கிரிக்கெட் உலகக் கோப்பை 2023.. ரூ. 49 விலையில் அசத்தல் சலுகை அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. பயனர்கள் டேட்டா கட்டுப்பாடின்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023.. ரூ. 49 விலையில் அசத்தல் சலுகை அறிவித்த ஏர்டெல்
Published on

ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் துவங்கிவிட்டது. நாடு முழுக்க கிரிக்கெட் ஆர்வம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் பயனர் தேவைகளை கருத்தில் கொண்டு இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிரீபெயிட் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.

புதிய சலுகைகள் விலை ரூ. 99 மற்றும் ரூ. 49 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஏர்டெல் ரூ. 99 சலுகையில் இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எவ்வித டேட்டா கட்டுப்பாடுகளும் இன்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும். ரூ. 49 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

இரு சலுகைகளிலும் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. ஏர்டெல் ரூ. 49 சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும்.

மொபைல் டேட்டா சலுகைகள் மட்டுமின்றி, ஏர்டெல் டி.டி.ஹெச். ஸ்டார் நெட்வொர்க் உடன் கூட்டணி அமைத்து கிரிக்கெட் பயனர்களுக்காக பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் எளிதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவு சேனல்களை தேர்வு செய்து கொள்ள முடியும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com