என் மலர்
தொழில்நுட்பம்
- ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.
- ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைப்பு.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13 போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக குறைத்து இருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பு ஐபோன்களின் 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்களுக்கு பொருந்தும்.

புதிய விலை விவரங்கள்:
ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 59 ஆயிரத்து 900
ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900
ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900
ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900
ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900
ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 99 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 10 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்துக்கானது ஆகும். எனினும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன் மாடல்களை இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர ஆன்லைன் வலைத்தளங்களில் சிறப்பு விற்பனையின் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- பழைய ஐபோன் மாடல்கள் விலை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மெல்ல மாற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் உற்பத்தியை அடுத்த காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர்) வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் நடைபெற இருக்கிறது. ஐபோன் 15-ஐ தொடர்ந்து ஐபோன் 15 பிளஸ் உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், புதிய ஐபோன்கள் அறிமுகத்தை தொடர்ந்து பழைய மாடல்கள் விலை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுவிர அடுத்த காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
பண்டிகை காலத்தில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களையும் இங்கு விற்பனைக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதும் இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தி குறைவாக இருக்கும் போதிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கணிசமான அளவு அதிகம் ஆகும்.
- ஹானர் 90 ஸ்மார்ட்போன் 2 ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் பெற இருக்கிறது.
- ஹானர் 90 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஹானர் 90 ஸ்மார்ட்போனுடன் ஹெச்டெக் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் குவாட் கர்வ்டு OLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டைனமிக் டிம்மிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னசை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒ.எஸ். 7.1 கொண்டிருக்கும் ஹானர் 90 ஸ்மார்ட்போன் 2 ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று ஹெச்டெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 7 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் முன்புற மற்றும் பிரைமரி கேமரா சென்சார்களிலும் EIS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஹானர் 90 அம்சங்கள்:
6.7 இன்ச் 2664x1200 பிக்சல் FHD+OLED 120Hz ஸ்கிரீன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர்
அட்ரினோ 644 GPU
8 ஜி.பி., 12 ஜி.பி. ரேம்
256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒ.எஸ். 7.1
டூயல் சிம் ஸ்லாட்
200MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
12MP அல்ட்ரா வைடு கேமரா
2MP டெப்த் சென்சார்
50MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
66 வாட் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய ஹானர் 90 ஸ்மார்ட்போன் டைமண்ட் சில்வர், மிட்நைட் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 18-ம் தேதி துவங்குகிறது.
- நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு.
- நோக்கியா X30 5ஜி மாடல் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. நோக்கியா X30 5ஜி மாடல் விலை ரூ. 50 ஆயிரத்திற்கு சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மாடலின் அம்சங்கள் மற்றும் அதன் விலை காரணமாக பலரும் இந்த மாடலை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 12 ஆயிரம் குறைந்து இருக்கிறது.

முன்னதாக ரூ. 48 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 36 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெரி என ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது.
விலை குறைப்பு நோக்கியா மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மாற்றப்பட்டு விட்டது. நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் வைட் மற்றும் கிளவுடி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

நோக்கியா X30 5ஜி அம்சங்கள்:
6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12
50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்
13MP அல்ட்ரா வைடு கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கேமரா கிளாஸ் பாதுகாப்பு
16MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஐபோன் 12-இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினையை சரி செய்ய வலியுறுத்தல்.
- ஐபோன் 12 உள்பட மொத்தம் 141 செல்போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஐபோன் 12 மாடலில் இருந்து அளவுக்கு அதிகமான மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுவதால், ஆப்பிள் நிறுவனம் இதன் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ரேடியோ-எலெக்ட்ரிக் அதிர்வெண்கள் மற்றும் பொது வெளியில் பரவும் மின்காந்த கதிர்வீச்சை கவனித்து வரும் தேசிய ஃபிரீக்வன்சி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பிய அறிக்கையில், ஐபோன் 12-இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினையை சரி செய்ய வலியுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக ஆப்பிள் வெளியிடும் அப்டேட்களை அரசு நிறுவனம் கவனிக்கும் என்றும், ஒருவேளை இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த ஐபோன்களையும் திரும்ப பெற வேண்டியிருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ANFR என்று அறியப்படும் இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உள்பட மொத்தம் 141 செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் மனித உடலால் ஈர்க்கப்படக் கூடிய மின்காந்த கதிர்வீச்சு செல்போன்களில் இருந்து எந்த அளவுக்கு வெளிப்படுகிறது என்று சோதனை செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் ஐபோன் 12 மாடலில் இருந்து ஒரு கிலோகிராமிற்கு 5.74 வாட்ஸ் வரையிலான மின்காந்த கதிர்வீச்சு வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஐரோப்பிய யூனியன் அனுமதித்து இருக்கும் ஒரு கிலோகிராமிற்கு 4.0 வாட்ஸ் என்ற அளவை விட அதிகம் ஆகும்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம்.
ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் (Wonderlust) நிகழ்வு நேற்றிரவு நேரலை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தது.
அதன்படி நிகழ்ச்சி துவக்கத்திலேயே ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை அறிவித்து விட்டார். இவரது அறிவிப்பை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலும், இதைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலும் அறிவிக்கப்பட்டன.

பிறகு ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் டைனமிக் ஐலேண்ட் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இறுதியில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான அறிவிப்பு வெளியானது. புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் டிசைன் கொண்டு அசத்தலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் முற்றிலும் புதிய ஏ17 சிப்செட் உள்ளது. இந்த பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் ஐபோன் 15 சீரிஸ் பற்றிய அறிவிப்புகளுடன் ஆப்பிள் வொண்டர்லிஸ்ட் நிகழ்வு நிறைவுபெற்றது. சர்வதேச அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் ஐபோன் 15 சிரிஸ், ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டன.
- ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அறிமுகம்.
- புதிய ஆப்பிள் சாதனங்கள் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிப்பு.
ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் சாதனங்களில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் ஆப்பிள் எஸ்9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள டபுள் டாப் அம்சம் கொண்டு அழைப்புகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலின் பல்வேறு அம்சங்களை டபுள் டேப் மூலம் இயக்கிவிட முடியும். புதிய சீரிஸ் 9 மாடலை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய விலை:
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அலுமினியம் மாடலின் இந்திய விலை ரூ. 41 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷனின் இந்திய விலை ரூ. 70 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விற்பனையும் செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது.

ஐபோன் 15 சீரிஸ் இந்திய விலை:
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகின்றன. இந்த விலை இரு மாடல்களின் 128 ஜி.பி. மெமரி கொண்ட வெர்ஷனுக்கானது ஆகும்.
ஐபோன் 15 (256 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 (512 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 15 பிளஸ் (256 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 பிளஸ் (512 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் இந்திய விலை:
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இந்த விலை இவற்றின் 128 ஜி.பி. மாடலுக்கானது ஆகும்.
ஐபோன் 15 ப்ரோ (256 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ (512 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ (1 டி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. இவற்றின் விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய டைட்டானியம் டிசைன் கொண்டுள்ளது.
- ஐபோன் 15 ப்ரோ சீரிசில் உள்ள ஏ17 சிப்செட் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களை தொடர்ந்து ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் டிசைன் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் ஏ17 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய யு.எஸ்.பி. டைப் 3 போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யு.எஸ்.பி. 3 போர்ட் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டா பரிமாற்றத்தை சாத்தியப்படுத்தும். ஐபோன் 15 ப்ரோ மாடலில் 48MP பிரைமரி கேமரா சென்சார், 12MP 3x டெலிஃபோட்டோ கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 5x டெலிஃபோட்டோ கேமரா, 120mm ஃபோக்கல் லென்த் வசதி உள்ளது.
ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஸ்பேஷியல் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோக்களை ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் பார்த்து ரசிக்க முடியும். புதிய ஐபோன் 15 ப்ரோ விலை 999 டாலர்கள், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை 1199 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அமெரிக்காவில் செப்டம்பர் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.
- ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.
- ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 48MP பிரைமரி கேமரா சென்சார் உள்ளது.
ஆப்பிள் "வொண்டர்லஸ்ட்" (Wonderlust) நிகழ்வில் இந்த ஆண்டிற்கான ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் முறையே 6.1 மற்றும் 6.7 இன்ச் டைனமிக் ஐலேண்ட் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபோன் 15 சீரிசில் மேம்பட்ட புதிய கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 48MP பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் சென்சார், 12MP டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கேமரா சென்சார்கள் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போர்டிரெயிட் ரக புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. இத்துடன் ட்ரூ டெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க பிரத்யேக நியூரல் என்ஜின் உள்ளது. இத்துடன் 5-கோர் ஜி.பி.யு., 6-கோர் சி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 15 மாடல் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 15 மாடல்களுடன் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 15 மாடலின் விலை 799 டாலர்கள் என்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை 899 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம்.
- இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறையும்.
வாட்ஸ்அப் செயலியில் புதிய ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ற வகையில், புதிய வசதிகளை வழங்கி வருகிறது. இது குறித்த புதிய தகவல் Wabetainfo வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் மல்டி-அக்கவுண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்த சட்டம் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை பிறப்பித்து இருக்கிறது. இதில் பயனர்கள் இதர செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதும் இடம்பெற்று இருக்கிறது.

முன்னணி தொழில்நுட்ப தளம் என்ற அடிப்படையில், வாட்ஸ்அப் செயலியும் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்திற்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றுவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான விதிகள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.19.8 அப்டேட்டில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் கொண்டு வேறு குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவோரும், வாட்ஸ்அப் பயனர்களை தொடர்பு கொண்டு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறைந்துவிடும், ஆனாலும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தில் சந்தேகத்தை எழுப்பும்.
இந்த அம்சம் எவ்வாறு இயங்கும், இது தொடர்பாக ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற தளங்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்டம்களில் முழுமையான என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது பயனர்கள் 7-வது விதியின் கீழ் இந்த ஆப்ஷனில் இருந்து வெளியேறும் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதி செயலியின் எதிர்கால வெர்ஷனில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- நோக்கியா G42 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கிறது.
- புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெற இருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா G42 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.56 இன்ச் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 5 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, மேக்ரோ சென்சார்கள் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். இரண்டு ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. நோக்கியா G42 மாலின் பேக் கவர் 65 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

நோக்கியா G42 5ஜி அம்சங்கள்:
6.56 இன்ச் HD+ 720x1612 பிக்சல் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர்
அட்ரினோ 619 GPU
6 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP மேக்ரோ கேமரா
8MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
நோக்கியா G42 5ஜி ஸ்மார்ட்போன் சோ கிரே மற்றும் சோ பரப்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை செப்டம்பர் 15-ம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.
- ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் 40 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
- அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபயர்-போல்ட் நிறுவனம் ஃபயர் பாட்ஸ் ஆரா இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ஜனவரி மாத வாக்கில் அறிமுகமான ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 மாடல் வரிசையில், இந்த இயர்பட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது.
இன்-இயர் ரக டிசைன் கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், 3டி சரவுண்ட் சவுண்ட் பேஸ் எஃபெக்ட்களை கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-இல் குவாட் மைக் ஏ.ஐ. இ.என்.சி. வசதி உள்ளது. இது அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தை தடுத்து நிறுத்தி, தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

புதிய ஃபயர் பாட்ஸ் ஆரா மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி காரணமாக இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்களுக்கு பிளேபேக் பெற முடியும். இதில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 40ms வரையிலான லோ-லேடன்சி கேமிங் மோட், ப்ளூடூத் 5.3, IPX4 தர ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபயர்-போல்ட் ஃபயர் பாட்ஸ் ஆரா இயர்பட்ஸ் புளூ, கிரீன், பிளாக், கிரே, பின்க், வைட் மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






