என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அடுத்த மாதம் இந்தியா வரும் புது சாம்சங் ஸ்மார்ட்போன் - விலை இவ்வளவு தானா?
    X

    அடுத்த மாதம் இந்தியா வரும் புது சாம்சங் ஸ்மார்ட்போன் - விலை இவ்வளவு தானா?

    • சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புது சாம்சங் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து 91Mobiles வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி F13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி F14 ஸ்மார்ட்போனில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போதைய பட்ஜெட் மற்றும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்றாக 5ஜி இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி F14 மாடலில் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், எக்சைனோஸ் 850 சிப்செட், மாலி G52 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ரேம் எக்ஸ்பான்ஷன் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ 4.0, 4ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது.

    6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி F14 ஸ்மார்ட்போன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50Mஜ பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புது கேலக்ஸி F14 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம்.

    Next Story
    ×