என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 47 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கும் ப்ளிப்கார்ட்!
    X

    சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 47 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கும் ப்ளிப்கார்ட்!

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z ஃப்ளிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 95 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் பிரிவில் மிகவும் வித்தியாசமான மாடலை வாங்குவோர் எவ்வித தயக்கமும் இன்றி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்க துவங்கி விட்டனர். இந்த பிரிவில் சாம்சங் மூன்று தலைமுறை மாடல்களை அறிமுகம் செய்து, விற்பனையிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. எனினும், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை பிரீமியம் ஃபிளாக்‌ஷிப் பிரிவில் பெரும்பாலானோர் வாங்க முடியாத வகையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் அவ்வப்போது அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி மாடல் ரூ. 95 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இதனை ரூ. 45 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

    ப்ளிப்கார்ட் தற்போது கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் அதன் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என மாறி விடும். இதைத் தொடர்ந்து வங்கி சலுகை மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்க்கும் போது கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி மாடலின் விலை மேலும் குறைகிறது. அதாவது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 21 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.

    இதற்கு எக்சேன்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். இத்துடன் வங்கி சலுகைகளை பொருத்தவரை கோடக் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி, அதிகபட்சம் ரூ. 750 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் ஐடிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம், அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அந்த வகையில், ப்ளிப்கார்ட் தள்ளுபடி, வங்கி சலுகை மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை முழுமையாக பெறும் பட்சத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனினை ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும். இந்த சலுகைகள் எவ்வளவு காலம் வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும், இவை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

    Next Story
    ×