்றும் லென்ஸ்கள் மிகவும் பெரிது என்பதால் வழக்கமான டிசைனுக்கு மாற்றாக புதிய கேமரா பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிக்சல் 6 ப்ரோ மாடலில் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனிற்கு பி.ஐ.எஸ். சான்று வழங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் SM-A037F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A03s மாடலில் 6.5 இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டு 2 எம்பி சென்சார்கள், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப் சி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி A03s இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் கைகளில் இருந்து நழுவாத வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் 2பி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் 610 பிராசஸர், மாலி ஜி52 GPU, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் உள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 2பி அம்சங்கள்
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் UNISOC T610 பிராசஸர்
- மாலி-G52 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பின்புறம் கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் புளூ, பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 7,999 என்றும் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 8,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2பி விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா வலைதளங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது.
முன்னணி ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான JBL இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆடியோ பிரிவு பிராண்டான JBL இந்திய சந்தையில் இரு ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை JBL லைவ் ப்ரோ பிளஸ் மற்றும் JBL லைவ் 660NC என அழைக்கப்படுகின்றன. இவற்றில் JBL சிக்னேச்சர் சவுண்ட், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஸ்மார்ட் ஆம்பியன்ட், ஹேன்ட்ஸ்-ப்ரீ கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
JBL லைவ் ப்ரோ பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இன்-இயர் டிசைன் மற்றும் சிறிய ஸ்டெம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3 எக்கோ கேன்சலிங் மைக், டூயல் கனெக்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி ஆட்டோ பிளே/பாஸ், பாஸ்ட் பேர், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்பீடு சார்ஜ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களும் உள்ளன.

இதில் உள்ள பேட்டரி ANC பயன்படுத்தாத போது 7 மணி நேரங்களும், ANC பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்கும் பேக்கப் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் கூடுதலாக 21 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும்.
JBL லைவ் 660NC மாடல் ஒவர்-தி-இயர் ரக வயர்லெஸ் ஹெட்போன் ஆகும். இதில் JBL சிக்னேச்சர் சவுண்ட், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம், ஸ்மார்ட் ஆம்பியன்ட் அம்சங்கள் உள்ளன. இத்துடன் அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளை ஹேண்ட்ஸ்-பிரீ முறையில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
JBL லைவ் ப்ரோ பிளஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ, 16,999 ஆகும். JBL லைவ் 660NC மாடல் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 ஆகும். இரு மாடல்களும் JBL ஆன்லைன் வலைதளம் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
நத்திங் நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் இயர்போனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் இந்தியாவில் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. இந்த இயர்போன் முற்றிலும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இயர்பட்ஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.
நத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 11.6 எம்எம் டிரைவர், ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் இயர்பட் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடை கொண்டிருக்கிறது. இவை காதுகளில் சவுகரியமாக பொருந்திக் கொள்ளும் வகையிலும், நீண்ட நேர பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மூன்றுவித அளவுகளில் லிக்விட் சிலிகான் டிப்கள் வழங்கப்படுகின்றன.

இயர் 1 மாடலில் உள்ள மூன்று உயர் ரக மைக் கொண்டு ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயர்போனில் லைட் மோட் மற்றும் மேக்சிமம் மோட் உள்ளன. இவை முறையே வெளிப்புற சத்தத்தை குறைவாகவும், முழுமையாகவும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் உள்ள க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம் பேக்கிரவுண்டு சத்தத்தை குறைக்கிறது.
இவற்றுடன் பைன்ட் மை இயர்பட், இ.க்யூ., ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் கஸ்டமைசேஷன், வாட்டர் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரி 5.7 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 34 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கிறது. இதில் உள்ள அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 8 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
இந்தியாவில் நத்திங் இயர் 1 விலை ரூ. 5,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி துவங்குகிறது. புதிய நத்திங் இயர் 1 இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் பிரிட்டனிலும் அறிமுகமாகி இருக்கிறது.
சியோமியின் ரெட்மிபுக் லேப்டாப் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மிபுக் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. சில தினங்களுக்கு முன் ரெட்மிபுக் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி வெளியிட்டது. தற்போது இந்த மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவில் வெளியாகும் முதல் ரெட்மி பிராண்டு லேப்டாப் ஆகும்.

எம்.ஐ. நோட்புக் சீரிஸ் மூலம் இந்திய லேப்டாப் சந்தையில் சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு களமிறங்கியது. தற்போது ரெட்மி பிராண்டு லேப்டாப்களும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்தியாவில் ரெட்மிபுக் மாடல்கள் விலை, சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
ஏற்கனவே பல்வேறு ரெட்மிபுக் மாடல்கள் சீனாவில் அறிமுகமாகி இருப்பதால், இந்தியாவில் எந்த மாடல் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.






