search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் விவோ?
    X

    கோப்புப் படம்

    உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் விவோ?

    • விவோ நிறுவனம் விவோ எக்ஸ் ஃபோல்டு 2 மாடலை அறிமுகம் செய்தது.
    • ரோலபில் ஸ்மார்ட்போன் பிரிவில் விவோ களமிறங்குவதாக தகவல்.

    விவோ நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவோ எக்ஸ் ஃபோல்டு மாடலை அறிமுகம் செய்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கியது. இதை தொடர்ந்து விவோ நிறுவனம் விவோ எக்ஸ் ஃபோல்டு 2 மாடலை அறிமுகம் செய்தது. இதில் மேம்பட்ட கேமரா மற்றும் புதிய பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து விவோ நிறுவனம் ரோலபில் ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விவோ மற்றும் டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் விவோ நிறுவனத்தின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    சாம்சங் நிறுவனமும் ரோலபில் போனினை உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில், விவோ மற்றும் டிரான்சிஷன் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோலபில் போனில் உள்ள ஸ்கிரீன் ஒருபுறமாக நீண்டு மீண்டும் சுருண்டு கொள்ளும் என்று தெரிகிறது.

    ஐடெல், டெக்னோ மற்றும் இன்ஃபினிக்ஸ் போன்ற பிராண்டுகளை வைத்திருக்கும் டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபேண்டம் அல்டிமேட் ப்ரோடோடைப் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த மாடல் 6.55 இன்ச் டிஸ்ப்ளேவில் இருந்து 7.11 இன்ச் வரை நீண்டது. இதன் டிஸ்ப்ளே 1596x2296 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×