என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 42 சதவீதம் - மாஸ் காட்டிய ஆப்பிள்!
    X

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 42 சதவீதம் - மாஸ் காட்டிய ஆப்பிள்!

    • ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவன வருவாய் அறிக்கை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • உலகளவில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 5ஜி மாடல்கள் மட்டும் 46 சதவீதம் இடம்பிடித்துள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது சமீபத்திய ஆய்வு அறிக்கையில் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. இம்முறை போட்டி நிறுவனங்களை விட ஆப்பிள் நிறுவனம் அதிகளவு முன்னிலையில் உள்ளது. கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் பங்கு அதிகரித்து இருக்கிறது.

    வருடாந்திர அடிப்படையில் ஸ்மார்ட்போன் விற்பனை ஒட்டுமொத்தமாக மூன்று சதவீதம் சரிவடைந்த நிலையில், ஆப்பிள் வருவாயில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வினியோகமும் 12 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனின் சராசரி விற்பனை விலை பத்து சதவீதம் வரை உயர்ந்து இருந்தது. ஒட்டுமொத்த விற்பனையில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை மட்டும் 46 சதவீதம் ஆகும்.

    மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் வருவாய் பங்கில் 42 சதவீதம் பிடித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலாக்கட்டத்தில் இருந்த 37.1 சதவீதத்தை விட அதிகம் ஆகும். இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் அதிகளவு விற்பனையாகின.

    2022 அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் வரை ஐபோன் 14 பிளஸ் மாடலின் விற்பனை துவங்காமலேயே இருந்தது. ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் வருவாயில் ஆப்பிள் முதலிடம் பிடித்த நிலையில், சாம்சங் இரண்டாவது இடத்தை பிடித்தது. ஒட்டுமொத்த வருவாயில் சாம்சங் நிறுவனம் 18.3 சதவீத வருவாயை எட்டி இருக்கிறது. சியோமி நிறுவனம் 8.3 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடம் பிடித்தது.

    முதல் மூன்று இடங்களை தொடர்ந்து ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் முறையே ஆறு மற்றும் ஐந்து சதவீத பங்குகளை பிடித்து நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. இந்த அறிக்கையின் படி சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவது உறுதியாகி இருக்கிறது.

    Next Story
    ×