என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • புது லாவா ஸ்மார்ட்போன் யுனிசாக் பிராசஸர் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கிறது.

    லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. லாவா யுவா 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி750 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு அடிப்படையில் செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக லாவா தெரிவித்துள்ளது.

    கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கும் லாவா யுவா 5ஜி மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     


    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் லாவா இ ஸ்டோர், லாவா ரிடெயில் ஸ்டோர்களில் ஜூன் 5 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

    • போக்கோ F6 5ஜி மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் F6 5ஜி இந்திய விற்பனை துவங்கியது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில், போக்கோ F6 5ஜி மாடலுக்கு ரூ. 4 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் போக்கோ F6 5ஜி மாடல் பிளாக் மற்றும் டைட்டானியம் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதுதவிர எக்சேஞ்ச் சலுகையாக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழஹ்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் மாதம் ரூ. 2 ஆயிரத்து 166 வீதம் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

    • ஸ்மார்ட்போனின் விற்பனை மே 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
    • விற்பனை ரியல்மி, அமேசான் இந்தியா வலைதளங்களில் நடைபெறவுள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது GT 6T ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மே 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    இந்த நிலையில், புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்காக நாளை (மே 28) Early Access முறையில் ரியல்மி GT 6T மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. அந்த வகையில், ரியல்மி GT 6T மாடலின் சிறப்பு விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. விற்பனை ரியல்மி மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் நடைபெற உள்ளது.

     


    விலை விவரங்கள்:

    ரியல்மி GT 6T 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 30 ஆயிரத்து 999

    ரியல்மி GT 6T 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 32 ஆயிரத்து 999

    ரியல்மி GT 6T 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 35 ஆயிரத்து 999

    ரியல்மி GT 6T 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி ரூ. 39 ஆயிரத்து 999

    புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன்களை சேர்க்கும் போது ரூ. 6 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும்.

    ரியல்மி GT 6T மாடலில் 6.78 இன்ச் 1.5K 8T LTPO AMOLED ஸ்கிரீன் கொண்ட ப்ரோ XDR டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 9-லேயர் கூலிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 129 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்கிறது.
    • சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்.

    சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில்- ஒருமுறை சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களும், மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

    இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், இந்த ஆண்டிற்கான அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி பாரிஸ் நகரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பார்டனராக சாம்சங் நிறுவனம் இருக்கிறது. அந்த வகையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இரு வாரங்களுக்கு முன்பு கேலக்ஸி அன்பேக்டு நிகவ்வை நடத்த சாம்சங் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சாம்சங்கின் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் தவிர கேலக்ஸி Z ஃபோல்டு FE மற்றும் Z ஃப்ளிப் FE மாடல்கள் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவற்றுடன் கேலக்ஸி ரிங் சாதனத்தின் விலை விவரங்கள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த சாதனம் கேலக்ஸி S24 அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட்டு, 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை புதிய போக்கோ F6 பெற்றது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய F6 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்கோ F6 5ஜி மாடலில் 6.67 இன்ச் 1.5K Crystal ResFlow 120Hz AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை புதிய போக்கோ F6 5ஜி பெற்றுள்ளது.

    இத்துடன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஓ.எஸ். அப்டேட்களும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக சியோமி தெரிவித்து இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க டூயல் 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 90 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

    போக்கோ F6 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை மே 29 ஆம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது.

    • இதன் உண்மை விலை ரூ. 39 ஆயிரத்து 999 ஆகும்.
    • இதன் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 12R ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்க்ராட் வலைதளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 12R மாடலுக்கு தற்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒன்பிளஸ் சாதனங்களை ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யும் தளமாக அமேசான் உள்ளது.

    இந்த நிலையில், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 36 ஆயிரத்து 366 என குறிப்பிடப்பட்டு இருககிறது. இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 39 ஆயிரத்து 999 ஆகும். அந்த வகையில், இதன் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

     


    அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். இதனால், ஒன்பிளஸ் 12R விலை ரூ. 37 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12R மாடலில் 6.78 இன்ச் 120Hz AMOLED ஸ்கிரீன், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 50MP பிரைமரி கேமரா, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்சிஜன் ஓ.எஸ். 14 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    குறிப்பு: ஸ்மார்ட்போனின் விலை எவ்வளவு நேரம் குறைக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப இதன் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

    • இந்த ஸ்மார்ட்போனில் 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ வளைந்த AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 கொண்டிருக்கும் விவோ Y200 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்டட் ரேம், 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     விவோ Y200 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ கர்வ்டு AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    8 ஜ.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14

    64MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய விவோ Y200 ப்ரோ ஸ்மார்ட்போன் சில்க் கிரீன் மற்றும் சில்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.
    • புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

    ஹெச்.எம்.டி. நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன் ஃபேபுலா போன்ற டிசைன் கொண்டிருக்கிறது.

    இவை தோற்றத்தில் நோக்கியாவின் லூமியா சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன்களின் புகைப்படத்துடன் இதன் வெளியீடு பற்றிய தகவல்களும் லீக் ஆகியுள்ளது. அதன்படி லூமியா ஸ்டைலிங் கொண்ட முற்றிலும் புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

     


    இந்த ஸ்மார்ட்போன் ஹெச்.எம்.டி. டாம்கேட் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா சென்சார், அல்ட்ரா வைடு லென்ஸ், டெப்த் சென்சார் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மெமரியை பொருத்தவரை இந்த மாடலில் அதிகபட்சம் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். ஹெச்.எம்.டி. டாம்கேட் மாடலில் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.

    4900 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் ஹெச்.எம்.டி. டாம்கேட் மாடலில் ப்ளூடூத் 5.2, 3.5mm ஆடியோ ஜாக், என்.எஃப்.சி. கனெக்டிவிட்டி, டூயல் ஸ்பீக்கர்கள், பியூர்வியூ மற்றும் OZO ஆடியோ சப்போர்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் IP67 தரச் சான்று பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • புதிய ஐகூ ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். கொண்டுள்ளது.

    ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் Full HD+ 120Hz ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஐகூ Z9x 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     


    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 14 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 14, கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஐகூ Z9x ஸ்மார்ட்போன் ஸ்டாம் கிரே மற்றும் டொர்னடோ கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஐகூ Z9x ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 மற்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை மே 21 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.

    • அந்நிறுவனம் ஏராளமான டீசர்களை வெளியிட்டு வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது GT 6T ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மே 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் தொடர்பாக அந்நிறுவனம் ஏராளமான டீசர்களை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் புதிய ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் சந்தையிலேயே முதல்முறையாக இரட்டை VC கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ரியல்மி GT 6T மாடலில் வழங்கப்படும் 9-அடுக்கு கூலிங் சிஸ்டம் ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை தடுக்கும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் கவர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இதில் 120 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் ரியல்மி தெரிவித்து இருந்தது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பயன்படுத்த முடியும்.

    ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 120Hz LTPO ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    • ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 499 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

     


    தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலுக்கு ரூ. 1250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்து 749 என மாறி இருக்கிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 750 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என மாறிவிடும். இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் சில்வர், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

    • இந்த மொபைல் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.
    • இந்த மொபைல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் முற்றிலும் புதிய நோக்கியா 3210 மொபைல் போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் அந்நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்த மொபைலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2.4 இன்ச் TFT LCD ஸ்கிரீன், QVGA ரெசல்யூஷன், 2MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மொபைல் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இது கிளவுட் சார்ந்த செயலிகளை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் செய்திகள், வானிலை அப்டேட்கள் மற்றும் யூடியூப் ஷாட்ஸ் உள்ளிட்டவைகளை இயக்க முடியும். 2024 நோக்கியா 3210 மாடல் யுனிசாக் டி107 பிராசஸர், 64எம்.பி. ரேம், 128 எம்.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5, 3.5mm ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, MP3 பிளேயர் மற்றும் நோக்கியா போன்களில் பிரபலமான ஸ்னேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் 1450 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா 3210 (2024) மாடலின் விலை 89 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போன் க்ரஞ்ச் பிளாக், Y2K கோல்டு மற்றும் சப்பா புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

    ×