என் மலர்
தொழில்நுட்பம்
- புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது. நோக்கியா 105 கிளாசிக் என்று அழைக்கப்படும் புதிய ஃபீச்சர் போன் மாடலில் இன்-பில்ட் யு.பி.ஐ. செயலி உள்ளது. இத்துடன் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் எப்.எம். ரேடியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த மொபைலில் உள்ள பட்டன்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது. இவற்றை கொண்டு இருள் சூழ்ந்த பகுதிகளிலும் மொபைலை எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும். இது எர்கோனமிக் டிசைன் மற்றும் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது.

புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் சார்கோல் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் போன் சிங்கில் சிம், டூயல் சிம் மற்றும் சார்ஜர் உடன் ஒரு வேரியண்ட் மற்றும் சார்ஜர் இன்றி மற்றொரு வேரியண்ட் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 999 ஆகும்.
இந்த மொபைல் போன் நோக்கியா வலைதளம், ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.
- ஆடியோ தரத்தை மேம்படுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் சீரிஸ் மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏர்பாட்ஸ் டிசைன், கேஸ் உள்ளிட்டவைகளை அப்டேட் செய்து ஆடியோ தரத்தை மேம்படுத்த திட்டமிடுவதாக ஆப்பிள் வல்லுனர் மார்க் குர்மேன் தெரிவித்துள்ளார்.
இத்துடன் 2024 ஆண்டு ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுவதாகவும், 2025 ஆண்டு ஏர்பாட்ஸ் ப்ரோ வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புதிய ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல்கள் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் மேம்பட்ட ஆடியோ கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

புதிய ஏர்பாட்ஸ் அறிமுகமாகும் போது, தற்போது விற்பனை செய்யப்படும் இரண்டு மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டு விடும் என்று தெரிகிறது. இதற்கு மாற்றாக இரண்டு நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல்கள் வெவ்வேறு விலை பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடலில் யு.எஸ்.பி. சி வகை சார்ஜிங் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 2025 ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரிடைசன் செய்யப்பட்டு அதிவேக சிப்செட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலா கான்செப்ட் போன் அறிமுகம்.
- மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம்.
மடிக்கக்கூடிய சாதனங்களின் விற்பனை மெல்ல வளர்ந்து வரும் நிலையில், மோட்டோரோலா இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. மோட்டோரோலா அறிமுகம் செய்திருக்கும் புதிய கான்செப்ட் போன் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலாவின் ஃபிளெக்சிபில் pOLED டிஸ்ப்ளே கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போனில் FHD + pOLED ஸ்கிரீன் உள்ளது. இதனை பின்புறமாக மடித்து மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம். இந்த அதிநவீன அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட் பல்வேறு நிலைகளில் வைத்துக் கொள்ளலாம். அடாப்டிவ் டிஸ்ப்ளேவினை வழக்கமான ஆண்ட்ராய்டு போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது மணிக்கட்டில் அணிந்த படியும் பயன்படுத்தலாம்.

மடிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் அளவில் முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. மடிக்கப்பட்ட நிலையில், இது 4.6 இன்ச் அளவில் மாறிவிடும். மடிக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை மோட்டோரோலா ரேசர் பிளஸ் மாடலின் கவர் ஸ்கிரீன் போன்று பயன்படுத்தலாம்.
மோட்டோரோலாவின் புதிய வகை கான்செப்ட் போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக இந்த கான்செப்ட் போனிற்கான முன்னோட்டம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.
மோட்டோரோலா மட்டுமின்றி விவோ, டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் மற்றும் டி.சி.எல். போன்ற நிறுவனங்களும் புதிய வகை ரோலபில் டிஸ்ப்ளேவினை உருவாக்கி வருகின்றன. இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- எக்ஸ் வலைதளத்தில் அழைப்புகளை மேற்கொள்ளும் அம்சம் பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
- எக்ஸ் வலைதளத்தை எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்ற எலான் மஸ்க் விருப்பம்.
எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவலை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. வீடியோ கால் அம்சம் பற்றிய தகவலை லிண்டா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிறுவன வலைதளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் ஆப்ஷனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் யார் யார் தனக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பதை தேர்வு செய்வதற்கான வசதியும் பயனருக்கு வழங்கப்படுகிறது. இதில் அட்ரஸ் புக்கில் இருப்பவர்கள், யார்யார் ஃபாளோ செய்கிறார்கள் மற்றும் அனைவரும் என மூன்று நிலைகளில் ஒரு ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
ஆடியோ, வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?
அழைப்புகளுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய எக்ஸ் செயலியின் செட்டிங்ஸ் -- பிரைவசி & சேஃப்டி -- டைரக்ட் மெசேஜஸ் -- எனேபில் ஆடியோ & வீடியோ காலிங் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு டைரக்ட் மெசேஜ் ஆப்ஷனில் அழைப்புகளை மேற்கொள்வதற்கான ஐகான் தெரியும். அதனை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ளலாம்.
- ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு.
- ஐகூ 12 ஸ்மார்ட்போனில் அதிநவீன பிராசஸர் வழங்கப்படுகிறது.
ஐகூ நிறுவனத்தின் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போன் நவம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது என ஐகூ பிராண்டு தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி, சார்ஜிங் வேகம் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. ஐகூ 12 சீன வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 12 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் E7 AMOLED ஸ்கிரீன், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP 3x டெலிஃபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- 2021 ஆண்டு M1 சிப்செட் கொண்ட 24-இன்ச் ஐமேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய ஐமேக் மாடலில் அதிநவீன M2 சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் "ஸ்கேரி ஃபாஸ்ட்" என்ற பெயரில் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி அக்டோபர் 31-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஆப்பிள் ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக 24 இன்ச் அளவில் ஐமேக் மாடலையும், மேம்பட்ட மேக்புக் ப்ரோ சீரிஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு M1 சிப்செட் கொண்ட 24-இன்ச் ஐமேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த சிப்செட் தற்போது பழையதாகி விட்டதால், புதிய ஐமேக் மாடலில் அதிநவீன M2 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவன வழக்கப்படி இந்த நிகழ்வும் ஆப்பிள் வலைதளம், ஆப்பிள் டிவி செயலி உள்ளிட்டவைகளில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
- கூகுள் நிறுவனம் கியூட் ஆன விளையாட்டை தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
- பயனர்கள் கூகுளில் தீபாவளி என்று டைப் செய்து தேட வேண்டும்.
இந்தியாவில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ம் கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகை அல்லது விசேஷ நாட்களை கொண்டாடும் வகையில், கூகுள் தனது வலைதளத்தில் டூடுல்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த டூடுல்கள் கார்டூன் படங்களாகவும், அனிமேஷன் வீடியோக்களாகவும் இடம்பெற்று இருக்கும்.
அந்த வகையில் தீபாவளியை கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம் கியூட் ஆன விளையாட்டை தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி பயனர்கள் கூகுளில் தீபாவளி என்று டைப் செய்து தேடினால், தீபாவளி என்ற வார்த்தையின் அருகில் நட்சத்திரங்களால் சூழப்பட்ட விளக்கு காணப்படுகிறது. பயனர்கள் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
இனி க்ளிக் செய்த விளக்கு மிளிர்ந்து, அந்த வலைப்பக்கம் முழுக்க இன்னும் அதிக விளக்குகள் தோன்றும். இதோடு வலைப்பக்கம் இருளில் இருப்பது போன்று காட்சியளிக்கும், இதைத் தொடர்ந்து பயனர்கள் மவுஸ் பாயின்டரை அசைத்தால், விளக்கும் அசையும். அதன்படி பயனர்கள் வலைப்பக்கத்தில் உள்ள விளக்குகள் அனைத்தையும் பற்ற வைக்கலாம்.
இவ்வாறு செய்ததும், வலைப்பக்கம் முழுக்க மெல்ல வெளிச்சமுற்று சாதாரண வலைப்பக்கமாக மீண்டும் மாறிவிடும். இதே எஃபெக்ட் கணினி மட்டுமின்றி கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களிலும் இயங்குகிறது.
- புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது.
- இந்த சலுகையில் அன்லிமிடெட் காலிங், 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோ தொடர்ச்சியாக வருடாந்திர ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து வருகிறது. இவற்றுடன் ஒ.டி.டி. சந்தாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் வழங்கப்படுகிறது.
ஜியோவின் புதிய ரூ. 3,227 பிரீபெயிட் சலுகையில் அமேசான் பிரைம் மொபைல் எடிஷன் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் காலிங் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை மை ஜியோ செயலி அல்லது ஜியோ வலைதளத்தில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.

சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையின் முன்னணி இணைய சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. சந்தையில் ஜியோ நிறுவனம் மட்டும் 52 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
ஜியோ சேவையை 442 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களும், 9.4 மில்லியன் வயர்டு பிராட்பேண்ட் பயனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
- புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Y100 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Y200 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் விவோ Y200 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்ட் ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ Y200 அம்சங்கள்:
6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13
64MP பிரைமரி கேமரா, OIS
2MP போர்டிரெயிட் கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ Y200 ஸ்மார்ட்போன் ஜங்கில் கிரீன் மற்றும் டெசர்ட் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- ஸ்டாண்டர்டு பெயரில் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது.
- சந்தாவில் மட்டும் விளம்பரங்கள் இன்றி எக்ஸ் தளத்தை பயன்படுத்தலாம்.
எக்ஸ் வலைதளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வரவிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த சந்தா முறைகள் விரைவில் அமலுக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்து இருக்கும் நிலையில், இவை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
இரண்டு புதிய சந்தா முறைகளில் ஒன்று குறைந்த விலையிலும், மற்றொன்று அதிக விலையிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. இவற்றின் குறைந்த விலை திட்டத்தில் விளம்பரங்கள் எதுவும் குறைக்கப்படாது என்றும், விலை உயர்ந்த சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி, எக்ஸ் தளத்தில் சந்தா முறைகளை பேசிக், ஸ்டாண்டர்டு மற்றும் பிளஸ் என மூன்று நிலைகளில் பிரிப்பது பற்றி எக்ஸ் தலைமை செயல் அதிகாரி லிண்டா ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்படி தற்போது எலான் மஸ்க் தெரிவித்து இருக்கும் இரண்டு சந்தா முறைகள் பேசிக் மற்றும் பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் சந்தா முறை ஸ்டாண்டர்டு பெயரில் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய சந்தா முறைகளின் படி பிளஸ் சந்தாவில் மட்டும் விளம்பரங்கள் இன்றி எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
- வங்கி சேவையை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- அதிகபட்சம் 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ இந்திய சந்தையில் தனது விவோ X90 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை கடந்த ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 85 ஆயிரம் என்று நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பின் படி விவோ X90 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. விலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவையை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக் அல்லது அதிகபட்சம் 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.

கேஷிஃபை சேவையை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. விவோ வி ஷீல்டு பாதுகாப்பு திட்டங்களை பயன்படுத்தும் போது 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பயனர்கள் விவோ X90 ப்ரோ மாடலை ப்ளிப்கார்ட், விவோ அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் புதிய விலையில் வாங்கிட முடியும்.

விவோ X90 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD+ BOE Q9 OLED HDR10+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் டிமென்சிட்டி 9200 பிராசஸர்
இம்மோர்டலிஸ் G715 GPU
12 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS
12MP அல்ட்ரா வைடு கேமரா
50MP 50mm போர்டிரெயிட் கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யு.எஸ்.பி. டைப் சி
4870 எம்.ஏ.ஹெச். பேட்டரி
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- பயனர்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை ஒரே சாதனத்தில் பயன்படுத்தலாம்.
- தனித்தனி சாதனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை போக்கிவிடும்.
வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும் என்று மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் வழங்கப்படும் போது, பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை பயன்படுத்துவதற்கு தனித்தனி சாதனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை போக்கிவிடும்.
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்ட அக்கவுண்ட் ஸ்விட்சிங் அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை நிர்வகிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை ஒரே சாதனத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.

தற்போதைய அறிவிப்பின் படி டூயல் சிம் கொண்ட போன்களில் பயனர்கள் இந்த அம்சத்தினை பயன்படுத்த முடியும். இரண்டாவது அக்கவுண்டை பயன்படுத்துவதற்காக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை வாட்ஸ்அப் மற்றொரு சாதனம் அல்லது மாற்று சிம் கார்டில் அனுப்புகிறது.
இதனை பயன்படுத்தி அக்கவுண்ட்-ஐ செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு, செயலி இரண்டு அக்கவுண்ட்களிலும் இயங்கும். முன்னதாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே மொபைலில் இரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ஆட் அக்கவுண்ட் (Add Account) ஆப்ஷனை தொடர்ந்து பிரைவசி மற்றும் நோட்டிஃபிகேஷன் செட்டிங்களை இரண்டு அக்கவுண்ட்களுக்கும் தனித்தனியே செட்டப் செய்து கொள்ள வேண்டும்.






