என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஒப்போ நிறுவனம் தனது எப் சீரிஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை உருவாக்கி வருகிறது.


    ஒப்போ நிறுவனம் எப்19 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமான ஒப்போ எப்19, எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    புதிய எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்திய வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. தற்போதைய தகவல்களின்படி ஒப்போ எப்19எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

     ஒப்போ எப்19

    பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஒப்போ எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள் ஒப்போ எப்19 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி21வை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி சி21வை மாடலில் யுனிசாக் டி610 பிராசஸர், 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி லென்ஸ், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

     ரியல்மி சி21வை

    ரியல்மி சி21வை ஸ்மார்ட்போன் கிராஸ் பிளாக் மற்றும் கிராஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மினி மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐபோன் மாடல்களின் வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், முந்தைய வழக்கப்படி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. 

    ஐபோன் 13 மினி உள்பட புது ஐபோன் மாடல்கள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. தற்போதைய ரென்டர்களின் படி ஐபோன் 13 மினி தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி ஐபோன் 12 மினி போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் புதிய கனெக்டர் பின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

     ஐபோன் 12 மினி

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் எல்.டி.பி.ஓ. டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், புதிய ஏ15 பயோனிக் சிப்செட், 2406 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், லிடார் சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய ஐபோன் 13 மினி துவக்க விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,042 என நிர்ணயம் செய்யப்படலாம். முந்தைய ஐபோன் 12 மினி மாடலும் இதேபோன்ற விலையிலேயே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் இரண்டு நார்டு மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் விவரங்கள், இணையத்தில் வெளியானது முதல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர் மாடலில் இருந்ததை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் 9ஆர்.டி. மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு சீரிசில் மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நார்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடல்கள் ஒரே சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என்றும் இது முந்தைய ஒன்பிளஸ் 9ஆர் போன்றே இந்தியா மற்றும் சீன சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.  புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர் கொண்டிருக்கிறது. இது 13 5ஜி பேண்ட்களுக்கான வசதியை வழங்குகிறது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ32 5ஜி மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

    சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி.+ இன்பினிட்டி வி எல்.சி.டி. ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்
    - மாலி-G57 MC3 GPU
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ.
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. பிளாஷ் 
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 13 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி 
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேல்கஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1 கோர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ்

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 11,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 108 எம்பி கேமரா கொண்டிருக்கின்றன.


    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எட்ஜ் 20 மாடலில் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸரும், எட்ஜ் 20 பியூஷன் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸரும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     மோட்டோரோலா எட்ஜ் 20

    புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 2 எம்பி டெப்த் சென்சார், எட்ஜ் 20 மாடலில் 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இரு மாடல்களிலும் 5ஜி கனெக்டிவிட்டிக்கு பல்வேறு பேண்ட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ எட்ஜ் 20 மாடல் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன்

    மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் சைபர் டீல் மற்றும் எலெக்ட்ரிக் கிராபைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,499 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 22,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மோட்டோரோலா எட்ஜ் 20 மாடல் பிராஸ்டெட் எமரால்டு மற்றும் பிராஸ்டெட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,999 ஆகும். இதன் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி விற்பனை மையங்களில் துவங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய விற்பனை விவரம் வெளியிடப்பட்டன.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இந்திய விலையை அறிவித்து உள்ளது. முன்னதாக கேலக்ஸி அன்பேக்டு விழாவில் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக் மற்றும் கிரீம் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக், பேண்டம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24 ஆம் தேதியும், விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.

    விலை விவரம்

    கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி (8 ஜிபி + 128 ஜிபி) ரூ. 84,999
    கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி (8 ஜிபி + 256 ஜிபி) ரூ. 88,999
    கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி (12 ஜிபி + 256 ஜிபி) ரூ. 1,49,999
    கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி (12 ஜிபி + 512 ஜிபி) ரூ. 1,57,999

     கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி

    அறிமுக சலுகைகள்

    சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் அப்கிரேடு வவுச்சர் அல்லது ரூ. 7 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இத்துடன் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மாடலை முன்பதிவு செய்யும் போது ரூ. 7999 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான சாம்சங் கேர் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்குரூ. 4,799 மதி்ப்புள்ள சாம்சங் கேர் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது.

    சியோமி ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமியின் ரெட்மி 10 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன்பே புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. அந்த வரிசையில் தற்போது ரெட்மி 10 ஸ்மார்ட்போன், சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 21061119AG மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்தியா வரும் முன் இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி 10 விவரங்கள் எதையும் சியோமி இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி சென்சார், 2 எம்பி லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் அறிவித்தது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படுகிறது. எனினும், ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்களை அந்நிறுவனம் அப்போது வெளியிடவில்லை. 

    தற்போது ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் மென்பொருள் மூலம் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் LS-5701-J எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் டுயோ-கோ செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் கேமரா கோ புது வேரியண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கேமராவுடன் ஸ்னாப்சாட் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதை கொண்டு இந்தியாவுக்கான ஸ்னாப்சாட் லென்ஸ்களை பயன்படுத்த முடியும். 

    மற்ற அம்சங்களை பொருத்தவரை HD+ 1440x720 பிக்சல் ஸ்கிரீன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர், டூயல் சிம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி ஆம்னிவிஷன், 8 எம்பி செல்பி கேமரா, கேலக்ஸிகோர் GC34W சென்சார் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கும் என ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 

    அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 மாடல் 7.6 இன்ச் QXGA+ இன்பினிட்டி பிளெக்ஸ் டைனமிக் AMOLED 2X ஸ்கிரீன், 6.2 இன்ச் HD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120HZ ரிபெர்ஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இதன் கீழ் 4 எம்பி அன்டர் டிஸ்ப்ளே கேமராவும், வெளிப்புறம் 10 எம்.பி. கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இசட் போல்டு 3 மாடலில் எஸ் பென் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான எஸ் பென் இருவித ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவை எஸ் பென் போல்டு எடிஷன் மற்றும் எஸ் பென் ப்ரோ என அழைக்கப்படுகிறது. 

     சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி

    சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி அம்சங்கள்

    - 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
    - 6.2 இன்ச் 2268x832 பிக்சல் 24.5:9 HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
    - 12 ஜிபி LPDDR5 ரேம்
    - 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1
    - டூயல் சிம்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8, PDAF, OIS
    - 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
    - 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 10 எம்.பி. முன்புற கேமரா, f/2.2
    - 4 எம்பி அன்டர் டிஸ்ப்ளே கேமரா, f/1.8
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் வயர், 10 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மாடல் பேண்டம் பிளாக், பேண்டம் கிரீன் மற்றும் பேண்டம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,33,660 என துவங்குகிறது. 

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் மாடல்கள் அடுத்த வாரம் அறிமுகமாகின்றன.


    ரியல்மி GT 5ஜி, ரியல்மி GT மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி புக் ஸ்லிம் போன்ற மாடல்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. புது சாதனங்களுடன் அறிமுகமாகும் ரியல்மி புக் ஸ்லிம் இந்தியாவில் வெளியாகும் ரியல்மியின் முதல் லேப்டாப் ஆகும்.

     ரியல்மி டீசர்

    புது ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் வெளியீட்டை தொடர்ந்து, ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் இந்த சாதனங்களுக்கான பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி GT  சீரிஸ் ஆன்லைனில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் சீனாவிலும், அதன்பின் ஜூன் மாத வாக்கில் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5ஜி தற்போது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. ரியல்மி GT மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ×