என் மலர்
மொபைல்ஸ்
போக்கோ இந்தியா நிறுவனம் தனது போக்கோ F3 GT ஸ்மார்ட்போனிற்கான புது டீசரை வெளியிட்டு இருக்கிறது.
போக்கோ இந்தியா நிறுவனம் போக்கோ F3 GT ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
சமீபத்திய டீசரின் படி போக்கோ F3 GT கிளாஸ் பாடி, ஸ்லிப்-ஸ்டிரீம் டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதன் பின்புறம் கைரேகை பதியாத வகையில் மேட் பினிஷ் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏரோஸ்பேஸ்-ரக அலுமினியம் அலாய் பிரேம் கொண்டு உருவாக்கப்படுகிறது.

இத்துடன் போக்கோ F3 GT மாடல் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, HDR 10+, டிசி டிம்மிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. முன்னதாக வெளியான டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
புதிய போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் கன்மெட்டல் சில்வர், பிரிடேட்டர் பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ22 வெளியீட்டை தொடர்ந்து இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 5ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பாவில் கேலக்ஸி ஏ22 5ஜி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 20,100 ஆகும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் 2019 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மோட்டோரோலா ரேசர் 4ஜி மற்றும் ரேசர் 5ஜி என இரு மடிக்கக்கூடிய மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இரு ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைப்பு முன்பை போன்றே குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை குறைப்பு ப்ளிப்கார்ட் தளத்திற்கு மட்டும் பொருந்தும்.

விலை குறைப்பின் படி மோட்டோரோலா ரேசர் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 89,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 1,24,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா ரேசர் 4ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ. 1,49,999 ஆகும்.
மோட்டோ ரேசர் 5ஜி மாடல் பாலிஷ் கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. மோட்டோ ரேசர் 4ஜி மாடல் நாய்ர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சமாக 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதிக மாற்றங்களுடன் புது ஐபேட் மினி மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் மற்றும் ஐமேக் சாதனங்களை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் புது டிசைன் மட்டுமின்றி ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களையும் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஐபேட் ப்ரோ மாடலில் ஆப்பிள் எம்1 பிராசஸர் வழங்கப்பட்டது.
அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினி மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஐபேட் மினி 6 பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐமேக் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ஐபேட் மினி முற்றிலும் புது டிசைன், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்களை பெறும் சாதனமாக புதிய ஐபேட் மினி இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி புது ஐபேட் மினி 206.3mm x 137.8mm x 6.1mm அளவில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. மேலும் இந்த மாடல் சில்வர், பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
விவோ நிறுவனம் இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனத்தின் Y20A மற்றும் Y20G ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளங்களில் மாற்றப்பட்டு விட்டது.
முன்னாதாக விவோ y21s மற்றும் y12s மாடல்களின் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது. விவோ y21s மாடலின் 2 ஜிபி விலை ரூ. 8,490 மற்றும் விவோ y12s 3 ஜிபி ரேம் விலை ரூ. 10,490 என மாற்றப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ y20a ரூ. 11,490 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய விலை உயர்வு காரணமாக இதன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,990 என மாறி இருக்கிறது.
விவோ y20g ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் விலை முறையே 13,990 மற்றும் ரூ. 15,990 என மாறி இருக்கிறது. முன்னதாக இரு மாடல்களும் முறையே ரூ. 12,990 மற்றும் ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இத்தனை ஆண்டுகள் தொடர் அப்டேட் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி அதன் அம்சங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன.
அவ்வாறு பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இரட்டை கேமரா சென்சார்களும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் பிரத்யேகமாக உற்பத்தி செய்யும் வைட்சேப்பல் பிராசஸர் வழங்கப்பட இருக்கின்றன.
இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் என்றும் இவற்றுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் வழங்க கூகுள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் அல்லது 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மூன்று ஆண்டுகள் மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. 5 ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்கும் பட்சத்தில், அப்டேட் வழங்குவதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இணையான நிறுவனமாக கூகுள் இருக்கும்.
சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கிறது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புது பிஷாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 895 பிராசஸர் மற்றும் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேமரா சென்சாரை சாம்சங் உருவாக்கி வருகிறது.

200 எம்பி கேமரா சென்சார் முதன் முதலில் சாம்சங் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் 200 எம்பி சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
இதற்கான காரணம் வெளியாகவில்லை. எனினும், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் அதிக மெகாபிக்சல் கேமராவை வழங்குவதோடு, பெரிய பிக்சல் அளவை வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் 200 எம்பி கேமராவுடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம்.
ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும். இதற்காக ஒன்பிளஸ் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி இருக்கின்றன.

இந்த பிராசஸரின் செயல்திறன் டிமென்சிட்டி 1200-ஐ விட வித்தியாசமானதாக இருக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்து இருக்கின்றன. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் புகைப்படங்களை மிக தெளிவாக எடுக்க வழி செய்யும். இதுதவிர பயன்பாட்டின் போது சிறப்பான அனுபவம் கிடைக்கும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.
புதிய ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. முந்தைய வழக்கப்படி புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அமேசான் தளத்திலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மியின் டிசோ பிராண்டு மொபைல் போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
டிசோ பிராண்டின் புது வயர்லெஸ் இயர்போன் மாடல்கள் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது டிசோ பிராண்டு புது பீச்சர் போன் மாடல்கள் சத்தமின்றி அறிமுகமாகி இருக்கின்றன. இரு மாடல்களும் டிசோ ஸ்டார் 300 மற்றும் ஸ்டார் 500 என அழைக்கப்படுகின்றன. முன்னதாக இரு மொபைல் போன்களும் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய 2ஜி மொபைல் போன் மாடல்களில் Spreadtrum SC6531E பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் QQVGA மற்றும் QVGA ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிரைமரி கேமரா, ஆங்கிலம் உள்பட தமிழ், இந்தி, குஜராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கும் வசதி உள்ளன.
டிசோ ஸ்டார் 300 அம்சங்கள்
- 1.77 இன்ச் 160x120 பிக்சல் QQVGA LCD ஸ்கிரீன்
- 26MHz SC6531E பிராசஸர்
- 32MB ரேம்
- 32MB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 0.08 எம்பி பிரைமரி கேமரா
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர்
- 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 2550 எம்.ஏ.ஹெச். பேட்டரி

டிசோ ஸ்டார் 500 அம்சங்கள்
- 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
- 26MHz SC6531E பிராசஸர்
- 32MB ரேம், 32MB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 0.3 எம்பி பிரைமரி கேமரா
- ஸ்ட்ரிப் டார்ச்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி. 3 பிளேயர்
- 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 1900 எம்.ஏ.ஹெச். பேட்டரி
டிசோ ஸ்டார் 300 மாடல் பிளாக், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 ஆகும். டிசோ ஸ்டார் 500 மாடல் பிளாக், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 ஆகும். இவற்றின் விற்பனை ஜூலை 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் புது 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை அமேசானில் வெளியிட்டுள்ளது. டீசரில் “Fast and Futuristic” வாசகம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், புகைப்படத்திற்கான இணைய முகவரியில் புது ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10டி 5ஜி என தெரியவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 5ஜி மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலும் ரெட்மி நோட் 10 5ஜி மாடலின் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 10டி 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.5 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
- டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன், புளூ, சில்வர் மற்றும் கிரே நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.
ரியல்மி நிறுவனத்தின் துணை பிராண்டான டிசோ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது சாதனத்திற்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்தியாவில் புது பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த வாரம் டிசோ பிராண்டின் புது ஆடியோ சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது பீச்சர் போன் அறிமுகமாக இருக்கிறது. இந்த போனில் கேமரா வழங்கப்படுகிறது.

டீசரின் படி புது பீச்சர் போன் அசத்தலான அனுபவத்தை வழங்கும் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. புது பீச்சர் போன் ஸ்டார் 5 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
ஸ்டார் சீரிசில் குறைந்த விலை மொபைல் போன்களை அறிமுகம் செய்ய டிசோ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டிசோ ஸ்டார் 5 விவரங்கள் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இந்த மாடலில் டூயல் சிம் வசதி, 2ஜி கனெக்டிவிட்டி, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 1830 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் இத்தனை யூனிட்களை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் பத்து கோடி யூனிட்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

அதன்படி ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனைக்கு வந்த ஏழே மாதங்களில் சுமார் பத்து கோடி யூனிட்களை கடந்துள்ளது. முன்னதாக ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் பத்து கோடி யூனிட்களை கடக்க ஒன்பது மாதங்கள் ஆனது. ஒட்டுமொத்த விற்பனையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மட்டும் 40 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இத்தனை யூனிட்கள் 2020 டிசம்பர் முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையாகி இருக்கின்றன.
ஐபோன் 11 சீரிஸ் வெளியான ஏழு மாதங்களில் ஆப்பிள் பெற்ற வருவாயை விட ஐபோன் 12 சீரிஸ் கொண்டு ஏழு மாதங்களில் ஆப்பிள் பெற்ற வருவாய் 22 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை 12.5 சதவீதம் சரிவடைந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஸ்மார்ட்போன் விற்பனை மீண்டும் அதிகரித்து வருகிறது.






