என் மலர்
தொழில்நுட்பம்
- பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.
- பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் 8 மாடலில் 6.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளே, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.
பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 8 மாடலில் மெட்டல் ஃபினிஷ் மற்றும் பாலிஷ்டு கிளாஸ் பேக் உள்ளது. இரு மாடல்களிலும் டென்சார் G3 பிராசஸர், டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். உள்ளது.
இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா, பிக்சல் 8 மாடலில் 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 48MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் 4575 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்திய சந்தையில் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசெல் மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடல் அப்சிடியன் மற்றும் பே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ மாடலின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- கேலக்ஸி S23 FE மாடல் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனினை ஒருவழியாக அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1 வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S23 FE அம்சங்கள்:
6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ 730 GPU
ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 2200 பிராசஸர்
சாம்சங் எக்ஸ்-க்லிப்ஸ் 920 GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜிபி., 256 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
12MP அல்ட்ரா வைடு சென்சார்
8MP டெலிபோட்டோ கேமரா, OIS
10MP செல்ஃபி கேமரா
வாட்டர் ரெசிஸ்டண்ட் IP68
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3
4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் மின்ட், கிரீம், கிராஃபைட் மற்றும் பர்பில நிறங்களில் கிடைக்கிறது.
- பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
- கூகுள் பிக்சல் 7a மாடல் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி விரைவில் துவங்க இருக்கும் பிக் பில்லியன் டே சேல்-இல் பிக்சல் 7a புதிய நிற வேரியண்ட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது கூகுள் பிக்சல் 7a மாடல் சீ, சார்கோல் மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இவற்றுடன் கோரல் நிற வேரியண்ட் விரைவில் இணைய இருக்கிறது. கோரல் நிற வேரியண்ட் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிற வேரியண்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 7a மாடல் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்-இல் இதன் விலை சற்று குறைக்கப்படவோ அல்லது அதிக சலுகைகள் வழங்கப்படவோ வாய்ப்புகள் உண்டு.
அக்டோபர் 5-ம் தேதி கூகுள் பிக்சல் மாடல்களுக்கான சலுகை விவரங்களை ப்ளிப்கார்ட் அறிவிக்க இருக்கிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 4-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு அக்டோபர் 4-ம் தேதி துவங்குகிறது.
- அமேசான் தற்போது சலுகை விவரங்களை டீசர் வடிவில் வெளியிட்டு வருகிறது.
- ஐபோன் 13 மாடல் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 விலை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையில் அதிரடியாக குறைக்கப்படுகிறது. அமேசான் சிறப்பு விற்பனை அக்டோபர் 7-ம் தேதி பிரைம் சந்தா வைத்திருப்போருக்கும், அக்டோபர் 8-ம் தேதி அனைவருக்கும் துவங்குகிறது. இது அமேசான் தளத்தில் நடைபெறும் மிகப்பெரும் விற்பனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகைகள் வழங்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட இருக்கும் சலுகை விவரங்களை அமேசான் தற்போது டீசர் வடிவில் வெளியிட்டு வருகிறது. அதில் ஐபோன் 13 மாடலுக்கு வழங்கப்படும் சலுகை பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

அமேசான் வெளியிட்டு இருக்கும் டீசரின் படி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்-இன் போது ஐபோன் 13 மாடல் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 சரியான விலை பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், இதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக வலைப்பக்கத்தில் ஐபோன் 13 விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஐபோன் 13 தற்போது ரூ. 59 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 சீரிஸ் அறிமுகத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட விலை குறைப்பில், ஐபோன் 13 விலை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைப்பு தவிர, அமேசான் தளத்தில் சிறப்பு தள்ளுபடி, வங்கி சார்ந்த தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இவை அனைத்தையும் சேர்க்கும் போது ஐபோன் 13 விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும். இதில் ஐபோன் 13 மாடலுக்கு வழங்கப்படும் சலுகை விவரங்கள், வங்கி தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் பற்றிய தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
- ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.
- ஐபோன் 15 ப்ரோ மாடல்களுடன் யு.எஸ்.பி. டைப் 2 கேபிள் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 15 சீரிசில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கி இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி. டைப் சி கேபிள் மூலம் ஐபோன் 15 சீரிசை சார்ஜ் செய்யும் போது, சிக்கல் ஏற்படும் என்று ஆப்பிள் விற்பனையாளர் தெரிவித்து இருக்கிறார்.
ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. இவை அனைத்திலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி. டைப் சி கேபிள் மூலம் சார்ஜ் செய்தால், ஐபோன் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக சீனாவை சேர்ந்த விற்பனையாளர் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலில் உண்மையில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ஆப்பிள் நிறுவனம் தனது யு.எஸ்.பி. டைப் சி கேபிள்களின் விற்பனையை அதிகப்படுத்த நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் புதிய ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி ஸ்டாண்டர்டு கேபிள் மூலம் சார்ஜ் செய்யலாம் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 15 சீரிசில் உள்ள யு.எஸ்.பி. டைப் சி போர்ட், லைட்னிங் போர்ட்-ஐ விட 15 மடங்கு அதிவேக திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களை வாங்குவோருக்கு யு.எஸ்.பி. டைப் 2 கேபிள் வழங்கப்படுகிறது. இதைவிட அதிவேக அனுபவம் பெற நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் யு.எஸ்.பி. டைப் 3 கேபிளை வாங்கிட முடியும்.
- சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- புதிய அறிவிப்பு மூலம் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரத்து 800 வரை குறைந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை திடீரென குறைத்து இருக்கிறது. விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி M13, கேலக்ஸி M04, கேலக்ஸி F13 மற்றும் கேலக்ஸி F04 என நான்கு மாடல்கள் பலன் பெற்றுள்ளன. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இவற்றின் விலை மேலும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி M04 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி.) ரூ. 6 ஆயிரத்து 499 (பழைய விலையை விட ரூ. 2 ஆயிரம் குறைவு)
சாம்சங் கேலக்ஸி M04 (4ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) ரூ. 7 ஆயிரத்து 499 (பழைய விலையை விட ரூ. 2 ஆயிரம் குறைவு)
சாம்சங் கேலக்ஸி M13 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி.) ரூ. 9 ஆயிரத்து 199 (பழைய விலையை விட ரூ. 2 ஆயிரத்து 800 குறைவு)
சாம்சங் கேலக்ஸி M13 (6ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) ரூ. 11 ஆயிரத்து 199 (பழைய விலையை விட ரூ. 1800 குறைவு)
சாம்சங் கேலக்ஸி F04 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி.) ரூ. 6 ஆயிரத்து 499 (பழைய விலையை விட ஆயிரம் ரூபாய் குறைவு)
சாம்சங் கேலக்ஸி F13 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி.) ரூ. 9 ஆயிரத்து 199 (பழைய விலையை விட ரூ. 1,800 குறைவு)
சாம்சங் கேலக்ஸி F13 (4ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) ரூ. 10 ஆயிரத்து 199 (பழைய விலையை விட ரூ. 2 ஆயிரத்து 800 குறைவு)

சாம்சங் கேலக்ஸி M13 மற்றும் F13 அம்சங்கள்:
இரு மாடல்களிலும் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 1080x2408 பிக்சல் ரெசல்யூஷன், வாட்டர் டிராப் நாட்ச், எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M04 மற்றும் கேலக்ஸி F04 அம்சங்கள்:
இரு மாடல்களிலும் 6.5 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி மாடல் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
- புதிய லாவா ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி மாடலில் 6.78 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
ஏ.ஐ. லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி மாடல் ஸ்டேரி நைட் மற்றும் ரேடியண்ட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 3-ம் தேதி துவங்குகிறது.
- வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக கேலக்ஸி S23 FE இருக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட்போனாக இருக்கும் நிலையில், இதன் வெளியீடு சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய கேலக்ஸி S23 FE மாடலின் வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனிற்கான டீசரை சாம்சங் இந்தியா வெளியிட்டு இருந்தது. டீசரில் அக்டோபர் வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், சரியான வெளியீட்டு தேதி தொடர்ந்து ரகசியமாக உள்ளது. அந்த வகையில் தான் சாம்சங் அர்ஜென்டினா வலைதளத்தில் கேலக்ஸி S23 FE வெளியீட்டு தேதி லீக் ஆகி உள்ளது.
அதன்படி கேலக்ஸி S23 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் FE, கேலக்ஸி டேப் S9 FE போன்ற சாதனங்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும்.
புதிய கேலக்ஸி சாதனங்கள் வெளியீடு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது லீக் ஆகி இருக்கும் தேதி சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் என்றே தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, 10MP செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- அமேசான் கிரேட் இந்தியன் சிறப்பு விற்பனையில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அமேசான் வலைதளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அடுத்த சில வாரங்களில் துவங்க இருக்கிறது. இதே போன்ற சிறப்பு விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்திலும் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், அமேசான் தளத்தில் வழங்கப்பட இருக்கும் சிறப்பு சலுகைகள் பற்றிய தகவல்கள் டீசர்களாக வெளியிடப்பட்டு உள்ளன.
அந்த வகையில், தற்போதைய அமேசான் சிறப்பு விற்பனையில் மொபைல் போன் மாடல்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம், அலெக்சா, ஃபயர் டி.வி. மற்றும் கின்டில் போன்ற சாதனங்களுக்கு 55 சதவீதம், வீட்டு உபயோக, சமயலறை சாதனங்களுக்கு 70 சதவீதம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதே போன்று லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டி.வி., மின்சாதனங்களுக்கு 75 சதவீதமும், புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள் மற்றும் இதர பொருட்களுக்கு 80 சதவீதம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதுதவிர கிராண்ட் ஒபனிங் டீல், கிக்ஸ்டார்டர் டீல், பிளாக்பஸ்டர் டீல், 8 மணி டீல், ரூ. 999-க்கு குறைந்த விலை டீல், ரொக்க பரிசு, கூப்பன் தள்ளுபடி, கேஷ்பேக் வழங்குவதோடு, பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன.
இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மாத தவணை சலுகை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- விவோ T2 ப்ரோ ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- விவோ T2 ப்ரோ மாடல் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய T சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ T2 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் FHD+ 120Hz 3D Curved AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP இரண்டாவது கேமரா, ரிங் எல்.இ.டி., 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஏ.ஜி. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் விவோ T2 ப்ரோ 5ஜி மாடல் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

விவோ T2 ப்ரோ 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர்
மாலி G610 MC4 GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, OIS
2MP டெப்த் கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி
4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ T2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் நியூ மூன் பிளாக் மற்றும் டியூன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோ வலைதளங்களில் செப்டம்பர் 29-ம் தேதி துவங்குகிறது.
- மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 40 நியோ மாடலில் Curved ஸ்கிரீன் உள்ளது.
- புதிய மோட்டோ எட்ஜ் ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 6.55 இன்ச் 144Hz 10-பிட் pOLED Curved ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 7030 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள்:
6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7030 பிராசஸர்
மாலி G610 MC3 GPU
8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ மற்றும் டெப்த் ஆப்ஷன்கள்
32MP செல்ஃபி கேமரா
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
68 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் சூதிங் சீ மற்றும் கனீல் பே மற்றும் வீகன் லெதர் பிளாக் மற்றும் பிளாக் பியூட்டி மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இவை முறையே ரூ. 20 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
- ஜியோஃபைபர் ரூ. 999 சலுகையில் 150Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.
- ஜியோஃபைபர் மேக்ஸ் சலுகையில் ஜியோசினிமா பிரீமியம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஜியோ ஏர்ஃபைபர் சேவை 1Gbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி வருகிறது. இணைய வேகம் மட்டுமின்றி ஜியோஃபைபர் பலன்களும் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜியோஃபைபர் ரூ. 1199 விலை கொண்ட சலுகையில் தற்போது ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
புதிய மாற்றத்தின் படி ஜியோஃபைபர் ரூ. 1199 சலுகையில் நெட்ஃப்ளிக்ஸ், ஜியோசினிமா பிரீமியம் மற்றும் அமேசான் பிரைம் மற்றும் 14 இதர ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஜியோஃபைபர் ரூ. 999 சலுகையில் 150Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் சந்தா வழங்கப்படவில்லை.

ஜியோஃபைபர் மேக்ஸ் சலுகையில் ஜியோசினிமா பிரீமியம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளின் விலை ரூ. 1499, ரூ. 2 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் முறையே 300Mbps, 500Mbps மற்றும் 1000Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.
முன்னதாக ஜியோ நிறுவனம் தனது ஏர்ஃபைபர் இணைய சேவைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 599 ஆகும்.






