என் மலர்
மொபைல்ஸ்

பிப்ரவரியில் இந்தியா வரும் ஒன்பிளஸ் 11 5ஜி!
- ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் முற்றிலும் புதிய இயர்பட்ஸ் மாடலை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற இருக்கும் "கிளவுட் 11" நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலையும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன், ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்கள் மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. தற்போதைய டீசர்களில் "விட்னஸ் தி ஷேப் ஆஃப் பவர்" எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புது ஸ்மார்ட்போனில் அலெர்ட் ஸ்லைடர் மீண்டும் கொண்டுவரப்படுவது அம்பலமாகி இருக்கிறது. இந்த அம்சம் ஒன்பிளஸ் 10T மாடலில் நீக்கப்பட்டு இருந்தது.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் ஹேசில்பிலாட் பிராண்டிங் கொண்ட கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 டீசர் முந்தைய இயர்பட்ஸ் போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புது இயர்பட்ஸ் ஃபுல் பாடி, ஸ்டீரியோ தர ஆடியோ அனுபவம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர் கருத்துக்களின் அடிப்படையில் இந்த அம்சங்கள் வழங்கப்படுவதாக தெரிகிறது.
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் 2K அல்லது குவாட் HD+ ஸ்கிரீன், இடது புறத்தில் பன்ச் ஹோல், UFS 4.0 ஸ்டோரேஜ், மெட்டல் ஃபிரேம், 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 32MP டெலிபோட்டோ சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், 45db வரை அடாப்டிவ் ANC வசதி, ஒவ்வொரு இயர்பட்களிலும் மூன்று மைக்ரோபோன்கள், ப்ளூடூத் 5.2 மற்றும் LHDC 4.0 கோடெக் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த இயர்போன் ANC மோடில் ஆறு மணி நேரமும், ANC ஆஃப் செய்யப்பட்ட நிலையில் ஒன்பது மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.






