என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • புது ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் நவம்பர் மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு வருகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 ஸ்டேபில் அப்டேட்-ஐ வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெற்று இருக்கும் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி M42 5ஜி மாடல் உள்ளது. இந்தியாவில் இந்த அப்டேட் SM-M426B எனும் மாடல் கோட் பெற்று இருக்கிறது. இதன் ஃபர்ம்வேர் வெர்ஷன் M426BXXU3CVK5 ஆகும்.

    புது அப்டேட் ஒன் யுஐ 5.0 நன்மைகளுடன், நவம்பர் 2022 மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி பேட்ச் உள்ளிட்டவைகளையும் பெற்று இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோர் இந்த அபேடேட்டை இதுவரை பெறவில்லை எனில், ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் மெனு சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M42 5ஜி மாடலில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED, இன்ஃபினிட்டி யு-கட் டிஸ்ப்ளே, HD+ 720x1600 பிக்சல் ரெசல்யூஷன், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP டெப்த் கேமரா, 5MP லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், நாக்ஸ் செக்யுரிட்டி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, வைபை, ஜிபிஎஸ், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், ஆன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி M42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிசம் டாட் பிளாக் மற்றும் ப்ரிசம் டாட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    • சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
    • இந்தியாவில் சியோமியின் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    தற்போதைய விலை குறைப்பு ஸ்மார்ட்போனின் மூன்று வேரியண்ட்களுக்கும் பொருந்தும். மேலும் குறைக்கப்பட்ட புதிய விலை சியோமி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. அதன்படி ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ரெட்மி நோட் 11 புதிய விலை விவரங்கள்:

    ரெட்மி நோட் 11 (4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 11 (6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499

    ரெட்மி நோட் 11 (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999

    அதன்படி ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 500, மற்ற இரு வேரியண்ட்களின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஹாரிசான் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். இத்துடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து ரூ. 16 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் இரண்டு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    ரெட்மி நோட் 11 அம்சங்கள்:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா, IP53 தரச் சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    • அறிமுக சலுகையாக இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஹாட் 20 பிளே மற்றும் ஹாட் 20 5ஜி என இரு ஸ்மார்ட்போன்களை ஹாட் 20 சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. 12 5ஜி பேண்ட்களுடன் அறிமுகமான முதல் ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக புதிய ஹாட் 20 5ஜி இருக்கிறது. ஹாட் 20 பிளே மாடலில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் 90Hz பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஹீலியோ G37 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹாட் 20 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ 120Hz LCD ஸ்கிரீன், நாட்ச், டிமென்சிட்டி 810 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரு மாடல்களிலும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்க பிரத்யேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் 1080x2408 பிக்சல் FHD+ 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்

    மாலி-G57 MC2 GPU

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் Xஒஎஸ் 10.6

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்

    ஏஐ கேமரா

    8MP செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 பிளே அம்சங்கள்:

    6.6 இன்ச் 1640x720 பிக்சல் HD+ IPS LCD 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்

    IMG பவர்VR GE8320 GPU

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் Xஒஎஸ் 10.6

    டூயல் சிம் ஸ்லாட்

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    13MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்

    ஏஐ கேமரா

    8MP செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஆடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    6000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போன் லுனா புளூ, ஃபாண்டசி பர்பில், அரோரா கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிமுக சலுகையாக ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 5ஜி மாடல் ஸ்பேஸ் புளூ, பிளாஸ்டர் கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிமுக சலுகையாக ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்குகிறது.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் ரக E40 ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • சிறப்பு சலுகை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிளாக் ஃபிரைடே சேல் அங்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் மோட்டோ E40 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 499-இல் இருந்து ரூ. 8 ஆயிரத்து 299 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிளாக் ஃபிரைடே சேல் அங்கமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ E40 மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட LCD ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஆக்டா-கோர் யுனிசாக் T700 பிராசஸர், மெமரியை 1TB வரை நீட்டிக்கும் வசதி, நியர்-ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    மோட்டோ E40 ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 1200 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு பிளாக் ஃபிரைடே சேல் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு தவிர இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7 ஆயிரத்து 750 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையில் அதிக தொகை பெற ஸ்மார்ட்போன் சீரான நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை மோட்டோ E40 மாடலில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் IPS டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T700 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 48MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 64 ஜிபி மெமரி, மெமரியை 1TB வரை கூடுதலாக நீட்டித்துக் கொள்ளும் வசதி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    • நார்டு சீரிஸ் தவிர ஒன்பிளஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து அதன் ரெண்டர்கள் தற்போது வெளியாகி உள்ளது. ரெண்டர்களின் படி புதிய நார்டு CE 3 மாடலின் மத்தியில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய நார்டு CE 2 மாடலில் பன்ச் ஹோல் இடது புறத்தில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கேமரா பம்ப்-க்கு மாற்றாக பிரைமரி கேமராவுடன், இரண்டு ரிங்குகள் காணப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஃபிளாட் சைடுகள் தோற்றத்தில் ஒன்பிளஸ் X போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் இடது புறத்தில் வால்யூம் ராக்கர்கள், வலது புறத்தில் கைரேகை சென்சார் அடங்கிய பவர் பட்டன், கீழ்புறத்தில் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப்-சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய ஒன்பிளஸ் நார்டு CE 3 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் அல்லது இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் அங்கமாக ஐபோன் 14-க்கு இத்தனை சலுகைகள் கிடைக்கின்றன.

    ஐபோன் வாங்குவோர் பலருக்கும் மனதில் எழும் முதல் சந்தேகம், முற்றிலும் புதிய ஐபோன் 14 வாங்கலாமா அல்லது ஐபோன் 13, ஐபோன் 12 என சற்று பழைய மாடல்களை வாங்கலாமா என்பது தான். இது பற்றிய தெளிவு கிடைக்க ஐபோன் 14 டிசைன் மற்றும் அம்சங்கள் கிட்டத்தட்ட ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், ஐபோன் 14 மாடலில் 5-கோர் GPU கொண்ட ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி எஸ்ஒஎஸ் வசதி, கிராஷ் டிடெக்‌ஷன் போன்ற அம்சங்கள் புதிய ஐபோன் 14-இல் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை எதுவும் ஐபோன் 13 மாடலில் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இதுவரை வெளியான ஐபோன்களில் அதிநவீன மாடல் ஐபோன் 14 தான்.

    இதுதவிர ஐபோன் 14 மாடலுக்கு ஆன்லைன் வலைதளங்களில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் "பிளாக் ஃபிரைடே சேல்" அங்கமாக ஐபோன் 14 மாடலுக்கு அசத்தலான சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஐபோன் 14 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

    ப்ளிப்கார்ட் சலுகை விவரங்கள்:

    தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் வழங்கப்படும் சலுகையின் கீழ் ஐபோன் 14 விலை ரூ. 77 ஆயிரத்து 400 என மாறி இருக்கிறது. இந்த விலை ஐபோன் 14 (128 ஜிபி) மாடலுக்கானது ஆகும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ஐபோன் 14 விலையில் ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 14 (128 ஜிபி) விலை மேலும் குறைந்து ரூ. 72 ஆயிரத்து 400-க்கு கிடைக்கும்.

    இவை தவிர ஐபோன் 14 வாங்குவோர் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 20 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேன்ஜ் சலுகையில் முழு தள்ளுபடியை சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 14 (128 ஜிபி) விலை ரூ. 51 ஆயிரத்து 900 என மாறி விடும். எனினும், எக்சேன்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

    • சியோமி நிறுவனம் புதிய சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டது.

    சியோமி நிறுவனம் சியோமி 13 சீரிஸ் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக சியோமி 13 சீரிஸ் மாடல்கள் டிசம்பர் 01 ஆம் தேதி அறிமுகமாகிறது. சியோமி 13 சீரிசில்- சியோமி 13, சியோமி 13 ப்ரோ மற்றும் MIUI 14 உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    டீசரின் படி சியோமி 13 ஸ்மார்ட்போன் ஃபிளாட் ஸ்கிரீன், மற்றொரு மாடலில் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. முந்தைய மாடல்களை போன்றே இரு மாடல்களிலும் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படுகிறது. சியோமி 13 மாடலில் உள்ள ஃபிளாட் ஸ்கிரீன் உயர் ரக OLED பேனல், அல்ட்ரா நேரோ பெசல்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த போன்களில் லெய்கா ஆப்டிக்ஸ் வழங்கப்படுகிறது.

    முன்னதாக தனது அடுத்த ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வகையில், சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்களில் இந்த பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. சியோமி 13 மாடலில் 6.2 இன்ச் FHD+ 120Hz OLED ஸ்கிரீன், சியோமி 13 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் சாம்சங் 2K E6 AMOLED வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    சியோமி 13 ப்ரோ மாடலில் 1-இன்ச் சோனி IMX989 சென்சார், சியோமி 13 மாடலில் 50MP சோனி IMX8 சீரிஸ் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் OIS சப்போர்ட் வழங்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன் புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
    • கீக்பென்ச் டெஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 1497, மல்டி கோரில் 5089 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், வெளியீட்டுக்கு முன் புதிய சியோமி 13 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. சியோமி 13 சீரிசில், சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் ப்ரோ மாடல் உயர் ரக அம்சங்களை கொண்டிருக்கும்.

    அதன்படி புதிய சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் அல்லது குறைந்த ரேம் கொண்ட வேரியண்ட்களும் அறிமுகம் செய்யப்படலாம். கீக்பென்ச் 5 லிஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் 2211133C எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மேலும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் சார்ந்த MIUI வழங்கப்படுகிறது. கீக்பென்ச் டெஸ்டிங்கின் சிங்கில் கோரில் 1497 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 5089 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இவை தவிர புதிய ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் கீக்பென்ச் தளத்தில் இடம்பெறவில்லை.

    எனினும், முந்தைய தகவல்களின் படி சியோமி 13 மாடலில் லெய்கா பிராண்டு லென்ஸ், MIUI14 வழங்கப்படும் என கூறப்பட்டது. விரைவில் சியோமி 13 பற்றிய அறிவிப்பு மற்றும் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • லாவா நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

    லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. லாவா பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பிளேஸ் Nxt ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 4ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், விஜிஏ கேமரா, 8MP செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    லாவா பிளேஸ் Nxt அம்சங்கள்:

    6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்

    IMG பவர்விஆர் GE8320 GPU

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12

    டூயல் சிம்

    13MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார்

    விஜிஏ கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பின்புறம் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    லாவா பிளேஸ் Nxt ஸ்மார்ட்போன் கிலாஸ் கிரீன், கிலாஸ் ரெட் மற்றும் கிலாஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், லாவா வலைதளங்களில் டிசம்பர் 2 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் லாவா நிறுவனம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே வந்த இலவச சர்வீஸ் செய்து கொடுக்கிறது.

    • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்திய வெளியீட்டின் போதே இந்த ஸ்மார்ட்போன்களின் சர்வதேச வெளியீடும் நடைபெற உள்ளது.

    ரியல்மி நிறுவனம் சீன சந்தையில் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதில் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை நேற்று (நவம்பர் 24) சீன சந்தையில் நடைபெற்றது. விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலியே புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்கப்பட்டதகாக ரியல்மி அறிவித்து இருக்கிறது.

    இரண்டு லட்சம் யூனிட்கள் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரு ஸ்மார்ட்போன்களும் சரியாக எத்தனை யூனிட்கள் விற்பனையாகின என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல் மட்டும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.

    இரு ஸ்மார்ட்போன்களும் ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் வளைந்த டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் விற்பனையில் அசத்தி வரும் நிலையில், இதன் சர்வதேச வெளியீடு பற்றிய அறிவிப்பும் நேற்றே வெளியாகி விட்டது. மேலும் சர்வதேச வெளியீட்டின் போதே இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகமாகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 10 ப்ரோ மாடலில் LCD ஃபிளாட் டிஸ்ப்ளே, ப்ரோ பிளஸ் மாடலில் வளைந்த எட்ஜ்கள், OLED பேனல், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்களில் கிரேடியண்ட் பேக் பேனல் டிசைன், இரு கேமரா சென்சார்கள், 108MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் கொண்டிருக்கின்றன. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் உள்ளது.

    ரியல்மி 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ப்ரோ பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி ப்ரோ மாடலில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ப்ரோ பிளஸ் மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • போக்கோ நிறுவனம் இம்மாத இறுதியில் புது ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இதுதவிர போக்கோ F4 மற்றும் X4 மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை போக்கோ C50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய போக்கோ C50 ஸ்மார்ட்போன் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி போக்கோ F4 மற்றும் X4 மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளிலும் போக்கோ ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், 23049PCD8G எனும் மாடல் நம்பர் போக்கோ ஸ்மார்ட்போன் EEC வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. டிப்ஸ்டர் முகுல் ஷர்மா இந்த போக்கோ ஸ்மார்ட்போன் EEC தளத்தில் கண்டதாக தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

    நவம்பர் மாதத்திலேயே போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போக்கோ C50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி A1+ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 6.5 இன்ச் IPS LCD பேனல், வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் HD+ ரெசல்யூஷன் வழங்கப்பட இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5MP செல்ஃபி கேமரா, 8MP பிரைமரி கேமரா, 0.08MP இரண்டாவது கேமரா, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், 2 ஜிபி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. போக்கோ C50 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்படலாம்.

    • ஐகூ நிறுவனம் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஐகூ 11 மாடல் அதிகபட்சம் 200 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் துணை பிராண்டு ஐகூ குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போன் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக ஐகூ 11 ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் ஐகூ 11 அறிமுகமாகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

    சமீபத்தில் தான் விவோ நிறுவனம் விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இதன் துணை பிராண்டு ஐகூ தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஐகூ மலேசியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் "மான்ஸ்டர்" பேட்டரி கொண்டிருக்கும் என ஐகூ வெளியிட்டு இருக்கும் டீசரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இத்துடன் ஐகூ 11 மாடல் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் டீசரில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐகூ 10 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 200 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கலாம். சீனாவில் விற்பனை செய்யப்படும் ஐகூ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக பத்து நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. ஐகூ 10 ஸ்மார்ட்போனில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் பல்வேறு புது வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம். புதிய குவால்காம் பிராசஸர் முந்தைய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1-ஐ விட 4.35X சிறப்பான ஏஐ அம்சங்கள், 40 சதவீத அதிக மின்திறன் பயன்பாடு, 25 சதவீதம் வேகமான GPU திறன் கொண்டிருக்கிறது.

    ×