என் மலர்
மொபைல்ஸ்
- பிக்சல் 8a ஸ்மார்ட்போன் டென்சார் G3 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்- பிக்சல் 8a மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிக்சல் 8a மாடலில் 6.1 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் கூகுள் டென்சார் G3 பிராசஸர், டைட்டன் M2 செக்யூரிட்டி சிப், ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ்., அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் சப்போர்ட் அதாவது செக்யூரிட்டி அப்டேட்கள், ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்கிரேடுகள் வழங்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
கூகுள் பிக்சல் 8a அம்சங்கள்:
6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
கூகுள் டென்சார் G3 பிராசஸர்
டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 14
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஒ.ஐ.எஸ்.
13MP அல்ட்ரா வைடு கேமரா
13MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 மைக்ரோபோன்கள்
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
4492 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
வயர்லெஸ் சார்ஜிங்
இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 52 ஆயிரத்து 999 என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை மே 14 ஆம் தேதி துவங்குகிறது.
- இவற்றில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
- ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. விவோ Y18 மற்றும் Y18e என அழைக்கப்படும் இரு மாடல்களிலும் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
டிசைனை பொருத்தவரை இரு மாடல்களும் விவோ Y03 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. விவோ Y03 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ Y18 மற்றும் Y18e மாடல்களில் 6.56 இன்ச் HD+ 1612x720 பிக்சல் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி G85 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க Y18 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 0.08 சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. விவோ Y18e மாடலில் 13MP பிரைமரி கேமரா, 0.08MP சென்சார் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், IP54 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
விவோ Y18 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ Y18e ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இரு ஸ்மார்ட்போன்களும் ஜெம் கிரீன் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இவை விவோ இந்தியா இ ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
- ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
- ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 2400 பிராசஸர், 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S24 மாடலின் புதிய 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 999 ஆகும்.

கேலக்ஸி S24 அம்சங்கள்:
6.2 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
1-120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பிரைட்னஸ்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு
சாம்சங் எக்சைனோஸ் 2400 பிராசஸர்
எக்ஸ்-க்ளிப்ஸ் 940 GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி./ 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ. 6.1
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS
12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா
10MP டெலிபோட்டோ லென்ஸ், OIS
12MP செல்ஃபி கேமரா
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஏற்கனவே விற்பனை செய்யப்படும் V29e மாடலின் மேம்பட்ட வெர்ஷன்.
- ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஒ.எஸ். 14 உள்ளது.
விவோ நிறுவனத்தின் V30e ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிட் ரேஞ்ச் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விவோ V30e ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் V29e மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய விவோ V30e ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், 6.78 இன்ச் Full HD+ கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட்அவுட், அட்ரினோ GPU கிராஃபிக்ஸ், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க விவோ V30e மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், ஆரா லைட் அம்சம், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் விவோ V30e ஸ்மார்ட்போன் வெல்வெட் ரெட் மற்றும் சில்வர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 2 ஆயிரத்து 500 வரை எக்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
- சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம்.
- சீன சந்தையில் கடந்த மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனம் இந்த ஆண்டு சியோமி 14 மற்றும் சியோமி 14 அல்ட்ரா என இரண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில், சியோமி நிறுவனம் மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 14 SE பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது சியோமி நிறுவனத்தின் சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று டிப்ஸ்டரான அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு தவிர இதன் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

சியோமி 14 SE மாடல் ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீன சந்தையில் கடந்த மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி சிவி 4 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் இரண்டு 32MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. சியோமி சிவி 4 ப்ரோ மாடலில் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் வயர்டு சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
விலையை பொருத்தவரை புதிய சியோமி 14 SE மாடல் சியோமி 14 மற்றும் சியோமி 14 அல்ட்ரா மாடல்களை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய சியோமி 14 SE பற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- கழற்றக்கூடிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- கிளவுட் சார்ந்த செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 215, 225 மற்றும் 235 4ஜி பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய பீச்சர் போன் மாடல்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் T9 கீபோர்டு, ப்ளூடூத், எஃப்.எம். ரேடியோ, QVGA ஸ்கிரீன் மற்றும் கழற்றக்கூடிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிரிக்கா, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிய பசிபிக் நாடுகளில் இந்த பீச்சர் போன் மாடல்கள் கிளவுட் சார்ந்த செயலிகளை பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கும். இவற்றை கொண்டு ஸ்மார்ட் அம்சங்களான செய்திகள், வானிலை மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் உள்ளிட்டவைகளை ஒரே தளத்தில் இயக்க முடியும்.

அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி பீச்சர் போன்களில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே, QVGA ரெசல்யூஷன், நோக்கியா 225 4ஜி மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, QVGA ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் மூன்று மாடல்களிலும் யுனிசாக் T107 பிராசஸர், எஸ்30 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
நோக்கியா 225 4ஜி மற்றும் 235 4ஜி மாடல்களில் முறையே வி.ஜி.ஏ. கேமரா மற்றும் 2MP கேமரா கொண்டிருக்கிறது. நோக்கியா 215 4ஜி மாடலின் பின்புறம் டார்ச், 225 4ஜி மற்றும் 235 4ஜி மாடல்களில் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மூன்று புதிய பீச்சர் போன்களிலும் MP3 பிளேயர், எஃப்.எம். ரேடியோ, ப்ளூடூத் 5, 3.5mm ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப் சி, 64MB ரேம், 128MB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 1450 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 215 4ஜி மாடல் பீச், பிளாக் மற்றும் டார்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 59 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 280 என துவங்குகிறது. நோக்கியா 225 4ஜி மாடல் பின்க் மற்றும் டார்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 69 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 ஆயிரத்து 170 ஆகும்.
நோக்கியா 235 4ஜி மாடல் புளூ, பிளாக் மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 79 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 070 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் புது வெர்ஷன் அறிமுகம்.
- ரெட்மி நோட் 13 சீரிசில் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மூன்று மாடல்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் வொர்ல்டு சாம்பியன்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புது வெர்ஷனுடன் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்களின் விலை குறைக்கப்படுவதாக சியோமி தெரிவித்து இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 15 ஆயிரத்து 499 என்று மாறியுள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 25 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 21 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 31 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 27 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டு மூலம் பணம் செலுத்தும் போது வழங்கப்படும் ரூ. 3 ஆயிரம் வங்கி தள்ளுபடியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் மட்டுமே பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- சி.எம்.எஃப். ஆடியோ சாதனங்களை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு.
நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது நத்திங் போன் 2a மாடலின் புளூ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக நத்திங் போன் 2a மாடல் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக புளூ நிற வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய நத்திங் போன் 2a புளூ எடிஷனில் நிறம் தவிர டிசைன் மற்றும் அம்சங்களில் எந்த விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த நிற வேரியண்ட் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வருகிற மே 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் நத்திங் போன் 2a விற்பனை நடைபெற உள்ளது. இந்த விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 19 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இத்துடன் "ஜீரோ ஹவர்" சிறப்பு விற்பனையின் கீழ் வாடிக்கையாளர்கள் சி.எம்.எஃப். ஆடியோ சாதனங்களை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு.
இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் விலையில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வர உள்ளது
- உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.
கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது. இது இந்திய சந்தையில் ரூ.2,999க்கு விற்பனையானது.
உலகம் முழுவதும் இந்த செல்போன் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து ஸ்மார்ட் போன்கள் வருகையால் இதன் தயாரிப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும் நம் நினைவுகளில் நோக்கியா 3210 ஆழமாக பதிந்துள்ளது. இதன் ஆயுள், எளிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சின்னமாக, 3210 பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது.
இப்போது, உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.
இந்நிலையில் Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் மீண்டும் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.இந்த நோக்கியா போன் - 2024 க்கான புதிய பட்ஜெட் போன் ஆகும் இதில் 4G, Bluetooth, Snake game 2 வசதிகள் உள்ளன.
- HMD நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் வருகிற 29 - ந் தேதி முதன் முறையாக கால் பதிக்கிறது
- HMD பல்ஸின் விலை ரூ. 12,500, பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 உள்ளது.
HMD நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் வருகிற 29 - ந் தேதி முதன் முறையாக கால் பதிக்கிறது . புதிய 'ஸ்மார்ட்போன்'களான HMD பல்ஸ், பல்ஸ்+ மற்றும் பல்ஸ் ப்ரோ ஆகிய 3 வகைகளில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் பல்ஸ் மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் பல்ஸ் ப்ரோ மற்றும் பல்ஸ் பிளஸ் மாடல்களில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி606 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
ப்ரோ மற்றும் பிளஸ் மாடல்கள் 128 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன, அதே நேரத்தில் வழக்கமான பல்ஸ் 64 ஜிபி. இந்த 3 செல்போன்களும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 256ஜிபி வரை விரிவாக்க சேமிப்பகம் உள்ளன.

இந்த செல்போன்கள் Android 14 இயக்க முறைமையில் இயங்குகின்றன, HMD இரண்டு முக்கிய OS புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட பாதுகாப்பு வழங்குகிறது.
பல்ஸ், பல்ஸ் பிளஸ் மற்றும் பல்ஸ் ப்ரோ அனைத்தும் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளன. பிளஸ் மாடல் 20W வேகமான சார்ஜிங் உள்ளது, அதே போல் பிளஸ் மாடல்கள் 10W சார்ஜிங் உள்ளது. 3.5மிமீ ஹெட்போன் ஜாக், 4ஜி, வைபை 5 (ஏசி), புளூடூத் 5.0 மற்றும் என்எப்சி போன்ற வசதிகள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்கள் அதே 6.65-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இதில் 720p தெளிவுத்திறன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 600 நிட்கள் வரையிலான உச்ச பிரகாசம் ஆகியவை உள்ளன. பல்ஸ் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ளது.

பிளஸ் மற்றும் ப்ரோ மாடல்களில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 3:செல்போன்களிலும் இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகும். பல்ஸ் மற்றும் பல்ஸ் பிளஸ் செல்போன்களில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளன.
அதே போல் பல்ஸ் ப்ரோ செல்பிக்களுக்கான 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த செல்போன்கள் எளிதில் பழுது பார்க்கும் தன்மை உடையது.

HMD பல்ஸின் விலை ரூ. 12,500, பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 இந்தியாவில் விரைவில் கிடைக்க உள்ளது.
- ஐடெல் S24 ஸ்மார்ட்போனில் 108MP டூயல் ஏ.ஐ. கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் கேமிங் தொழில்நுட்பம் உள்ளது.
ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய S24 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் HD+ பன்ச் ஹோல் 90Hz டிஸ்ப்ளே, 480 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ G91 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் பிளஸ், 128 ஜி.பி. மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள டைனமிக் பார் அம்சம் மிகமுக்கிய நோட்டிபிகேஷன்களை கேமரா கட்-அவுட் பகுதியில் காண்பிக்கும். இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் கேமிங் தொழில்நுட்பம் உள்ளது.
புகைப்படங்களை எடுக்க ஐடெல் S24 ஸ்மார்ட்போனில் 108MP டூயல் ஏ.ஐ. கேமரா, EIS, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், மேம்பட்ட ஏ.ஐ. அம்சங்கள், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் S24 அம்சங்கள்:
6.6 இன்ச் HD+ 1612x720 பிக்சல் டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ G91 பிராசஸர்
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
8MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஐடெல் ஒ.எஸ். 13.5
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
3.5mm ஆடியோ ஜாக்
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் சார்ஜிங் வசதி
ஐடெல் S24 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் டான் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் டான் வைட் நிற வேரியண்ட் யு.வி. லைட் படும் போது பின்க் நிறத்திற்கு மாறிவிடும். இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.
- "பேக்மேன்ப்ரோ" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வந்தது.
- அந்த ஸ்மார்ட்போன் A142P எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.
நத்திங் நிறுவனத்தின் போன் (3) மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் (3) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில், நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் மாடல் டெட்ரிஸ் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பெயர் மற்றும் மாடல் நம்பர் தவிர ஸ்மார்ட்போனின் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் A015 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நத்திங் நிறுவனம் கடைசியாக அறிமுகம் செய்த நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன் A142P எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் "பேக்மேன்ப்ரோ" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வந்தது.
அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள பிராசஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 வெர்ஷனின் ஓவர்கிளாக் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். பிராசஸர் தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன.






