என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • சாம்சங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கும் சிறப்பு விற்பனையை நடத்துகிறது.
    • சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, மாணிட்டர் என ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    சாம்சங் இந்தியா நிறுவனம் "Black Friday" சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி துவங்குகிறது. சாம்சங் Black Friday விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, மாணிட்டர், குளிர்சாதன பெட்டி என ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    சலுகைகளை முழுமையாக அறிவிக்கும் முன் அவற்றின் டீசரை சாம்சங் வெளியிட்டு உள்ளது. அதன்படி கேலக்ஸி Z ஃபோல்டு 4, கேலக்ஸி Z ஃப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களுக்கு அதிகளவு தள்ளுபடி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    சாம்சங் Black Friday சலுகை விவரங்கள்:

    சாம்சங் நடத்தும் சிறப்பு Black Friday சலுகைகள் நவம்பர் 24 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் கேலக்ஸி S22 சீரிஸ் விலை ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே போன்று கேலக்ஸி Z ஃபோல்டு 4, Z ஃப்ளிப் 3 மாடல்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் விலை ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும்.

    கேலக்ஸி S21 FE மாடல் விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும். மேலும் கேலக்ஸி S21 FE 5ஜி மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்பட இருக்கிறது. சாம்சங் கடைசியாக அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடல்களின் விலையும் குறைக்கப்பட இருக்கிறது. இத்துடன் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ விலையும் குறைகிறது.

    இவைதவிர கேலக்ஸி A சீரிஸ் மற்றும் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி லேப்டாப், மாணிட்டர், அக்சஸரீக்கள், டிவி, சவுண்ட் பார், வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி, டேப்லெட், ஏசி மற்றும் சமையலறை சாதனங்களுக்கும் அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அவ்வப்போது அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்படுவது வாடிக்கையான விஷயம் தான்.
    • முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் துவங்கி, மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் பலரும் ஐபோன்களுக்கு திடீர் சலுகை அறிவிப்பர்.

    இந்திய சந்தையில் ஐபோன் 12 மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி ஆன்லைன் விற்பனையாளரான ப்ளிப்கார்ட் ஐபோன் 12 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7 ஆயிரத்து 130 அதிரடி தள்ளுபடி வழங்குகிறது. முன்னதாக ஐபோன் 12 மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஐபோன் 12 மாடலுக்கு தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 (64 ஜிபி) விலை தற்போது ரூ. 48 ஆயிரத்து 999 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக நவம்பர் 15 ஆம் தேதி ஐபோன் 12 விலை ரூ. 56 ஆயிரத்து 129 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் 2020 அக்டோபர் மாத வாக்கில் ஐபோன் 12 மாடல் ரூ. 79 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்போது இதன் விலை ரூ. 48 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி ஐபோன் 12 வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சம் ரூ. 17 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். எக்சேன்ஜ் மதிப்பு ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் அது எந்த அளவுக்கு சீராக இயங்குகிறது என்பதை பொருத்து வேறுபடும்.

    இவை தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 64 ஜிபி மட்டுமின்றி ஐபோன் 12 128 ஜிபி, 256 ஜிபி மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரு மாடல்களின் விலை முறையே ரூ. 53 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது.

    ஐபோன் 12 அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்டு கிளாஸ், ஏ14 பயோனிக் பிராசஸர், டூயல் 12MP கேமரா சென்சார்கள், 12MP செல்ஃபி கேமரா, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஐபோன் 12 மாடலுடன் யுஎஸ்பி சை டு லைட்னிங் கேபிள் வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இருவித ரேம், மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் முற்றிலும் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மாரட்போன் விலை இந்தியாவில் ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஒன்பிளஸ் 10 ப்ரோ விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதே விலை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் சில்லறை விற்பனை மையங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனினும், இந்த விலை குறைப்பு நிரந்தரமானதா அல்லது குறுகிய காலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 66 ஆயிரத்து 999 விலையில் வெளியிடப்பட்டது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விலை குறைப்பின் படி இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 61 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 66 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது.

    அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளத்தில் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் 10 ப்ரோ விலையை மேலும் குறைக்க முடியும். கூடுதலாக ஒன்பிளஸ் பட்ஸ் Z2 மாடலை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் வாங்கிட முடியும். ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒன்பிளஸ் பட்ஸ் Z2 உண்மையான விலை ரூ. 5 ஆயிரத்து 499 ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் QHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளே, LTPO 2.0 தொழில்நுட்பம், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஐகூ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • புது ஐகூ ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ஐகூ 11 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் 6.78 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 144Hz E6 AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. மேலும் ஐகூ 11 சீரிஸ் மலேசிய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை ஐகூ வெளியிட்டு வருகிறது.

    ஐகூ 11 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.78 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் வளைந்த E6 AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் GPU

    8 ஜிபி, 12 ஜிபி ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒரிஜின் ஒஎஸ் 3 / ஃபன்டச்ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    8MP மேக்ரோ கேமரா, வி2 இமேஜிங் சிப்

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஹை-ஃபை ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    ஐகூ 11 ஸ்மார்ட்போன் ஐல் ஆஃப் தி மேன் எடிஷன் மற்றும் டிராக் எடிஷனில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    • ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
    • புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிசில் இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மற்றும் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 6.7 இன்ச் FHD+ 120Hz OLED 61 டிகிரி வளைந்த ஸ்கிரீன் மற்றும் அல்ட்ரா நேரோ பெசல்கள் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக ரியல்மி 10 ப்ரோ பிளஸ் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2.33mm அல்ட்ரா-நேரோ சின் உள்ளது.

    புதிய ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 1080 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், X ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டார், 4D கேம் வைப்ரேஷன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 108MP பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி 10 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

    8 ஜிபி, 12 ஜிபி ரேம்,

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

    108MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 10 ப்ரோ அம்சங்கள்:

    6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

    ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    8 ஜிபி, 12 ஜிபி ரேம்,

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

    108MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 1699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 445 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 2399 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 27 ஆயிரத்து 465 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி 10 ப்ரோ விலை 1599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 300 என துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை 1899 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்து 735 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை சீன சந்தையில் நவம்பர் 24 ஆம் தேதி துவங்குகிறது.

    • ஐகூ நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • மேலும் புதிய ஸ்மார்ட்போனிற்கென அதிகாரப்பூர்வ டீசர் அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

    விவோ நிறுவனம் ஐகூ பெயரில் துணை பிராண்டை 2019 வாக்கில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் 2020 பிப்ரவரி மாத வாக்கில் ஐகூ களமிறங்கியது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஐகூ பிராண்டு இரண்டு நாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. மலேசிய நாட்டில் கடந்த சில வாரங்களாக புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை ஐகூ தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தது.

    தற்போது ஐகூ மலேசியா ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கான டீசரில் ஐகூ 11 5ஜி அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனுடன் பிஎம்டபிள்யூ M மோட்டார்ஸ்போர்ட்-ஐ சார்ந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

    இந்த மாடல் ரெட், பிளாக் மற்றும் புளூ நிற ஸ்டிரைப்களை கொண்டிருக்கும் என்றும் ஐகூ 11 லெஜண்ட் பெயரில் அறிமுகமாக இருக்கிறது. புதிய லெஜண்ட் மாடலில் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புது லெஜண்ட் மாடல் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

    நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஐகூ புது ஸ்மார்ட்போன்களின் டீசரை மலேசியாவில் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், இதே காலக்கட்டத்தில் புது ஸ்மார்ட்போன் சீனாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    சீனா மற்றும் மலேசியா மட்டுமின்றி இந்திய சந்தையிலும் புதிய ஐகூ 11 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இந்தியாவில் ஐகூ 11 சீரிஸ் மாடல்கள் டிசம்பர் அல்லது ஜனவரி மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

    அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 மாடலில் 6.78 இன்ச் E6 AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், LPDDR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 16MP செல்பி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா, விவோ வி2 ISP சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஜிட்டல் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3C தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சாம்சங்கின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக புதிய கேலக்ஸி A54 5ஜி மாடலின் டிஜிட்டல் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவற்றை 91 மொபைல்ஸ் ஆன்லீக்ஸ் உடன் இணைந்து வெளியிட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A53 5ஜி மாடலுக்கு மாற்றாக புதிய கேலக்ஸி A54 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை புதிய கேலக்ஸி A54 5ஜி மாடல் 158.3x76.7x8.2mm அளவில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இது தற்போதைய கேலக்ஸி A53 5ஜி மாடலை விட அளவில் சற்று சிறியதாகவும், அகலமாகவும் இருக்கிறது.

    எனினும், கேலக்ஸி A54 5ஜி மாடலின் பின்புறம் முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஃபிளாட் பேக் பேனல், மூன்று கேமரா சென்சார்கள் வட்ட வடிவம் கொண்டுள்ளன. இத்துடன் எட்ஜ்கள் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது வளைந்து காணப்படுகின்றன. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கின்றன. மைக்ரோபோன், ஸ்பீக்கர் கிரில், யுஎஸ்பி டைப் சி கீழ்புறத்திலும், சிம் டிரே, இரண்டாவது மைக்ரோபோன் மேல்புறத்தில் உள்ளன.

    ஸ்மார்ட்போனின் முகப்பில் பன்ச் ஹோல் ரக கட்-அவுட், 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கேலக்ஸி A53 5ஜி மாடலில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. டிசைனை பொருத்தவரை கேலக்ஸி A54 5ஜி மாடல் தோற்றத்தில் கிட்டத்தட்ட கேலக்ஸி S23 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் உற்பத்தி தரம் கேலக்ஸி S23 மாடலை விட அதிகளவு வேறுபடும்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி A54 5ஜி மாடலில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மூன்று கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 வழங்கப்படும் என தெரிகிறது. புதிய கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: 91mobiles

    • சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
    • இது சியோமியின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சியோமி 13 மாடல் சீன சந்தையிலேயே அடுத்த மாதம் தான் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், சியோமி 13 மாடல் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி சியோமி 13 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. தற்போது பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கும் சியோமி 13 மாடல் 2210132G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. வழக்கம்போல் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் எதுவும் பிஐஎஸ் தளத்தில் இடம்பெறவில்லை.

    எனினும், இந்த ஸ்மார்ட்போன் எதிர்காலத்தில் இந்தியாவில் அறிமுகமாவது மட்டும் உறுதியாகி இருக்கிறது. முதற்கட்டமாக சியோமி 13 மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதன் பின் இந்தியா வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி 13 ஸ்மாரட்போன் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 6.2 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 50MP பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர இணையத்தில் வெளியான ரெண்டர்களின் படி சியோமி 13 ஸ்மார்ட்போன் ஃபிளாட் சர்ஃபேஸ், கூர்மையான எட்ஜ் மற்றும் மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் இதன் மேல்புறத்தில் பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் பெட்டி போன்ற தோற்றம் பெறும் வகையில், அதன் ஓரங்களில் வளந்த டிசைனுக்கு மாற்றாக ஃபிளாட் சர்ஃபேஸ் காணப்படுகிறது. மேலும் இதில் மேம்பட்ட கேமரா மாட்யுல் உள்ளது. சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யுலில் மொத்தம் நான்கு சென்சார்கள் உள்ளது.

    Photo Courtesy: OnLeaks x Comparedial

    • விவோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய X90 சீரிஸ் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
    • புதிய ஸ்மார்ட்போனுடன் இயர்பட்ஸ் 3 மாடலும் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விவோ நிறுவனம் விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய X90 சீரிசில் X90, X90 ப்ரோ மற்றும் X90 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. விவோ X90 மற்றும் X90 மாடல்கள் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர், X90 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஏற்கனவே பல்வேறு டீசர்கள் வெளியான நிலையில், X90 சீரிசில் செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் டி கோட்டிங் கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் விவோ உருவாக்கிய வி2 சிப் வழங்கப்பட இருக்கிறது. விவோ X90 சீரிசில் BOE ஸ்கிரீன், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ஒரிஜின் ஒஎஸ் 3 வழங்கப்படும் என தெரிகிறது. விவோ X90 ப்ரோ மற்றும் X90 ப்ரோ பிளஸ் மாடல்களில் லெதர் போன்ற பேக் மற்றும் மெட்டல் ஸ்ட்ரிப் வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா, 64MP ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் விவோ தனது X90 சீரிஸ் கேமரா அப்கிரேடு பற்றி அறிவித்து இருந்தது. அதில் புது ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் மற்றும் அதன் திறன் பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

    புது ஸ்மார்ட்போன்களுடன் விவோ TWS 3 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விவோ இயர்பட்ஸ் 48db/49db நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றிய இதர தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • புதிய ரியல்மி 10 5ஜி மாடலில் 50MP பிரைமரி சென்சாருடன் மொத்தம் மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ரியல்மி நிறுவனம் ஏராளமான டீசர்களை தொடர்ந்து புதிய ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், 8MP செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, விஜிஏ டெப்த் கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 10 5ஜி மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரியல்மி 10 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

    மாலி G-57 MC2 GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0

    50MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    2MP மேக்ரோ கேமரா

    0.3MP விஜிஏ டெப்த் கேமரா

    8MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 182 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 760 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 224 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 165 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • விவோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புதிய விவோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    விவோ நிறுவனம் தனது X90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. முந்தைய தகவல்களில் புதிய விவோ ஸ்மார்ட்போன் சோனி IMX989 பிரைமரி கேமரா மற்றும் விவோ V2 ISP சிப் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வந்தது.

    அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ X90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3 கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. விவோ X90 ப்ரோ பிளஸ் மாடல் சிங்கில் கோரில் 1485 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 4739 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இதுதவிர புதிய விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் 6.78 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், UFS4.0 ஸ்டோரேஜ், LPDDR5X ரேம் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

    • ரியல்மி நிறுவனம் சர்வதேச சந்தையில் ரியல்மி 10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ரியல்மி 10 அம்சங்கள்:

    6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்

    Arm Mali -G57 MC2

    4 ஜிபி , 8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0

    50MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி 10 ஸ்மார்ட்போன் கிளாஷ் வைட் மற்றும் ரஷ் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 179 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 550 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 204 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 630 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×